புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 


 

கிளிநொச்சி அம்பாள்புரத்தில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் விவசாயப் பண்ணையில் அறுவடை செய்யப்பட்ட சோளம் குவிக்கப்படும் காட்சி. (படம்: சமந்த வீரசிறி)

 


 

பதுளை பசறையில் ஆரம்பமான முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, சப்ரகமுவ முதலமைச்சர் மஹிபால ஹேரத், வடமேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்க, தென் மாகாண முதலமைச்சர் சான்விஜேலால் டி சில்வா, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ். எம். ரஞ்சித், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ஆகியோர் செயலாளர்களுடன் எடுத்துக் கொண்ட படம். (ஹாலிஎல தினகரன் நிருபர் பாயிஸ்)

 

துப்பாக்கி சூட்டில் சண்டேலீடர் ஊடகவியலாளர் காயம்; உடன் விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பாராஸ் செளக்கத் அலி இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.  இச்சம்பவம் குறித்து உடனடி விசாரணைளை ஆரம்பிக்குமாறு.......

                                                       விவரம் »

                                                        

உயர் கல்வியை தொடரும் மாணவருக்கு விசேட கடன் வசதி

புதிய சட்டம் விரைவில் அறிமுகம்;

பல்கலைக்கழக மாணவருக்கும் வாய்ப்பு

இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர் கல்வியை தொடரவிரும்பும் மாணவர்கள் அனைவருக்கும் கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவான புதிய சட்டமொன்றை உயர்கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார். மருத்துவ துறை, பொறியியல் துறை, கணக்கியல்துறை, உள்ளிட்ட வேறு உயர்கல்வியில் மேலதி கமாக கல்வியைத் தொடருவதற்கு தேவையான பணத்தைக் கடனாகப் பெற்றுக்கொடுக்கவே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

                                                           விவரம் »

மேற்கத்தேய அழுத்தங்களுக்கு அடிபணிபவர்களால் நாட்டின் கலாசாரம், குடும்ப பிணைப்பு சீர்குலைகின்றது

தொழில்வாய்ப்புகளுக்கேற்ப எமது கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படல் வேண்டும் லோரன்ஸ் செல்வநாயகம்

பீரங்கி, வெடிகுண்டுகளை விட இலங்கையில் நிலவும் குடும்பப் பிணைப்பு பலமானது எனவும் உலகமே இதனை வியப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

மேற்கத்தேய அழுத்தங்களுக்கு அடிபணிபவர்களால் நாட்டிலுள்ள குடும்பப் பிணைப்பும் எமது பெருமைக்குரிய கலாசாரமும் சீர்குலையும் அபாயம் உள்ளதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி இவற்றைக் கட்டிக்காப்பது அனைவரதும் பொறுப்பும் கடமையுமாகுமெனவும் தெரிவித்தார்.

                                                           விவரம் »

தப்பியது பூமி!

ஆஸ்ட்ராய்ட் 2012 Da14

இராட்சத விண்கல் கடந்து சென்றது

ரஷ்யாவின் யூரல் மாநிலத்தில் விண்கல் வெடித்துச் சிதறியதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1200 ஆக அதிகரித்துள்ளது. இதில் 200 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

வெள்ளிக்கிழமை காலை ரஷ்யாவில் விண்கல் வெடித்துச் சிதறிய போது கால்பந்து மைதானம் போல் காட்சி தரும் ஆஸ்ட்ராய்ட் 2012 டி.ஏ.14 என்ற பாரிய விண்கல் பூமிக்கருகே பூமியை கடந்து சென்றுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் பூமியை தாக்கும் என பலரும் கூறியதுடன் தொலை தொடர் புகள் அனைத்தும் சிதைந்து விடும் என்றும் எச்சரித்திருந்தனர்.

                                                           விவரம் »

 

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk


 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.