புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 

கிளவுட் கொம்ப்யூட்டிங் யேயு

கிளவுட் கொம்ப்யூட்டிங் யேயு

Cloud Computing

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வசதி கள் தலைமுறைக்கு தலைமுறை மிகப் பிரமாண்டமான மாற்றங்களை ஏற் படுத்திக் கொண்டு வருகின்றது. அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களினூடாக இந்த பிரமாண்ட மாற்றங்களை நாம் அறியக் கூடியதாக உள்ளன.

இதனடிப்படையில் பார்க் கும்போது அண்மையில் (கிளவுட் கொம்ப் யூட்டிங்) மேகக் கணினியம் எனும் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

தற் பொழுது கிளவுட் கொம்ப்யூட்டிங், கிளவுட் பிரிண்டிங் என இதனுடன் தொடர்புடைய புதிய தொழிநுட்பங்கள் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கூக்குள் குரோம் ஒபரேட்டிங் சிஸ்டமின் அடிப்படைத் தொழிநுட்பமே இம்மேகக் கணினி யாகும். செலவைக் குறைத்து பல்வேறு வகை யிலான வசதிகளை எங்கும், எப்போதும் வழங் கக் கூடிய இக் கிளவுட் கொம்ப்யூட்டிங் முறை யானது பல நாடுகளில் தற்பொழுது நடை முறைப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.

இணை யத்தின் வழியாக கணினியுடன் தொடர்புடைய பணிகளுக்கு தேவையான வன்பொருள் மற்றும், மென்பொருள் வசதிகளை தருவது கிளவுட் கொம்ப்யூட்டிங் முறை என சுருக்கமாகக் கூறலாம்.

அதாவது கணினிக்கோ, மென்பொரு ளுக்கோ பேகும் செலவுகளைக் குறைத்து மென்பொருள் பாவனைக்கான செலவு களை மட்டுமே ஏற்படுத்தும் ஒரு தொழி நுட்பமாக இந்த கிளவுட் கொம்ப்யூட்டிங் முறை காணப்படுகின்றது.

இணைய வைய வெளியில் மேகமே பிரதானமாகக் காணப்படுவதால் இதற்கு கிளவுட் கொம்ப்யூட்டிங் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. SAAS என்று சுருக் கமாக அழைக்கப்படும் SOFTWARE AS A SERVICE என்ற மென்பொருள் சேவையே இதன் அடிப்படையாகக் காணப்படுகின்றது.

1999 இல் உருவாக்க ப்பட்ட Sales force. com எனப்படும் நிறுவனம் தற்பொழுது செல்வம் கொழிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. காரணம் இந்த SAAS ஐ அடிப்படையாகக் கொண்டே மேகக் கணினியம் உருவாக்கிக் கொண்டு வருகிறது.

Windows போன்ற ஒபரேட்டிங் சிஸ்டம் உள்ள கணினிகளில், ஒரு மென்பொருளை இன்ஸ்டோல் பண்ண வேண்டும் எனில் நாம் பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டி ஏற்படும். முதலில் அந்த குறித்த மென்பொருளுக்கான வன்பொருள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

பின்பு மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். அனுமதிப் பத்திரத்தை செயல்முறைப்படுத்த வேண்டும். அது மாத்திரமன்றி நாம் வாங்கிய மென் பொருளானது ஒழுங்கான பதிப்புரிமை உடை யதா, இல்லையா என கவலைப்பட வேண்டும்.

இவற்றை எல்லாம் சரியாக செய்த பின் ஆறு மாதங்களோ அல்லது ஒரு வருடமோ கழித்து காலாவதியாகும். இது போன்ற பல்வேறு வகையான பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி ஏற்படலாம்.

ஆனால் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் இந்த கிளவுட் கொம்ப்யூட்டிங் முற்றுப் புள்ளி வைத்திருக்கி ன்றது. ஏற்கனவே கூறியது போன்று கிளவுட் கொம்ப்யூட்டிங் என்பது இணைத்தையே ஆதார மாகக் கொண்டு செயற்படும் ஒரு முறைமை ஆகும். ஒரு பெரிய சேவரில் உங்களுக்கு தேவையான மென்பொருட்கள் எல்லாவற்றையும் வசதியாக இன்ஸ்டோல் செய்து வைக்கப்பட்டி ருக்கும்.

உங்களிடம் இருக்க வேண்டியது நல்ல வேகமான அல்லது அதி வேகமான இணைய இணைப்பு மட்டுமே. இதனூடாக தேவையான நேரத்தில் உங்கள் விருப்பம் போல் மென்பொருட்களை பாவித்துக் கொள்ளலாம். உங்கள் பாவணைக்கான பணத்தை மட்டும் அந்த SAAS Provider இடம் செலுத்தினால் போதுமானது.

இப்படி உங்களுக்கு தேவையான எல்லா விதமான மென்பொருள்களும், அப்ளிகேசன்களும் மேகங்கள் போன்ற வெப்சேர்வர்களில் கிடைப்தனால்தான் இந்த கிளவுட் கொம்ப்யூட்டிங் முறையே நமக்குத் தெரியாமலே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக E-Mail Service Providers, G-Mail களை எடுத்துக் கொண்டால் நாம் அனுப்பும், பெறும் ஈ-மெயில்கள் எல்லாம் கூகுள் சேவரிலேயே சேமிக்கப்படுகிறது.

நாம் இணையத்தில் இணைந்தவுடன் அந்த டேட்டாக்களை பாவிப்பவர்களாக மாறுகின்றோம். விளங்கச் சொல்லப் போனால் இந்த ஈ-மெயில் வசதிகள் கூட கிளவுட் கொம்ப்யூட்டிங்கின் ஓர் அம்சமாகவே காணப்படுகின்றது. இந்த முறைமை மூலம் அதிக நன்மைகளை அடையப்போவது தனிநபர்களைக் காட்டிலும் நிறுவனங்களே ஆகும். காரணம் இந்த தொழிநுட்பம் வன்பொருள் மென் பொருள் செலவுகளை பெருமளவில் குறைத்து விடும்.

உங்களுக்கு தேவையானது ஒரு மொனிட்டரும், குறித்த ஒபரேட்டிங் சிஸ்டமை இயங்கச் செய்யத் தேவையான புரொ சொஸ்ஸர், ஹார்ட்டி ஸ்க்குமே ஆகும். மற்ற எல்லாவற்றையும் SAAS வழங்குனர்கள் வழங்கு வார்கள்.

SAAS சேவைகளை பாவணை அடிப்ப டையிலோ, சந்தா அடிப்படையி லேயே பெற்றுக்கொள்ளலாம். இதன் பாதுகாப்பு, இரகசியம் தொடர்பான கேள்விகளுக்கு Authentication என்ற முறையே பதிலாக உள்ளது.

அதாவது Username, Password முறை குறித்த SAAS நிறுவன சேவையில் உங்களது டேட்டா மற்றும் இரகசியத்திற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அந்த நிறுவனத்தின் சேவையை துண்டிக்கவும், அது தொடர்பான நிதி இழப்பீடுகளை அந்த நிறுவனத்திலிருந்து பெற்றுக் கொள்ளவும் முடியும். கொம்பியூட்டர் கிராஸ், டவுண் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அது சேவையை தருபவர்களின் முழுப் பொறுப்பாகக் காணப்படும். வாடிக்கை யாளர்களுக்கு சேர்வர், கணினி மென்பொருள் போன்றவற்றிற்கான முதலீட்டுச் செலவு இல்லை. தேவையான அளவிற்கு சேவையைக் கேட்டுப் பெறலாம். எவ்வளவு பயன்படுத்துகின்றோமோ அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தி பின்னர் தேவையில்லாவிடின் விட்டு விடவும் வாய்ப்பு உண்டு. இவைகள் இதன் நன்மைகளாகக் காணப்படுகின்றன.

தற்பொழுது இத்தகைய கிளவுட் கொம்ப்யூட்டிங் சேவையை வழங்கும் நிறுவனங்கள் மாதக் கட்டணங்களை பெற்றுக் கொண்டு அப்பருவ காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு தேவையானதை வழங்கிவரும் பழக்க த்தினைக் கொண்டுள்ளன.

இந்த சேவையை வழங்குவதும் ஒரு அப்ளி கேசன் மென் பொருளை பதிந்து அதனைப் பல வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும். எனவே இங்கு குறைவான செலவில் இரு தரப்பினராலும் பயனடைய முடிகின்றது.

வளர்ந்து வரும் வேகமான இணைய வசதியானது இதற்கு ஆதார மாகவும், அடிப்படை இயக்கத்தை தருவதாகவும் அமைகிறது.

இரு தரப்பினரும் எந்த நேரத்திலும் தங்களது ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டுவர முடியும். இதனால் இருவருக்கும் நஷ்டம் ஏற்பட போவதில்லை. பயன்படுத்துபோருக்கென எந்தக் கணனியும் மெனம் பொருளும் தேவையில்லை.

அதனை இயக்கும் அறிவும், தொழிநுட்பமும் தேவையி ல்லை. சிஸ்டம் என்னவாகுமோ என்ற பயமும் தேவையில்லை. எங்கு போனாலும் உறுதியாகவும், நம்பிக்கையாகவும் சேவைகளைப் பயன் படுத்தி தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். சேவை சிறிய அளவில் இயங்கும் அனைத்துப் பிரிவு நிறுவனங்களுக்கும் உகந்ததாகும்.

இந்த வகையில் இதுவரை மேற்கொண்டு வந்த முதலீட்டுச் செலவு, தேய்மானச் செலவு ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுகின்றனர்.

இம்முறைமை சேவையைப் பயன்படுத்தும் ஒரு விற்பனை நிறுவனம் தான் விற்பனை செய்த பொருளுக்கான பற்றுச் சீட்டைக் கூட இந்த சேவை மூலம் தயாரித்து வழங்க முடியும். அதே நேரத்தில் வாடிக் கையாளர் முகவரியை தன் விற்பனைப் பொருள் சேமிப்பு இடங்களிற்கு அனுப்பி குறிப்பிட்ட இடத்தில் விநியோகம் செய்தி டவும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.

மேலும் பொருள்கள் விற்பனையாவதையும், மீண்டும் கொள் முதல் செய்ய வேண்டியதையும் நினைவூ ட்டும் தகவலை இந்த சேவை மூலம் பெற்றிடலாம்.

இன்றைய காலகட்டத்தில் உலகலாவிய ரீதியில் கோடிக்கணக்கான வர்த்தகர்களும், உற்பத்தி யாளர்களும் தங்களின் வருமானத்தில் குறிப்பிட்ட அளவு சதவீதம் வரை தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் முதலீடு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிதியை தொழில் மற்றும், வர்த்தகத்தில் ஈடுபடுத்த Cloud Computing முறையானது உதவுகிறது என்றால் அது மிகையாகாது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் படி 2011ம் ஆண்டில் 40 சதவீத தகவல் தொழில்நுட்ப வேலைகள் Cloud Computing முறைகளில்தான் மேற்கொள்ளப்படுகிறது என தெரிய வருகிறது. பல நிறுவனங்கள் இச் சேவையை வழங்க தற்பொழுது முன் வந்த வண்ண முள்ளதாகக் காணப்படுகின்றன. எனவே பொருத்தமான நிறுவனங்கள் தங்கள் வியாபார நடவடிக்கைகளை முதலீட்டு செலவைக் குறைத்து முன்னேற இந்த Cloud Computing முறையானது சிறந்ததொரு வாய்ப்பை வழங்குகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.