புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 

அதிக செலவுமிக்க நகரம்

அதிக செலவுமிக்க நகரம்

உலகத்திலேயே அதிக செலவுமிக்க நகரமாக டோக்கியோ இருந்தது. இப்போது அந்த நகரை பின்னுக்கு தள்ளிவிட்டு லுவாண்டா நகரம் முன்னிலை பெற்றுள்ளது.

உலகிலேயே எந்த நகரத்தில் விலைவாசி அதிகமாக இருக்கும் என்பதை கண்டறிவதற்காக ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில்தான் லுவாண்டா நகரம் முதலிடத்தை பிடித்தது.

ஒரு நகரத்துக்கு செல்லும் வெளிநாட்டினருக்கு வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்துச் செலவு போன்றவை எந்த அளவு இருக்கிறது என்பதை அறிவதற்காக உலகின் 214 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

மெர்சர் குழுவின் இந்த ஆய்வு, கம்பெனிகள் தங்குன் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய விலைவாசிப்படியை நிர்ணயிக்க உதவுகிறது.

இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் மிக அதிகமாக செலவு வைக்கும் நகரமாக லுவாண்டா உள்ளது. இது தெற்கு ஆபிரிக்காவில் உள்ள அங்கோலா நாட்டின் தலைநகர் ஆகும்.

இந்த நாடு எண்ணெய் வளம் உள்ளது. ஆகும். வெளிநாட்ட தொழிலாளர்களையும் ஊழியர்களையும் காந்தமாக இந்த நாடு கவர்ந்து இழுக்கிறது. ஜப்பானின் டோக்கியோ தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

பாகிஸ்தானின் கராச்சியில் தான் விலைவாசி மிக மலிவாக உள்ளது. இந்த பட்டியலில் நியூயோர்க் 32-வது இடத்திலும், பாரிஸ் 17வது இடத்திலும், லண்டன் 18வது இடத்திலும் உள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.