புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

இவ்வார பலன்

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா
 

17.02.2013 முதல் 23.02.2013 வரை

 

1.02.2013 வியாழக்கிழமை பீம ஏகாதசி விரதம்
23.02.2013 சனிகிழமை சனிப்பிரதோஷ விரதம்
18.02.2013 திங்கட்கிழமை அட்டமி நவமி உள்ளதால் சுபகருமம் தவிர்க்கவும்


கிரகம் நிற்கும் ராசி நிலை


குரு இடபம் (நட்பு)
கேது மேடம் (பகை)
ராகு துலாம் (நட்பு)
சூரியன் மகரம் (பகை)
சனி துலாம் (உச்சம்)
புதன் கும்பம் (நட்பு)
சுக்கிரன் மகரம் (நட்பு)
செவ்வாய் கும்பம் (பகை)
சந்திரன் மேடம், இடபம், மிதுனம், கடகம்

மேடம்

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

மேட ராசிக்காரர்களுக்கு 11ஆம் இடத்து சூரியன் காரணமாக புதிய சொத்துக்கள் வாங்க நேரிடலாம். தொழிலால் லாபம் ஏற்படும். குடும்ப பலன் ஏற்படலாம். எடுக்கின்ற முயற்சிகள் எல்லா விதத்திலும் நன்மையாக முடியும். புதன் மூலம் குடும்பத்தில் சந்தோஷமான காரியங்கள் நிகழும். எதிர்பார்த்த செய்தி மனதுக்கு மகிழ்ச்சியை தரும். செவ்வாய் காரணமாக செய்கின்ற தொழில்துறைகளால் நல்ல பணவரவு ஏற்படும். அதிர்ஷ்டமும் ஏற்படலாம்.


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இடப ராசிக்காரர்களுக்கு 10ஆம் இடத்து சூரியன் காரணமாக எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியாகும். அலைச்சல் அதிகரிக்கும். போக்குவரத்தின்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தாழ்மையான உணர்வு தோன்றும். புதன் மூலம் ஈடுபடுகின்ற தொழில்துறைகள் அனைத்தும் நல்ல பணலாபத்தை தரும். பெண்வழி சுகம் கிடைக்கும். செவ்வாய் காரண மாக தோல் வியாதிகள் குறைவடையும். காரியங்களுக்கு முட்டுகட்டை ஏற்படலாம்.


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

மிதுன ராசிக்காரர்களுக்கு 9ஆம் இடத்து சூரியன் காரணமாக பொதுவாக பயணங்களில் கவனமாக இருப்பது நன்று. குடும்பத்தில் செலவுகள் ஏற்படலாம். அரச பதவியில் இருப்பவர்கள் எதிலும் முன்கவனத்துடன் இருக்க வேண்டும். உடல் நலம் பாதிக்கப்படலாம். புதன் மூலம் உடல் நலம் பாதிக்கப்படலாம். சில இடைஞ் சல்களும் ஏற்படலாம். செவ்வாய் காரணமாக பெருமளவு செலவுகள் ஏற்படும். எடுக்கின்ற காரியங்கள் கைகூடி வருவது தாமதமாகும்.
 


கடகம்

புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்

கடக ராசிக்காரர்களுக்கு 8ஆம் இடத்து சூரியன் காரணமாக அரச பதவியில் உள்ளவர்கள் முன்னெச்சரிக் கையுடன் நடப்பது நன்று. நல்ல தனலாபம் ஏற்படலாம். வீணான தாழ்மையான உணர்வு ஏற்படும். அலைச்சல் கூடும். வயிறு சம்பந்தமான சிகிச்சை பெறவேண்டி வரும். புதன் மூலம் பரீட்சை வழக்குகளில் வெற்றி கிடைக்கும் பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். ஆடை கள் வந்து சேரும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும் செவ்வாய் காரணமாக போக்குவரத்தின் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.  


சிங்கம்

மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்

சிங்க ராசிக்காரர்களுக்கு 7ஆம் இடத்து சூரியன் காரணமாக திருமணம் தாமதம் ஆகலாம். மாற்றம் ஏற்படலாம். புதிய சொத்துக்கள் வந்து சேரலாம். பெருமளவு பணமும் வந்து சேரும். எதிரிகள் அடிபணிந்து விடுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதன் மூலம் வீட்டில் வீணான குழப்பங்கள் ஏற்படலாம். செவ்வாய் காரணமாக எதிரிகளின் தொந்தரவு இருக்கும். குடும்பத்தில் குழப்பம் இருக்கும். வீண் அலைச்சலும் இருக்கும்.
 


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

கன்னி ராசிக்காரர்களுக்கு 6ஆம் இடத்து சூரியன் காரணமாக புதிய சொத்துக்கள் சேரலாம். கெளரவம் உயரும். உடல்நலம் பாதிக்கப்படலாம் எதிரிகளின் தொந்தரவு இருக்கும். புதன் மூலம் புதிய பதவி கிடைக்கலாம். எடுக்கின்ற காரியங்கள் கைகூடி வரும் பரீட்சை, வழக்கு முடிவுகள் சாதகமாக இருக்கும். வீட்டில் மங்களகரமான காரியங்கள் நிகழும். செவ்வாய் காரணமாக தங்கம், செம்பு வியாபாரிகளுக்கு லாபம் ஏற்படும்.
 


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

துலா ராசிக்காரர்களுக்கு 5ஆம் இடத்து சூரியன் காரணமாக பகைவர்களின் தொல்லை இருக்கும். மனச்சங்கடம் ஏற்படலாம். பெண் நண்பர்களால் மனதில் கோபம் ஏற்படலாம். உடல் நலமும் பாதிக்கப்படலாம். புதன் மூலம் குடும்பத்தில் சச்சரவுகள் தோன்றலாம். செவ்வாய் காரணமாக எதிரிகளின் தொந்தரவு இருந்து கொண்டிருக்கும். உடம்பில் சோம்பல் தன்மை கூடும். பிள்ளைகளால் மனதில் கவலை இருக்கும்.


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

விருச்சிக ராசிகாரர்களுக்கு 4ஆம் இடத்து சூரியன் காரணமாக பெண்வழியால் விரோதம் ஏற்படலாம். அந்தஸ்து உயரும். புதிய அரசபதவி கிடைக்கலாம் சமூகத்தில் மதிப்பு உயரும். பணவரவு நன்றாக இருக்கும். எதிரிகள் அடிபணிந்து விடுவார்கள் உடல் நலமும் மேம்படும். புதன் மூலம் ஈடுபடுகின்ற தொழில்துறை களால் நல்ல பணரவரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவம் நிகழும். செவ்வாய் காரணமாக போக்குவரத்தில் கவனம் தேவை.
 


தனுசு

மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்

தனுசு ராசிக்காரர்களுக்கு 03ஆம் இடத்து சூரியன் காரணமாக பணம் வந்து சேரும் சமூகத்தில் மதிப்பு உயரும். வைத்திய ஆலோசனை பெற நேரிடும். வீணாக பணவிரயம் ஏற்படலாம். கண் சம்பந்தமாக வைத்திய ஆலோசனையும் பெறவேண்டி வரும். புதன் மூலம் அரச பதவியில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். எதிரிகளின் தொந்தரவு இருக்கும். செவ்வாய் காரணமாக பணப்புழக்கத்துக்கு குறைவிருக் காது. ஆலய தரிசனம் கிடைக்கும்.
 


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

மகர ராசிக்காரர்களுக்கு 02ஆம் இடத்து சூரியன் காரணமாக கட்டுக்கடங்காத செலவு ஏற்படும். குழந்தை செல்வம் ஏற்படலாம். சமூகத்தில் செல்வாக்கு குறையலாம். அலைச்சல் கூடும். உடல்நலம் பாதிக்கப் படலாம். புதன் மூலம் வீணான பெயர் கேட்க நேரிடும். கோபப்படும் சந்தர்ப்பம் ஏற்படும். செவ்வாய் காரணமாக திருடர்கள் பற்றிய பயம் மனதில் இருக்கும். நெருப்பு தொழிலுடன் தொடர்புடையவர்கள் முன்னெச்சரிக்கையு டன் நடப்பது நன்று.
 


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்

கும்ப ராசிக்காரர்களுக்கு 01ஆம் இடத்து சூரியன் காரணமாக தேவையில்லாமல் அலைச்சல் ஏற்படும். உறவினர்களின் உறவு பாதிப்படையலாம். இடமாற்றம் ஏற்படலாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும் புதன்மூலம் இனசன உறவுகள் பாதிக்கப்படலாம். வெளியூர் பிரயாணம் கைகூடி வரலாம். செவ்வாய் காரணமாக எடுக்கின்ற காரியங்களுக்கு தடை ஏற்படும். உடல் நலம் பாதிக்கப்படலாம். பகைவர்களின் தொந்தரவு இருந்து கொண்டிருக்கும்.


மீனம்

பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

மீன ராசிக்காரர்களுக்கு 12ஆம் இடத்து சூரியன் காரணமாக இடமாற்றம் ஏற்படலாம். எடுக்கும் காரியங்கள் நிறைவேற தாமதமாகும். புதிய சொத்துக்கள் வந்து சேரலாம். உடலில் புதிய உற்சாகம் பிறக்கும். தொழிலால் லாபம் ஏற்படலாம். அரச பதவியும் கிடைக் கலாம். புதன்மூலம் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையாது எதிரிகளின் தொந்தரவு இருக்கும். வைத்திய ஆலோசனை பெற நேரிடலாம். செவ்வாய் காரணமாக தேவையில்லாத செலவு ஏற்படலாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.