புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 

அர்னோல்ட் மீண்டும் நடிக்கிறார்

அர்னோல்ட் மீண்டும் நடிக்கிறார்

கலிபோர்னியா ஆளுநராக இருந்த அர்னோல்ட் ஸ்வாஸ்நேகர் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த அர்னோர்ல்ட் சினிமாவில் நடிப்பதற்காக அமெரிக்காவில் குடியேறியவர். இவர் நடித்த ‘த டெர்மினேடர்’ படம் உலக அளவில் பெரும் வெற்றி பெற்றது.

பின்னர் அரசியலில் குதித்த அவர் தேர்தலில் போட்டியிட்டு கலிபோர்னியா ஆளுநராக இரண்டு முறை பதவி வகித்தார்.

கலிபோர்னிய மாநிலத்தின் 38 ஆவது ஆளுநரான இவரின் பதவிக்காலம் முடிந்த பின்னர் இவர் என்ன செய்யப்போகிறார் என்று கடந்த பல மாதங்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த நிலையிலேயே அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

ஏற்கனவே அவர் தன் வீட்டில் வேலை செய்த பெண்ணுடன் காதல் தொடர்பில் ஈடுபட்டு ஒரு மகனுக்கும் தந்தையானார். இந்தக்காதல் விவகாரம் அவர் மனைவிக்குத் தெரியவந்ததை அடுத்து அவர் விவாகரத்து பெற்றார்.

தற்போது அவர் ‘த லொஸ்ட் ஸ்டேனட்’ என்னும் படத்தில் நடிக்கிறார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.