புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

வன்முறைகள், முறைகேடுகள் எதுவுமில்லை;

நேற்று அமைதியான தேர்தல் வாக்களிப்பில் மக்கள் ஆர்வம்

வடக்கு, கிழக்கில் தேர்தலை குழப்ப முயன்ற தீய சக்திகளுக்கு மக்கள் ஆப்பு

யாழில் 57%; கிளிநொச்சியில் 65% வாக்களிப்பு

வடக்கு, கிழக்கு உட்பட 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்று (23) சனிக்கிழமை சுமுகமான முறையில் நிறைவடைந்தது. எவ்விதமான வன்முறைச் சம்பவங்களோ, முறைகேடுகளோ இன்றித் தேர்தல் அமைதியாக நடைபெற்றதுடன் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் மக்கள் மிக ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

விவரம் »

 

நாட்டிய கலாமந்திர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனின் மாண விகளான சகோதரிகள் சிவகாமி, சிவப்பிரியா ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் கடந்த சனியன்று கொழும்பில் நடைபெற் றது. சிவகாமியும், சிவப்பிரியாவும், தமது ஆசிரியையுடனும், பெற்றோரான ஊடகவியலாளர் வித்தியாதரன் தம்பதியுடன் மேடை யில் தோன்றிய போது எடுத்த படம். (படம்: கே. பொன்னுத்துரை)


 

தமிழ் நாடு காயல்பட்டினத்தில் நடைபெற்ற மூன்று நாள் இலக்கிய மாநாட்டின் இறுதி நாளில் “சேவைச் செம்மல்” விருதினை ‘தேசத்தின் கண்’ மானா மக்கீன் பெற்றார். பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், சென்னை எஸ். அக்பர் ஷா, ‘நாவுக்கரசன்’ ஏ. ஐ. ஏ. றிஃபாய், இலங்கை இலக்கியப் புரவலர் ஃபாயிக் மக்கீன் ஆகியோர் ஒருங்கிணைந்து விருதும் பாராட்டுப்பத்திரமும் வழங்கி மகிழ்கையில் பிடிக்கப்பட்ட படம். (படம்: எப். எம். பைரூஸ்) (வி)
 

அபிவிருத்தியை எடுத்தியம்பிய விசேட அனுபந்தம்

வடக்கு மக்களிடையே விழிப்புணர்வு; யாழ். தினகரனுக்கு பாராளுமன்றில் பாராட்டு

திருக்குறள் மாநாட்டிற்கும் அஸ்வர் ணி.ஜி வாழ்த்து;

அரசாங்கத்தினால் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக யாழ். தினகரன் பத்திரிகையுடன் வெளியாகிய விசேட அனுபந்தம் அப்பகுதி மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தினதும், ஜனாதிபதியினதும் மக்கள் பணியை தெட்டத் தெளிவாக எடுத்துக் கூறிய யாழ். தினகரனுக்கு இந்த மக்கள் சபையான பாராளு மன்றத்தில் பாராட்டுக்களைத் தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் வெள்ளியன்று மாலை தெரிவித்தார்.

விவரம் »

அரபுக் கல்லூரி மாணவர்கள், உலமாக்கள்;

தொப்பி அணிந்த நிலையில் யிவி ஆட்பதிவு திணைக்களம் அனுமதி

ஆணையாளர் ஜகத் பி. விஜயவீர தகவல்

முஸ்லிம்கள் தொப்பி அணிந்த நிலையில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களை தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் பி. விஜயவீர தெரிவித்துள்ளார்.

விவரம் »

தேர்தல் காலத்தில் மட்டும் அரசியல் நாடகம்

உருவாக்கப்பட்ட நோக்கத்தை மறந்து செயற்படும் TNA

U.K தமிழர் பேரவை கண்டனம்

பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை நாடும் அரசியல் போக்கை கடைப்பிடிப்பதாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.

விவரம் »

கைதியான பொன்சேகா ஊடகங்களுக்கு சுதந்திரமாக கருத்துக் கூறுவது எப்படி?

சட்டத்திற்கு முரணானது; தண்டனைக்குரிய குற்றம்

பாராளுமன்றத்தில் அஸ்வர் ணிஜி கேள்விக் கணை?

சிறைவாசம் அனுபவிக்கும் கைதியான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஊடகங்களுக்குக் கருத்துக்கூற எவ்வாறு அனுமதிக்கப்பட்டு வருகிறார்? என வெள்ளியன்று பாராளுமன்றத்தில் ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

விவரம் »

அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் வருடாந்த மாநாடு அண்மையில் இலங்கை கணக்காளர் நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் மெளலவி இஸட். எல். எம். முஹம்மட் கெளரவிக்கப்பட்டார். பிரதம அதிதி நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் இருந்து நினைவுச் சின்னம் பெற்றுக்கொள்வதையும் வை. எம். எம். ஏ.யின் தேசிய தலைவர் சட்டத்தரணி நத்வீ பாஹாவுத்தீன் மற்றும் சட்டத்தரணி அஷ்ரப் ரூமி ஆகியோரையும் படத்தில் காணலாம். (படம்: ருசைக் பாரூக்)

 

 

Advertisements______________________

Navayugaya

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk

   TRC

www.defence.lk    


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.