புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

இலங்கையில் 6வது சர்வதேச பகிரங்க சக்கர நாற்காலி டென்னிஸ் தொடர்

இலங்கையில் 6வது சர்வதேச பகிரங்க சக்கர நாற்காலி டென்னிஸ் தொடர்

இலங்கையில் டென்னிஸ் விளையாட்டுத்துறையின் மற்றுமொரு அங்கமாக 6ஆவது சர்வதேச பகிரங்க சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டித் தொடர் எதிர்வரும் 21ம் திகதி முதல் 23ம் திகதிவரை கொழும்பில் இடம் பெறவுள்ளது. இலங்கையில் தற்போது ஒவ்வொரு வகையான விளையாட்டுத்துறைகளிலும் சர்வதேச ரீதியான போட்டிகளை நடத்துவதால் பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. விளையாட்டுத்துறையைப் பொறுத்தவரை இன, மதம், ஜாதி, இல்லாமல் அனைவரும் ஒன்றாக ஆடப்படும் விளையாட்டு என்றால் மிகையாகாது.

சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் இந்த முறை என். சி. ஈ. டென்னிஸ் போட்டித் தொடர் இவ்வருட நாட்காட்டியில் இடம்பெறும் வகையில் அமைந்துள்ளது. அதனை இலங்கை நடத்தும் வாய்ப்புக் கிட்டியமைக்கு நாம் அனைவரும் நன்றிகூறக்கடமைப்பட்டுள்ளோம்.

இத்தொடரில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசாக 2ஆயிரம் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது. 1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த என். சி.ஈ. போட்டித் தொடர் 11 சர்வதேச போட்டிக் தொடர் என்பதும் இங்கு முக்கிய அம்சமாகும். 161 போட்டிகளில் 40 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள். சர்வதேச சக்கர நாற்காலித் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் இவ்வருட நாற்காட்டியில் மாஸ்டர்ஸ், சம்பியன் போட்டியில் வெற்றி பெறும் முதல் 8 வீரர்கள் அதாவது ஆண், பெண் வீரர்கள் கிராண்ட்ஸலாம், சுப்பர் சீரிஸ் போட்டிகளில் பங்கேற்கும் விதத்தில் இவர்கள் தயார் படுத்தப்படுவார்கள் என்றும் டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.

சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டித் தொடர்களில் விளையாடும் வீர, வீராங்கனைகளுக்கு சர்வதேச தரவரிசை, பிரிவுகள் வழங்கப்படும் தொழில் ரீதியாகவும் இந்தப் போட்டித் தொடர் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குப் புறம்பாக இலங்கையில் இடம்பெறும் போட்டிகளில் முதல் நிலையில் வரும் ஆண், பெண் வீரர்கள் சர்வதேச சக்கர நாற்காலி போட்டித் தொடரில் பங்குபற்றும் வாய்ப்புக் கிட்டும் அத்துடன் சர்வதேச டென்னிஸ் சங்கம் வழங்கும் இராப்போசனத்தில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

இதேவேளை இந்த சுற்றுத் தொடரைக் கண்டுகளிக்க மாற்றத்திறனாளிகள் ஆயிரம் பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இதேநேரம் இலங்கையில் இடம்பெறும் இந்த சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டிக்கு அவுஸ்திரேலியா, இந்திய ஆகிய நாடுகளில் இருந்து பங்கேற்பதற்கு தங்களது விருப்பங்களைத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஏனைய நாடுகளில் வீரர்களும் பங்கேற்பதற்கான விருப்பத்தை வரும் நாட்களில் தெரிவிக்கவுள்னர்.

இதேவேளை போட்டி இடம்பெறும் இலங்கையில் இருந்து முன்னணி வீரர்களான உபாலி ராஜ கருணா பங்கு பற்றுகிறார்கள். இவர் தரப்படுத்தலில் 69வது இடத்தில் உள்ளார். அவர் தனது சொந்த மண்ணில் தனது முழுத்திறமையையும் வெளிக்காட்டுவார். இவர்களது பயிற்சியாளர்கள் ஜகத் வெலிக்கல்ல, பி. எஸ். குமார ஆகியோரின் பயிற்சியில் 16பேர் கொண்ட குழு இலங்கை சார்பாக பங்கேற்கவுள்ளனர். இந்தப் போட்டியில் விளையாடும் வீரர்கள் தங்களது சிறந்த சர்வதேச போட்டித் தன்மைக்கு முகம் கொடுத்து அதன் மூலம் துருக்கியில் இடம்பெறும்.

உலகக் கிண்ண போட்டியில் பங்கு பற்றும் வாய்ப்புக் கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சிறந்த வீரர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஏற்றவகையில் நாங்கள் நல்ல அனுசரணையாளர்களைத் தேடி விடுகிறோம். அவர்களின் உதவிமூலம் சர்வதேச தரத்திற்கு போட்டியாளர்களை அனுப்ப முடியும் என்று பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உலகத்தில் 1976ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சக்கர நாற்காலி டென்னிஸ் தொடரில் இலங்கையும் பங்கேற்றிருப்பது விசேட அம்சமாகும். இலங்கை சார்பாக பங்கேற்கும் வீரர்களை உலக தரப்படுத்தலில் சிறந்த இடத்திற்கு கொண்டுவருவதற்கு ஏற்ற வகையில் தயார்படுத்துவது இலங்கை டென்னிஸ் சங்கம் மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் 150 சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டித் தொடர் வருடா வருடம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிகள் அனைத்தும் சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் கண்காணிப்பில் இடம் பெறுவது விசேட அம்சமாகும்.

எது எப்படியோ இலங்கையில் விளையாட்டுத்துறைக்கு நல்லதொரு அங்கீகாரம் வரும் காலங்களில் கிடைக்க வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.