புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
ஹைக்கூ ரகசியமும் வியக்கும் கவி வரியும்

ஹைக்கூ ரகசியமும் வியக்கும் கவி வரியும்

மரபுக்கவிதை, புதுக்கவிதை என பல்வகைக் கவிதைகளை நாம் படித்துச் சுவைத்திருக்கின்றோம். கேட்டு ரசித்திருக்கின்றோம். இவற்றில் சிலவற்றின் அர்த்தங்கள் மிக எளிமையாக எமக்குப் புரிந்து விடும்.

இன்னும் சில எத்தனை தடவைகள் வாசித்தாலும் கேட்டாலும் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்று கடைசி வரை புரிந்து கொள்ள முடியாதிருக்கும்.

கவிதையின் மற்றுமொரு வகையை நாம் ஹைக்கூ என்கிறோம். ஹைக்கூக் கவிதைகள் ஒரு கார்ட்டூனைப் பார்த்து அதன் அர்த்தத்தை அல்லது அது சொல்ல வருவதை உணர்ந்து கொள்வதைப் போலாகும்.

சில கவிதைகள் மிகத்தெளிவாகவும் இன்னும் சில புரியாததாகவே அமைந்தும் விடுவன.

அண்மையில் படித்த சில கவிதைகள்:

உடைந்த பொம்மை

அழாத குழந்தை

கவலையோடு அப்பா

இது வண்ணை சிலாவின் ஹைக்கூ கவிதை.

இலவசமாக

நீந்திச் சென்ற நிலா

மழை

இது செல்லம்மாள் கண்ணன் உடையது.

எளிய நினைவுச்சின்னம்

என் தந்தை சாய்ந்த

தூண்

இந்தக் கவிதையை வடித்திருப்பவர்

மித்ரா.

நாட்குறிப்பில்

முகவரிகள்

மறந்து போன முகங்கள்

டி. ராஜேந்திரன் எழுதிய கவிதை இது.

இந்தியக் கவிஞர் ஒருவர் அடிக்கடி குறிப்பிடுவார், ஹைக்கூ கவிதைகளை ஒப்பனை செய்யாதீர்கள். ஹைக்கூக்கு நேரடியாகப் பார்த்த காட்சிகள் முக்கியம் என்று.

அவரே நேரடியையும் ஒப்பனையையும் இப்படித் தருகிறார்.

வழிப்பறிக் கொள்ளை

வேடிக்கை பார்க்கிறது

தலைக்கு மேல் நிலா

இது கவிஞர் முருகேசு எழுதியது.

சற்றே இதனைத் திருத்தும் போது

விழிப்பறிக் கொள்ளை

தலைக்கு மேல் நிலா

இவ்வாறு மதுமலரின் இன்னொரு கவிதை அப்படியும் இப்படியுமாக

வெறுமையாய்

யாரின் கூந்தலோ

சாலையில் ரோஜா

திருத்திப் பார்த்தால் வரும் ஹைக்கூ

வெறுமையாய் கூந்தல்

சாலையில் ரோஜா!

இது ஹைக்கூ அல்ல. ஆண்களுக்குச் சமமாக வெளிப்படையாக கவிதை படைக்கும் ஒரு பெண் கவிஞரின் கவிதை இது.

இடமற்று நிற்கும்

கர்ப்பிணியின்

பார்வை தவிர்க்க

பேரூந்துக்கு வெளியே

பார்ப்பதாய்

பாசாங்கு செய்யும் நீ

என்னிடம்

எதை எதிர்பார்க்கிறாய்

காதலையா.....?

சுகிர்தராணியின் இந்தக் கவிதை

காதலர் தினம் கொண்டாடி மகிழ்ந்த காதலனுக்கான சாட்டையடி!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.