புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 

குறைகள் தடையல்ல என்று சாதித்த பெண்

குறைகள் தடையல்ல என்று சாதித்த பெண்

ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாய், மருத்துவரிடம், போய் “என் குழந்தையைப் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

மருத்துவரோ, “உங்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி சொல்லப்போகிறேன். மனதைத்திடப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.

அதைக்கேட்ட தாய், பதைபதைத்து அழுகையுடன், என் குழந்தை இறந்து போய் விட்டதா?” என்று கேட்டார்.

“குழந்தை இறக்கவில்லை. ஆனால் இறந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். காரணம், குழந்தை பார்வையற்று, செவி கேட்கும் தன்மையற்று பிறந்திருக்கிறது.

அதுவும் பெண் குழந்தை” என்றார் மருத்துவர்.

“குருடாய், செவிடாய் பிறந்த பெண் குழந்தை எப்படி வாழப்போகிறதோ?” என்று கண்ணீர் விட்டபடியே அக்குழந்தையை வளர்த்தார் தாய். அப்பெண் குழந்தை ஒரு சரித்திரம் படைத்தது.

நுகரும் திறனாலும், தொடும் உணர்வாலும் கடின உழைப்பாலும், பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டது.

எண்ணற்ற புத்தகங்களை எழுதி முயற்சி செய்தால், என்ன குறை இருந்தாலும், எதையும் சாதிக்க முடியும்’ என்பதை உலகிற்கு உணர்த்தியது. அப்பெண் குழந்தைதான் ‘ஹெலன் கெல்லர்’

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.