புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

இவ்வார சிரிப்பு\

இவ்வார சிரிப்பு\

முஹம்மது ஹாலித்,
பைரூஸ் - பஹ்மியா,
மதுராப்புர, தெனிப்பிட்டிய


வண்ணத்துப் பூச்ச

வண்ண வண்ண சிறகடிக்கும்
வண்ணத்துப் பூச்சி- என்
கண்ணைக் கவர்ந்து பறப்ப தெங்கே
வண்ணத்துப் பூச்சி

முட்கள் சூழ்ந்த ரோஜா மலரை
வண்ணத்துப்பூச்சி- நீ
தொட்டு முத்தம் கொடுப்ப தேனோ
வண்ணத்துப் பூச்சி

குத்தி விடும் முட்கள் உன்னை
வண்ணத்துப் பூச்சி- நீ
மெத்தக் கவனம் கொண்டிடுவாய்
வண்ணத்துப் பூச்சி

அல்லல் இருக்கும் தான் வாழ்வில்
அறிந்திடு குழந்தாய்- நான்
முள்ளை யல்ல பூக்களையே
முத்த மிடுகிறேன்.

உ. நிசார்


குரங்காரே!

குர் குர் குர் குர் குரங்காரே
குறும்புத் தனத்தில் தேர்ந்தவரே
‘விர் விர்’ என்றே முறைக்காதீர்
வீணாத் தொல்லை கொடுக்காதீர்
குட்டியை வயிற்றில் தாங்கிடுaர்
குதித்துத் தாவி ஓடுகிaர்
பல்டி அடித்துத் தாவிடுaர்
பார்ப்போர் மனதைக் கவர்கிaர்
அடியேன் அழைத்தால் வருவீரோ
அமர்ந்து பழத்தை ஏற்பீரோ?

அனஸ் பாரீஸ்
களனி


அதிசயத் தன்மைகொண்ட
உயிரினங்கள்

பச்சோந்தி ஓணான் இனத்தைச் சேர்ந்த ஜந்தாகும். இவ்வுயிரினம் விஷேட தன்மைகளைக் கொண்டுள்ளது. இதன் நாக்கு அதன் உடலை விட நீலமாகக் காணப்படும்.

பச்சோந்தியானது நாக்கை வெகுதூரத்துக்கு நீட்டி பூச்சிகளை இலகுவாக இரையாக்கிக் கொள்ளளும் வல்லமை படைத்தது. அது நிமிடத்திற்கு நிமிடம் தனது உடம்பின் நிறத்தை தன்னிச்சையாகவே மாற்றிக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. இதனால் எதிரிகளிடம் இருந்து உயிர்தப்ப நிறைய வாய்ப்புண்டு.

வெட்டுக்கிளி, கும்பிடு பூச்சி என்பன அது வாழ்கின்ற புல், பூண்டுத் தாவரம் என்பற்றின் நிறத்தைக் கொண்டு காணப்படுவதனால் வயலிலோ, தோட்டத்திலோ அதனை இனங்காண்பது சிரமமாக இருக்கும். வெட்டுக்கிளி பச்சோந்தியைப் போலல்லாது உற்பத்தியாகும் தானியவகைகளுக்கு பெரும் சேதம் விளைவிக்கின்றது. மியன்மார் (பர்மா) நாட்டில் மட்டும் ஆண்டொன்றிற்கு சுமார் ஐம்பது மெற்றிக்தொன் உணவுப் பயிர்களை அழித்துவிடுவதாக அந்நாட்டின் விவசாய இலாகாவின் வருடாந்த அறிக்கை மூலம் அறியமுடிகிறது.

கிழக்கிந்தியத் தீவுகளில் பறக்கும் பல்லிகள் காணப்படு கின்றன. இவை நம் வீட்டு பல்லிகளைப் போலல்லாது மரங்களை மட்டும் வசிப்பிடமாகக் கொண்டுள்ளன. பறவைகள் தன் இறக்கைகளை விரித்து தான் விரும்பிய இடத்துக்கு சுதந்திரமாக பறந்து செல்வதைப் போல் தனது தோலை அகல விரித்து காற்றின் வேகத்துடன் மரத்திற்கு மரம் தாவும் வல்லமையைக் கொண்டுள்ளன.

ஏ.எம். எப். முஸ்னா,
தரம் 08, நாங்கல்ல மு. ம. வி
நாங்கல்ல, துல்ஹிரிய.


ஜீ ற்றிடுவோம் ல்வி

பாடசாலை
சென்றிடுவோம்
பாடங்களை
நன்றென கற்றிடுவோம்...
பரீட்சையில்
நற்பெறுபேறு
பெற்றிடுவோம்...
தாய் தந்தைக்கு நற்
பெயர் கொடுத்திடுவோம்...
ஆசான்களை
மதித்திடுவோம்
யார் மனதும்
நோகாமல்
நடந்திடுவோம்...
படித்து பட்டம் பெற்று
ஊருக்கு பெருமை
சேர்த்திடுவோம்...
ஊரும் உலகும்
போற்ற கல்வியை
கற்றிடுவோம்...
நல்லதொரு சமூகம்
உருவாக கல்வியை
கற்று
நன்றென
போதித்திடுவோம்...

ஏரூர் முகைதீன்
ஏறாவூர்


மாத்தளை ரோயல் சர்வதேச பாடசாலையின் வருடாந்த கலைவிழா அண்மையில் மாத்தளை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி மாணவி யைனப் கலீல் டெங்கு நோய் பரவுவது பற்றி பேசுவதையும், சிறுமியரின் நடன நிகழ்வையும் படங்களில் காணலாம்.

(படம்: உக்குவளை விசேட நிருபர்)


காத்தான்குடி அல் ஹஸனாத் வித்தியாலயத்தின் கலை விழா அண்மையில் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாலர் வகுப்பு மாணவிகளின் கலை நிகழ்ச்சியையும், மாணவர்களில் ஒருபகுதியினர் பார்த்து ரசிப்பதையும் காணலாம்.

(படம்:- புதிய காத்தான்குடி நிருபர்)


 

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.