புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 

தேசிய பொருளாதார வளப்பங்கீடு தொழிலாளர்களைச் சென்றடைய வேண்டும்

தேசிய பொருளாதார வளப்பங்கீடு தொழிலாளர்களைச் சென்றடைய வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட்டால் மாத்திரமே பெருந்தோட்டத்துறையின் வீழ்ச்சியை தடுக்க முடியும். தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு கைச்சாத்திடப்படும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான கருத்துக்கள் வெளிவரும் இவ்வேளையில் பெருந்தோட்டத்துறையுடன் சார்ந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகளை அkஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அkஸ் மன்றத்தின் தலைவர் அஷ்ரப் ஏ அkஸ் முன்வைத்துள்ளார்.

மறைந்த தொழிற்சங்கவாதி அப்துல் அkஸ்

அkஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அkஸ் மன்றத்தின் தலைவர் அஷ்ரப் ஏ அkஸ் தனது தந்தை மறைந்த போதிலும் அவர் கொண்டிருந்த கொள்கைகளையும் இலட்சியங்களையும் தொடர்ந்து முன்னெடுக்கும் நோக்குடன் செயற்பட்டு வருகிறார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக குரல்கொடுத்து வருவதுடன் அkஸ் மன்றத்தின் மூலம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார் புளுமெண்டால் வீதியிலுள்ள அலுவலகத்தில் அவரைச் சந்தித்து பெருந்தோட்டத்துறை எதிர்கொள்ளும் சவால்கள், தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் அவர்களின் வாழ்க்கைத்தர மேம்பாடு குறித்து வினவினோம். அவர் தெரிவித்த கருத்துக்கள் இங்கு தொகுத்து தரப்படுகிறது.

ngருந்தோட்டத்துறை முழுமை யாக அபிவிருத்தியடைவதற்கு அனைத்து அமைச்சுக்களுட னான ஒரு ஆக்கபூர்வ இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் அந்தந்த அமைச் சுக்களிடமிருந்தும் பெருந்தோட்டத்துறை அபிவிருத்திக்குத் தேவையான கணிசமான பங்களிப்பையும் வளங்கலையும் பெற்றுக்கொள்ள க்கூடியதாக இருக்கும்.

நாடளாவிய ரீதியில் நாட்டின் அரச வளங்களை பகிர்ந்தளிக்கும் இயந்திரங்க ளாக அமைச்சுக்களே செயற்படுகின்றன. அந்தந்த அமைச்சுக்களிடமிருந்து குறிப் பாக தோட்டத் துறையின் அபிவிருத்திக் குத் தேவையான நிதி மற்றும் மனிதவள பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கு வழி காட்டியாகவும் அந்தச் சமூகத்துடனான இணைப்பாளர்களாக தகுதியான உத்தியோ கத்தர்களை அரச சேவையில் இணைத் துக்கொள்வதன் மூலம் பெருந்தோட்டத் துறையின் தேவைகளை இனங்கண்டு தேவையான நிதி ஒதுக்கீடுகளை நேரடி யாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றார் அஷ்ரப் ஏ அkஸ்.

இந்திய வர்த்தகர்களையும், பெருந்தோட் டத் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களையும் இந்திய வம்சாவழி யினர் என அழைக்கின்றோம். வர்த்தக நோக்குடன் வந்தவர்கள் நகர்ப்புறங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் பிரச்சினைகளை பேசித்தீர்த்துக்கொள்ளக் கூடிய அறிவை பெற்றிருந்தனர். ஆனால் தோட்டத்தொழிலுக்காக வந்தவர்கள் அடிமைகளாக நடத்தப் பட்ட காலமது. அவர்கள் தமது பிரச்சினை களை எடுத் துக்கூறி அதற்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை அப்போதி ருந்தது. இந்நிலையில் தான் இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. அக்காலப் பகுதியில் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்க இ.தொ.கா மற்றும் இலங்கை இந்திய காங்கிரஸ் ஆகிய இரண்டு தொழிற் சங்கங்கள் மட்டுமே இயங்கி வந்தன. இன்று அந்நிலை மாறி தொழிலாளர்களுக்காக பல தொழிற்சங்கங்கள் இயங்கி வருகின்றன. இருப்பினும் தொழிலாளர்க ளின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. பிரஜாவுரிமைப்பிரச்சினை அப்போது பெரும் பிரச்சினையாக இருந்தது. பிரஜா உரிமைக் கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்டங்கள் பல தரப்பினரா லும் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் நாட்டில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான போராட் டங்களும் வலுப்பெற்றிருந்த நிலையில் அனைத்துக் கட்சி மாநாட்டின் மூலம் அதற்கு தீர்வு காணப்பட்டது. எனினும் அவை பெயரளவில் மாத்திரமே இருக்கிறது. நாட்டில் ஏனைய மக்களைப் போன்று தொழிலாளர்களும் சரிசமமாகப் பார்க்கப்பட வேண்டும்.

அஷ்ரப் அkஸ்

அவர்களுக்கு வாக்க ளிக்க மட்டுமே உரிமை யிருக்கிறது. ஏனைய உரிமைகளை அனுபவிப் பதற்கோ தமக்கென ஒரு சொந்தக் காணியை பெற் றுக்கொண்டு வாழ்வதற்கோ முடியாதிருக்கிறது. இந்நிலை மாற வேண்டுமானால் அரச நிர்வாகம் தோட்டப்பகுதி மக்களுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டி ருக்க வேண்டியது அவசியமாகும்.

அரசுக்கு தோட்டப்பகுதி மக்களோடு நேரடித் தொடர்பு எதுவும் இல்லை. எந்த ஒரு அமைச்சும் மலையக மக்களு க்கு நேரடியாக எதையும் செய்ய வில்லை. சில தோட்டங்களில் வைத்தியசாலைகள் வெள்ளை யரின் ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போலவே இன்னமும் இருக்கிறது. மலையகத்திலிருந்து எத்தனை தாதியர் வந்திருக்கிறார்கள். எத்தனை வைத்தியர்கள் வந்திருக்கிறார்கள். கல்வியைப் பொறுத்த வரையில் அண்மையில் தான் அனேக பாட சாலைகள் அரசாங் கப் பாடசாலை களாக மாறின.

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில் யாவருக்கும் புகலிடம் எனும் திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். ஆனால் அதில் பெருந்தோட்டத் தொழி லாளர்கள் உள்ளடக்கப்படவில்லை. அக்காலத்தில் அவர்களுக்கு ஒரு வீடு சொந்தமாக இருக்கவில்லை. சுகாதாரம், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத் திக் கொடுக்கப்படவில்லை. காணிப் பிரச்சி னையைப் பொறுத்தவரையில் பெருந் தோட்டத்தில் கூலித் தொழிலாளர்களாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட காலத் திலிருந்தே லயன் குடியிருப்பு களிலேயே தொழிலாளர் கள் வாழ்ந்து வருகின் றனர். வெள்ளையரின் காலத்தில் அமைக்கப் பட்ட இந்த லயன் குடி யிருப்பிலேயே இன்னமும் வாழ்ந்துவரும் இவர்களு க்கு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிகாவின் ஆட்சிக்காலத் தில் உட்கட்ட மைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டபோது 20 பேர்ச் காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்காணியை பெற்றுக்கொண் டவர்களும் இருக்கிறார்கள். பின்னர் அத்தாவுட செனவிரட்ன பெருந்தோட்டத் துறை அமைச்ச ரானபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இத்திட்டங்கள் முறையாக அமுல்படுத்தப் படாமையால் இதுவரை சொந்த வீடு இல்லாத நிலையில் இருக்கும் தொழிலாளர் களின் எண்ணிக்கை அதிகமாகும். லயன் குடியிருப்புக்கள் தமக்குச் சொந்தமானது என கூறிக்கொண்டாலும் அதற்கான உரித் துரிமை இல்லை. சொந்த வீடு என்றால் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏற்கனவே கூறப்பட்டவாறு 20 பேர்ச் அல்லது 10 பேர்ச், குறைந்தது 7 பேர்ச் காணியாவது வழங்கப்பட வேண்டும். தோட்டங்கள் கிராமங்களாக மாற வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வைக்காண முடியும்.

நாட்டில் 40இற்கு மேற்பட்ட அமைச்சுக் கள் இயங்கி வருகின்றன. எனினும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த அமைச்சுக்களினூடாக வழங்கப்படும் அனைத்தும் தொழிற்சங்கங்களினூடாகவே செல்கிறது. எனவே அரச நிறுவனங்கள் பெருந்தோட்ட மக்களுக்கு நேரில் சேவை யாற்றக்கூடிய நிலை வரவேண்டும். பெருந் தோட்டத்துறை அபிவிருத்திக்கென ஒதுக் கப்படும் நிதி அவர்களைச் சென்றடைகி றதா என ஆராய வேண்டும். கல்வி, சுகாதாரம், இளைஞர் அபிவிருத்தி, சுகா தாரம் போன்ற விடயங்கள் பெருந்தோட் டங்களை முழுமையாகச் சென்றடைய வில்லை. பெருந்தோட்டங்களிலிருந்து பல்கலைக் கழகங்களுக்கு செல்லும் மாண வர்களின் எண்ணிக்கை இன்னமும் குறை வாகவே இருக்கிறது. பல்கலைக்கழகங்க ளுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள் ளும்போது தரப்படுத்தல் மூலமே சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அதனை இன அடிப்படையில் எடுக்கக்கூடாது. சமமான வாய்ப்புக்கள் இருக்க வேண்டுமென்றால் பெறுபேறுகளும் சமமாக இருக்க வேண்டும். பெறுபேறுகள் சமமாக இல்லையென்றால் தெரிவு செய்யும் முறையில் ஏதோ தவறு கள் இருக்க வேண்டும். தோட்டத்தொழி லாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக உங்கள் தொழிற்சங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது? அக்காலத்தில் வாழ்க்கைச் செலவு அடிப் படையில் சம்பள நிர்ணய சபை ஒரு புள்ளிக்கு 6 சதம் வீதமாக சம்பளம் வழங் கப்பட்டது. அப்போது தோட்டத்தொழிலா ளர்களுக்கு தோட்ட நிர்வாகமே அவர்களின் சேமநலன்களுக்காக உதவி வந்தன. பெருந்தோட்டங்கள் அரச மயப்படுத்தப் பட்டதன் பின்னர் அச்சலுகைகள் வழங் கப்படவில்லை. தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டதன் பின்னர் தொழிலா ளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. அந்தக்காலத்தில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பள நிர்ணயசபை ஊடாகவே செய்யப்பட்டது. ஒரு தொழில் நிறுவனத்தின் சார்பிலும் அரசாங்கத்தின் சார்பிலும் தொழிற்சங்கங்கள் சார்பிலும் பிரதிநிதிகள் அடிக்கடி ஒன்றுகூடி சம்பள உயர்வு தொடர்பாக ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்கும் நிலை இருந்தது. அது இல்லாமல் போனபின் கூட்டு ஒப்பந்த முறை ஆரம்பமானது.

நடைமுறையில் இருக்கும் அந்த கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை தொழிலா ளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகியன கைச்சாத்திடுகின் றன. சட்ட ரீதியான இந்தக் கூட்டு ஒப்பந்தம் அவசியமானதாக இருப்பினும் நடைமுறையில் பல குறைபாடுகளும் இருக்கின்றன. ஏனைய 45 சதவீதமான தொழிற்சங்கங்கள் வெளியில் இருக்கின் றன. இது நியாயமற்றது. இந்நிலை மாற்றப் பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழி சங்கங்களுடன் கைச்சாத்திடாத ஏனைய தொழிற்சங்கங்களுடன் தொழிலா ளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக கலந்துரையாடப்பட வேண்டும். அரசாங் கம், பெருந்தோட்ட முதலாளிமார் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். தொழிற்சங்க அரசியல் பேதங் களையும் கொள்கை கோட்பாடுகளையும் ஒருபக்கம் வைத்துவிட்டு அதனை போட்டி ரீதியாகப் பார்க்காமல் அவர்களையும் இணைத்து கலந்துரையாடப்பட்டு ஒரு தீர்க்க மான முடிவை எடுக்க வேண்டும். நாம்தான் பெரியவர் என்ற எண்ணம் இருக்கக்கூடாது. சம்பளப் பிரச்சினை தொடர இடமளிக்காமல் நியாயமான சம்பள உயர்வொன்றை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். நியாயமான சம்பள உயர்வு வழங்கினால் மட்டுமே பெருந்தோட் டத்துறை சீராக இயங்கவைக்க முடியும். அத்துடன் தொழிலாளர்கள் வெளி யிடங்களுக்கு வேலைவாய்ப்பு தேடிப் போக வேண்டிய அவசியம் எழாது.

பெருந்தோட்டத்துறை வீழ்ச்சியடையும் அபாயம் நிலவுவதாக கூறப்படுகிறதே?

பெருந்தோட்டத்துறை வீழ்ச்சியடைவதற் கான காரணம் எதுவும் இல்லை. ஆனால் வீழ்ச்சி யடையும் நிலையிலுள்ள தொழிற் துறையில் இருந்து செஸ் வரியை அறிவிடு வதென்பது நியாயமானதா? இதற்கு சர்வ தேச ரீதியான பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். அத்துடன் அவர்களின் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம் படுத்தக்கூடியதாக இருக்கும். சில பின் தங்கிய தோட்டப்பகுதிகள் இன்னமும் எந்தவித அபிவிருத்தியும் அடையாத நிலையிலேயே இருக்கிறது. முழுமையான அபிவிருத்தியை எட்டவேண்டுமென்றால் ஒவ்வொரு அமைச்சிலும் பெருந்தோட்ட ஒருங்கி ணைப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் வழங்கல் நேரடியாக பெருந்தோட்ட மக்களைச் சென்றடையும் விதத்தில் அவர் செயற் பட வேண்டும் என்றார் அஷ்ரப் அkஸ்.

பி. வீரசிங்கம்...-

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.