புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 
வடக்கு, கிழக்கில் தேர்தலை குழப்ப முயன்ற தீய சக்திகளுக்கு மக்கள் ஆப்பு

வன்முறைகள், முறைகேடுகள் எதுவுமில்லை;

நேற்று அமைதியான தேர்தல் வாக்களிப்பில் மக்கள் ஆர்வம்

வடக்கு, கிழக்கில் தேர்தலை குழப்ப முயன்ற தீய சக்திகளுக்கு மக்கள் ஆப்பு

யாழில் 57%;

கிளிநொச்சியில் 65%

வாக்களிப்பு

யாழ்ப்பாணம், வலிகாமம் தெற்கில் பெண்மணியொருவர் வாக்களிப் பதனைப் படத்தில் காணலாம். (படம்: நிஸங்க விஜயரட்ன)

வடக்கு, கிழக்கு உட்பட 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்று (23) சனிக்கிழமை சுமுகமான முறையில் நிறைவடைந்தது.

எவ்விதமான வன்முறைச் சம்பவங்களோ, முறைகேடுகளோ இன்றித் தேர்தல் அமைதியாக நடைபெற்றதுடன் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் மக்கள் மிக ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

கிளிநொச்சி மக்கள் இரண்டு தசாப்த காலத்திற்குப் பின்னர் உள்ளூராட் சித் தேர்தலொன் றில் நேற்று வாக் களித்தனர். அவர்க ளுக்கு இது நீண்ட காலத்திற்குப் பின்னர் கிடைத்த முதலாவது அனுபவமென்பதால் மக்கள் அக்கறையுடனும் ஆர்வமுடனும் வாக்களித்தனர். யாழ்ப்பாணத்தில் 57 வீத வாக்களிப்பும் கிளிநொச்சியில் 65 வீத வாக்களிப்பும் நடைபெற்றுள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுவாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் எந்த ஓர் அசம்பாவிதங்களுமின்றி சுமுகமான முறையில் நடைபெற்றது. பொலிஸார் பலத்த பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர். வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதற்காக வாக்காளர்களுக்கு விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் செய்து கொடுக்கப்பட்டது. மேலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர். காலையில் மந்த கதியில் நடந்த வாக்குப் பதிவுகள் நண்பகலில் அதிகரித்தது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தலுக்கு வாக்களிக்கச் சென்றவர்களை வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதர வாளர்கள் அச்சுறுத்திய சில சம்பவங்கள் நடைபெற்றன. இருந்த பொழுதும் இதற்குச் செவிசாய்க்காது மக்கள் அச்சமற்ற சூழலில் வாக்குப்பதிவில் ஈடுபட்டனர்.

யாழ். மாவட்டத்திலும் எந்த ஒரு அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறாத வகையில் பொலிஸார் பாதுகாப்பு கடமை யில் ஈடுபட்டனர். மக்கள் பாதுகாப்பான சுமுகமான ஒரு சூழலில் வாக்களிப்பில் ஈடுபட்டனர். இதேபோன்று தீவகப் பகுதிகளிலும் எந்த ஒரு அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை.

தீவகத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த பலர் தமக்கான வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாமையினால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இவர்கள் அனைவரும் கடந்த தேர்தலின் பொழுது வாக்காளர் உரிமை பெற்றவர்கள் என்பதும் தற்பொழுது இவர்களுடைய பதிவு நீக்கப்பட்டுள்ளமை யும் குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று இடம் பெயர்ந்தோர் அடையாள அட்டைகளை வாக்களிப்புக்குப் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்ட தால் இந்த அட்டைகளைப் பயன்படுத்தியும் பலர் வாக்களித்தனர்.

கிடைத்த சிறிய முறைப்பாடுகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தவகையில் உள்ளூராட்சித் தேர்தல் பாதுகாப்பாக இயல்பான சூழ லில் நடைபெற்றமையும் மக்கள் அச்சுறுத் தல்கள் இன்றி அமைதிச் சூழலில் வாக் களித்தமையும் குறிப்பிடத்தக்கது.

விசேடமாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் மத்தியில் இந்தத் தேர்தல் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி அமைப் பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்தார்.

சைக்கிள்களில் வந்தும் நடந்தும் வந்து மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததுடன், அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளைக் கண்டு மக்கள் மத்தியில் புதிய எதிர்காலத்திற்கான நம்பிக்கை ஏற்பட்டுள் ளதாகக் கூறிய அவர் இந்தத் தேர்தலில் ஆளும் தரப்பு அமோக வெற்றியீட்டு மென்றும் கூறினார்.

இதேவேளை தேர்தல் கடமையில் தேர்தல்கள் சட்ட விதிகளை மீறிய தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளை தேர்தல் கடமை களில் இருந்து உடனடியாகத் தடைசெய்துள் ளதாகவும் நண்பகல் வரை தேர்தல் சுமுகமான முறையிலும் எந்த ஒரு அசம் பாவிதமின்றியும் நடைபெறுவதாகவும் யாழ். தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் யாழ். மாவட்ட அரசாங்க அலுவலருமான திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்தாவது, யாழ். மாவட்டத்தில் தேர்தல்கள் எந்த ஒரு அசம்பாவிதமுமின்றி சுமுகமான முறையில் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் பொழுது தேர்தல் கடமைகளில் முறைகேடான முறையில் ஈடுபட்டவர்களை உடனடியாக தேர்தல் கடமைகளில் இருந்து இடைநிறுத்தியுள்ளோம். மேலும் இனிவரும் தேர்தல்களின் பொழுதும் கண்காணிப்புக் கடமைகளில் ஈடுபட முடியாதவாறு தடை செய்துள்ளோம்.

நண்பகல் வரையும் 22.41% வாக்குகள் குடாநாடு எங்கிலும் பதிவாகியுள்ளது. காலையில் குறைவாக இருந்த வாக்குப்பதிவு நண்பகல் வரையில் அதிகாரித்துள்ளது. 80% இற்கும் அதிகமான வாக்குப்பதிவு குடாநாட்டில் இடம்பெறும் என எதிர் பார்க்கின்றோம். இம்முறை எந்த ஒரு அசம்பாவிதங்களும் இடம்பெறாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது. ஒருசில சம்பவங்கள் நடைபெற்ற தாக எனக்குத் தவறான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

உண்மையில் இத்தேர்தல் சுமுகமான முறையில் நடைபெறுகிறது. மக்கள் அமைதியான ஒரு சூழலில் வாக்களிப்பில் ஈடுபடுகின்றனர் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.