புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 

மீடியாக்களே தன்னை சீரழித்துவிட்டதாக

மீடியாக்களே தன்னை சீரழித்துவிட்டதாக

நடிகை ரஞ்சிதா புகார்

நித்யானந்தாவுடன் இருப்பது நான் இல்லை. அது மார்பிங் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்னை பற்றி அவதூறாக சித்திரிக்கப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பி என்னை அசிங்கப்படுத்தி சீரழித்த மீடியாக்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ரஞ்சிதா கூறினார்.

கடந்த ஆண்டு சுவாமி நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் தனி அறையில் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் சன் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகின.

நாடு முழுவதும் உள்ள நித்யானந்தா தியான பீடங்கள் மீது தாக்குதல் நடந்தது. டிவியில் ஒளிபரப்பான காட்சிகளில் உண்மை இல்லை. அவை மார்பிங் முறையில் உருவாக்கப்பட்டவை என நித்யானந்தா ஆசிரமம் விளக்கம் அளித்தது.

நித்யானந்தரை பெங்களூர் பொலிஸ் கைது செய்தது. பின் விடுவிக்கப்பட்ட அவர் என்னிடம் 100 கோடி ரூபா கேட்டு சிலர் மிரட்டினர். அதற்கு நான் ஒத்துவராததால் தாக்குதல் நடத்தியுள்ளனர் என பரபரப்பு பேட்டி அளித்தார். சர்ச்சையில் சிக்கிய நடிகை ரஞ்சிதா பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் அமைதி காத்து வந்தார்.

சினிமா பக்கமும் தலைகாட்டவில்லை நடிகை ரஞ்சிதா. அண்மையில் திடீரென சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகம் சென்று கமிஷனரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். சென்னையில் நிருபர்களை சந்தித்த ரஞ்சிதா கூறியதாவது :-

சில பத்திரிகைகள், மீடியாக்கள் மனச்சாட்சி இல்லாமல் என்னைப் பற்றி எழுதி தெருவில் நிற்க வைத்துவிட்டன. இஷ்டத்திற்கு கற்பனையாக எழுதி என் தனிப்பட்ட வாழ்க்கை சுதந்திரத்தை பறித்துவிட்டன. அருவருக்கத்தக்க ஆபாச காட்சிகளை சன் நெட்வொர்க் டிவிக்கள், தினகரன் நாளிதழ், தினகரன் வெப்சைட்டிலும் வெளியிட்டன.

இப்படி என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு என்னை மக்கள் மத்தியில் அசிங்கப்படுத்தி சீரழித்துவிட்டனர்.

இது தொடர்பாக புகார் கொடுக்க சென்னையில் கால் வைத்தால் உடனே கைது செய்து உள்ளே தள்ளி விடுவோம் என மிரட்டினர். இதனால் ஒன்றரை ஆண்டுகளாக பாதுகாப்பு கருதி சென்னை வரவில்லை. பொலிசிலும் புகார் செய்யவில்லை.

அப்போது நான் புகார் கொடுத்திருந்தால் எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டார்கள். அப்போது இருந்த ஆட்சி நிலை வேறு தற்போது உள்ள ஆட்சி நிலை வேறு. தனி மனித உரிமைகள் பற்றி அப்போது எனக்குத் தெரியாது. தற்போது முழுவதுமாக தெரிந்து கொண்டதால் தைரியம் வந்துள்ளது. தற்போது புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையால் புகார் செய்துள்ளேன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.