புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 

கை வைத்தியம்

* குப்பைமேனி

குப்பை கூளங்களிலும் சாலை, தோட்டங்களின் ஓரங்களிலும் வளரும் ஒரு மூலிகைத் தாவரம் குப்பை மேனி. கும்பைமேனி இலைச் சாற்றை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர சுவாசக் கோளாறுகள் குணமாகும். இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்து சிரங்குகள் மீது தடவி வர விரைவில் சிரங்கு அகன்றுவிடும். தேள், பூரான், வண்டுக்கடி வீக்கத்தின் மீது இலையை அரைத்துப் பூசிவர விஷம் முறியும்.

இலையை கஷாயம் செய்து குடித்தால் மலச் சிக்கல் அகலும். வேருடன் குப்பை மேனிச் செடியைப் பிடிங்கி நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி சுக்கு, வெள்ளைப் பூண்டு, சீரகம் சேர்த்துக் கஷாயம் செய்து பருகிவர குடலிலுள்ள தீமை தரும் பூச்சிகள் அழியும். குப்பை மேனி இலையுடன் மஞ்சள், வெள்ளைப் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து முகப்பரு, கரும் புள்ளிகள் மீது தடவி வர சருமம் முன்பு இருந்த இயல்பானதாக இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

* வைட்டமின் டி சத்து

வைட்டமின் டி குறைந்து விட்டால் நரம்புகளில் பாதிப்புகள், முதுகெலும்பு கோளாறு, பற்கள் கோளாறு முதலியவை உண்டாகும்.

பெரியவர்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுதல், சர்க்கரையானது அடிக்கடி சிறுநீர் மூலம் வெளியேறுதல், முதுமைத் தன்மை விரைவில் ஏற்படுதல் போன்றவை ஏற்படும்.

இந்தச் சத்து குறைந்தால், ‘ரிக்கட்ஸ்’ என்ற நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.

பொதுவாக மைட்டமின் ‘டி3’ தான் குடலிலிருந்து கல்சியத்தை உறிஞ்ச பயன்படுகிறது. இதனால் ‘பாராதைராய்டு’ சுரப்பிகள், ‘பாராத்தார் மோன்’ அதிகமாக சுரந்து எலும்பிலுள்ள கல்சியத்தைக் கரைத்து இரத்தத்தில் அதன் அளவைக் குறைக்கிறது. இதனால் எலும்புகள் பாதிக்கப்பட்டு வளர்ச்சி குன்றி வலுவிழந்து விடுகின்றன. இதற்கு ரிக்கட்ஸ் என்று பெயர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.