புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
நாட்டின் அபிவிருத்திக்கு மின் உற்பத்தியின் அவசியம்

நாட்டின் அபிவிருத்திக்கு மின் உற்பத்தியின் அவசியம்

நவீன வாழ்க்கை அமைப்பிலே மனிதனின் ஒவ்வொரு செயற்பாட் டுக்கும் மின்சாரம் பயன்படுத்தப் படுகின்றது. வாழ்வில் பெரும்பகுதியான காரியங்களை மின்சாரம் சுலபமாக்குகின் றது. குறுகிய நேரத்தில் குறிப்பிட்ட வேலையை முடிக்க மின்சாரம் உதவுகின் றது. மின்சாரம் வெளிச்சமாகப் பயன்படுத் தப்படுகின்றது. சமையல் காரியங்களில் மின்சாரம் பயன்படுகின்றது. தோட்டங்க ளுக்கு நீர் இறைக்கவும், விவசாயத்தைப் பெருக்கவும் உதவுகின்றது. கடல்வழிப் போக்குவரத்துக்கு உதவுகின்றது. ஆடை தோய்க்கவும், அரைக்கவும் குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்தவும் மின் தேவை. இவ்வாறு மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் உதவியாக இருக்கும் மின்சாரம் இன்று நம் நாட்டில் 75 சதவீத மக்களால் உபயோகிக்கப்படுகின்றது.

நகரங்களிலும், கிராமங்களிலும் மேற் கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கை களுக்கு, தொழிற்சாலை இயக்கத்துக்கு மின்சாரம் தேவைப்படுகின்றது. எனவே மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டி இருக்கிறது. இதுவரை மின் உற்பத்திப் பயன்பெறாத 25 சதவீதமான மக்களுக்கு மின் சக்தி வசதி தேவை. ஆகவே அரசு மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. நுரைச்சோலை, அம்பாந்தோட்டை, கெரவலப்பிட்டிய எனும் இடங்களில் மின் உற்பத்திக்கான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேல் கொத்மலையிலும் நீர்மின்சாரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மின்சார பாவனையில் சுமார் 17 சதவீதமான தேவையற்ற பாவனை (தீastagலீ) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே பொது ஸ்தாபனங்களும் தனியாரும் தாம் பாவிக்கும் மின்சாரத் தேவையை மட்டுப்படுத்தி தேவையற்ற பாவனையைக் கட்டுப்படுத்தியும் நாட்டின் நலனுக்கு உதவ முன்வர வேண்டும். மின்சாரப் பயன்பாட்டுக்கு அதிக கட்டணம் செலுத்தும் நாடுகளுள் இலங்கையும் அடங்கும். ஆகவே உற்பத்தி அதிகரிப்பினால் கட்டணச் செலவு குறையும். அதற்கான மாற்று வழிகளையும் அரசு யோசித்து வருகின்றது.

சூரிய ஒளியிலிருந்து (ஷிolar powலீr) மின்சக்தியை உற்பத்தி செய்வதன் மூலம் கிராமிய மக்களின் மின்சக்தித் தேவையை ஈடு செய்ய முடியும். அத்துடன் காற்றி லிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் நாட்டின் தேவைக்கான மின்சாரம் கிடைக்கும்.

இலங்கை மக்கள் சூரிய சக்தியை பயன்படுத்தி தங்கள் மின்சார சக்தியை பெற்றுக் கொள்ளும் ஒரு புதிய யுகம் ஆரம்பமாகி யுள்ளது. புறுத்தங்கங்க வில் அமைக்கப் பட்டுள்ள பாரிய சூரிய சக்தியின் மூலம் 500 கிலோவாற் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டம் இந்நாட்டு மக்களுக்கு கிடைக்கும் மற்றுமொரு வரப்பிரசாதம். கொரிய அரசாங்கத்தின் மாதிரித் திட்டத்தின் கீழ் 412 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இத்திட்டத்தின் மூலம் 1.5 ஹெக்ரயர் பரந்த பிரதேசத்துக்கு மின்சாரத்தை விநியோகிக்கக் கூடியதாக இருக்கும். இயற்கையான சுற்றாடலுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாத இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்தின் பயன் அம்பாந்தோட்டை மக்களுக்கு கிடைத்துள்ளது. 2015ஆம் ஆண்டில் நாட்டின் முழு மின்சார தேவையில் 10 சதவீதமான மின்சாரத்தை சூரிய சக்தியின் மூலம் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்த முன்மாதிரி சூரிய சக்தியின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தினால், மின்சார உற்பத்திக்காக வருடாந்தம் விரயமாகும் இரண்டு லட்சம் லீற்றர் டீசல் பாவனையை தவிர்த்துக்கொள்ள முடியும் என அரசு நம்புகின்றது.

ஒரு காலத்திலே நாட்டின் மின்சாரத் தேவையை ஓரளவு பூர்த்தி செய்து வந்த நீர்மின்சார உற்பத்தி இன்று கணிசமான ளவு வீழ்ச்சி கண்டுள்ளது. நீர் மின்சாரத் தின் பிறப்பிற்கு உறுதுணையாக நின்ற நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வரும் காரணத் தினால் அவற்றின் மூலம் பெறப்படும் மின்சார உற்பத்தியின் அளவு வீழ்ச்சியடைந்தது. எனவே தான் டீசல் மூலம் இயங்கும் அனல் மின்சார உற்பத்தியின் தேவை உணரப்பட்டது. மின்சாரக்கட்டணம் அதிகரிப்பதற்கு இந்த புதிய மாற்றமும் ஒரு காரணமாக கருதப்பட்டாலும் வேறு மார்க்கம் இல்லாத நிலையே இருந்தது.

இதைத்தவிர மின்சாரத்தை உற்பத்தி யாக்குவதற்கு தேவையான டென்ரோ மற்றும் கிளிசீரியா போன்ற மரங்களை பயன்படுத்தும் நோக்கில் பெருந்தோட்டங் களை உண்டாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக இலங்கையரும் சீனர் ஒருவரும் இணைந்து உயிர்த்திணி வைப் பயன்படுத்தி 10 மெகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்யும் 10 மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கவுள்ளமையை நாம் இங்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டும். எனினும் மனித நாகரிகம். சுவட்டு எரிபொருள் சகாப்த முடிவை எட்டி வருவதனாலும் சுவட்டு எரிபொருள் பாவனை உலகின் பல பிரச்சினைகளின் பின்னணியாக உள்ளதாலும் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதே மிகவும் வினைத்திறன் கொண்டது என்ற கருத்தே மேலோங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபை நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறப்படுகின்றது. இத்தகைய நஷ்டத்தைக் குறைக்க வேண்டும். அதற்கான உடனடி நடவடிக்கைகள் தேவை. மின்சார சபை நஷ்டமடைவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று சட்டவிரோத மின்சாரம் பாவிப்போர் தொகை பெருகிவருவதே. அண்மையிலே நாட்டின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் இருந்து சட்டவிரோத மின்பாவனையாளர் பலர் குற்றவாளிகளாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை தற்போதைய சட்டவிதிகளில் போதாமல் இருப்பதாகக் கருதப்படுகின்றது. ஆகவே இறுக்கமான சட்ட நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத மின்சார பாவ¨யாளருக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது காலத்தின் தேவையாகின்றது. இது மாத்திரமன்றி மக்களின் பொறுப்பற்ற தன்மையினால் மின்சாரம் வீணாகின்றது. அலுவலகங்களில் ஆளில்லா நேரங்களிலும் மின்குமிழ்கள் ஒளிர்கின்றன. விசிறிகள் இயங்கிக்கொண்டி ருக்கின்றன. தெரு விளக்குகள் பகலிலும் எரிகின்றன.

இரவு நேரங்களில் மின் இணைப்பை கொழுவிப் பெறுகின்ற சட்டவிரோதமான செயற்பாடுகள் இன்னுமே தொடர்கின்றன. அது மாத்திரமன்றி உரிய காலத்தில் மின் கட்டணங்களைச் செலுத்தாமையினால் மின்சாரசபைக்கு மேலதிகக் கடமைகளும் கஷ்டங்களும் ஏற்படுகின்றன. எனவே தேசபக்தியுடனான பயன்பாடே இன்றியமையாததாகின்றது. நிர்வாக அமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் புதிய அமைப்பு முறையை ஏற்படுத்தி நஷ்டத்தைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும.

இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியிலும் இலங்கையில் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் என்ற அரசின் திட்டத்துக்கமைய காரியங்கள் நடந்து வருகின்றன. போர்க்காலச் சூழலால் இருளடைந்து கிடந்த வடபகுதி இன்று ஒளிர்பெறத் தொடங்கியுள்ளது. மெழுகுதிரியின் வெளிச்சத்தில் காலங்கடத்திய அப்பாவி மக்களுக்கு இன்று மின் வெளிச்சம் கிடைக்கின்றது.

குடாநாட்டில் தடையற்ற மின்விநியோகம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 12ஆம் திகதி யாழ். சென்ற ஜனாதிபதி அவர்கள் சுன்னாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மூன்று, 8 மெகவற் மின் பிறப்பாக்கிகளை உத்தியோகபூர்வமாக இயக்கிவைத்தார். ஏற்கனவே நொதேர்ன் பவர் மின்பிறப்பாக்கிகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்துக்கு மேலதிகமாக 24 மெகாவற் மின்சாரம் கிடைக்கவிருப்பதால், தடையற்ற மின்விநியோகத்தை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையிலிருந்து பிரதான மின் விநியோகமான லக்ஷபான மின்சாரம் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதி வரையில் இப்போது கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் யாழ்ப்பாணம் முழுவதும் லக்ஷபான மின்சாரம் வழங்கப்படக்கூடியதாக இருக்கும் என்றும் மின்சாரசபை தெரிவித்தது.

லக்ஷபான மின்சாரத்தை வழங்குவதற்கு வேண்டிய 132 மெகாவற் கொள்ளளவுள்ள மின்கடத்திகள் இப்போது யாழ். குடாநாட் டின் பல பகுதிகளிலும் பொருத்தப்பட்டு வருகின்றன. சாவகச்சேரி, பருத்தித்துறை யின் சில பகுதிகளுக்கு அவை பொருத் தப்பட்டுவிட்டன. ஓகஸ்ட் மாதத்துக்குள் யாழ். குடாநாடு முழுவதும் 132 மெகாவற் கொள்ளளவுள்ள மின்கடத்திகள் பொருத் தப்பட்டுவிடும் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

தற்போது கிளிநொச்சியில் அமைக்கப் பட்டுள்ள உப மின்நிலையம் மூலமாகவே யாழ் நல்லூர் பகுதி வரையில் லக்ஸபான மின்சாரம் கொண்டுவரப்பட்டது. சுன்னாகத்தில் உப மின்நிலையம் அமைக்கும் பணிகள் ஓகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்யப்பட்டு, குடாநாடு முழுவதும் லக்ஷபான மின்சாரம் வழங்கப்படும் எனவும் மின்சாரசபை அறிவித்துள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.