புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட 40 கிலோ மரை இறைச்சி மீட்பு

ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட 40 கிலோ மரை இறைச்சி மீட்பு

தம்புள்ள நகரில் முச்சக்கரவண்டி யொன்றை நிறுத்தி திடீர் சோதனையிட்ட பொலிஸார் அதில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட 40 கிலோ கிராம் மரை இறைச்சியை கைப்பற்றினர். இதனையடுத்து முச்சக்கர வண்டியில் பிரயாணம் செய்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சீகிரிய வனவள பாதுகாப்பு பிர தேசத்தில் சட்டவிரோதமாக மரையொன்றை வேட்டையாடி அதன் இறைச்சியை சந்தேக நபர்கள் தம் புள்ள நகருக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவிக் கின்றனர்.

சந்தேக நபர்கள் 4 பேரையும் தம் புள்ள மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜெ.மொரவக முன்னிலையிவ் ஆஜர் செய்யப்பட்ட போது ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக விதிக்குமாறு நீதவானால் விதிக்கப்பட்டது.


க.பொ.த. உயர்தரம்

ஹட்டன் ஹைலன்ஸ் மாணவர்கள் 54 பேருக்கு பல்கலைக்கழக அனுமதிக்கான வாய்ப்பு

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் இருந்து 2012ம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 119 மாணவர்களில் 92 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெறுவதற்கான தகைமையை கொண்டுள்ளனர். இவர்களில் 54 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அதிபர் எஸ்.விஜயசிங்க தெரிவித்தார்.

இதன்படி மருத்துவத்துறைக்கு 06 பேரும், பொறியியலுக்கு 08 பேரும், முகாமைத்துவத்துக்கு 05 பேரும், மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயவியலுக்கு ஒருவரும், சுகாதார விருத்தித் துறைக்கு ஒருவரும், உணவு விஞ்ஞானமும் போஷாக்குத்துறைக்கு 02 பேரும் தெரிவாகியுள்ளனர்.

மேலும் சூழல் பேணலும் முகாமைத்துவமும் 02, மருந்தகவியல் 04, உயிரியல் விஞ்ஞானம் 01, விவசாயம் 01, சித்த மருத்துவம் 04, உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் 01, தகவல் தொடர்பாடலும் தொழில்நுட்பமும் 04, கணிய அளவையியல் 01, பெளதீக விஞ்ஞானம் 09, சித்திரமும் வடிவமைப்பும் 03, சங்கீத துறைக்கு 01 என பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்.

உயிரியல் பிரிவில் எஸ். தினேஸ்வரன் 1ஏ, 2பி பெறுபேற்றை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதலாமிடத்தையும், பீ. பிரியங்கா 3ஏ சித்தியை பெற்று மாவட்ட மட்டத்தில் 5ம் இடத்தையும் கே. கஜேந்திரகுமார் 1ஏ, 2பி சித்தியைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 7ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை பெளதீகவியல் பிரிவில் ரி. அபிலாஷினி 3ஏ சித்தியைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 3ம் இடத்தை பெற்றுள்ளார். அத்துடன் எஸ். கிருஷாந்தி 3ஏ சித்தியை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் 16 இடத்தைப் பெற்றுள்ளார். கலைத்துறையில் ஏ. ரோஸ்னியா 1ஏ, 2பி சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் 2ம் நிலையையும் தேசிய மட்டத்தில் 5ம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தேசிய ஒலிம்பியாட் போட்டி:

கிழக்கு மாகாணத்திலிருந்து 75 மாணவர்கள் தெரிவு

கல்வி அமைச்சு நடத்தும் தேசிய கணித ஒலிம்பியாட் போட்டிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து மூன்று தொகுதிகளிலும் 75 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இப்போட்டி எதிர்வரும் 23ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண மட்டப் போட்டி கடந்த வாரம் 17 கல்வி வலயங்களிலும் நடத்தப்பட்டது. அதிலிருந்து இவர்கள் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவானார்கள். முதல் தொகுதியில் 6ம் வகுப்பும் இரண்டாம் தொகுதியில் 7, 8, 9ம் வகுப்புகளும் 3ம் தொகுதியில் 10ம், 11ம் வகுப்புகளும் அடங்குகின்றன.

6ம் வகுப்பிற்கான முதல் தொகுதியில் முதல் மூன்று இடங்களையும் எஸ். டிவானுஜா (புள்ளி 85) - காரைதீவு, எம். புருஷோத்தமன் (புள்ளி 75) - கல்முனை, எம்.எல்.எம். ரிபாசத் (புள்ளி 75) - காத்தான்குடி ஆகியோர் பெற்றுள்ளனர்.

கிழக்கு மாகாண மட்டத்தில் முதல் தொகுதியில் முதலிடத்தை காரைதீவு இ.கி.மி. பெண்கள் வித்தியாலயத்தில் தரம் 6 கற்கும் 6 செல்வி ச. டிஷானுஜா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கிழக்கிலுள்ள 17 கல்வி வலயங்களைச் சேர்ந்த மூவின மாணவர்களும் தோற்றியிருந்தனர். கல்முனை மாவட்டத்தில் எட்டு மாணவர்கள் மாகாணப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.


தேக்குமரம் கடத்தியவர் கைது

டிராக் வண்டியில் சட்ட விரோதமாக அனுமதிப் பத்திரமின்றி தேக்கு மரக் குற்றிகள் கடத்த முயன்ற ஒருவர் வெலிகம பொலிஸாரால் கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப் பட்டார்.

அகுரஸ்ஸவிலிருந்து வெலிகமைக்குக் கொண்டு செல்லுகையில், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் டிராக் வண்டியை சோதனையிட்ட போதே அனுமதிப் பத்திரமின்றி தேக்கு மரக் குற்றிகள் கடத்திச் செல்லப்படுவது தெரிய வந்தது.

மரக்குற்றிகளின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை. கைது செய் யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படவுள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.