புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
பன்முக ஆளுமை மிக்க பேராசான்

பன்முக ஆளுமை மிக்க பேராசான்

ஈழத்தில் அறுபத்துநான்கு சக்திபீடங்களுள் ஸ்ரீ புவனேஸ்வரி பீடம் என மிளிரும் நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேவஸ்தானத்தின் பரம்பரை மரபுவழி பரமலிங்கம் கந்தசாமி கனகசபாபதி எனும் அருள்பாலிக்கும் ஸ்ரீமதி சுந்தரம்பிள்ளை கோகிலாம்பாள் என்னும் வித்துவாட்டிக்கும் மூத்தபுதல்வன் வாசீககலாநிதி, ளிr கனகசபாபதி நாகேஸ்வரன் (05.08.1952) இல் பிறந்தார். கலாநிதி நாகேஸ்வரன், இலக்கிய ஆய்வாளர், கலைஞர், கல்விமான், இன்னிசைசொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர், நேர்முகவர்ணனையாளர், பண்ணிசைக்கலைச் செல்வர் எனும் பல பட்டங்களைப் பெற்றவர்.

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி வித்தியாசாலை, நயினை மகாவித்தியாலயம், நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட, குமார மகாவித்தியாலயம், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதியின் மேற்பார்வையின் கீழ் “ஈழத்து நவீன தமிழ்க் காவியங்கள்” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து தமிழிலக்கியத்தில் கி.தி (சிons) கலைமாணி சிறப்புப்பட்டத்தினையும் ஷிலீணீonuனீ விlass- uppலீr) அதன் பின் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளையின் மேற்பார்வையின் கீழ் ணி.தி. (முதுகலைமாணி) பட்டத்தினையும் முறையே 1979, 1988ம் ஆண்டுகளில் பெற்றார்.

போராதனைப் பல்கலைக்கழகத்தில் 2008ம் ஆண்டு தமது கலாநிதிப்பட்டத்தினைப் பெற்றார். இவரெழுதிய “ஈழத்துச் சுதேச தமிழ் மருத்துவ இலக்கியங்கள் மொழி, இலக்கிய ஆய்வு” என்னும் ஆய்வேடு மணிவிழாவிலன்று நூலாக வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மொழித்துறையில் முதுநிலைத் தமிழ் விரிவுரையாளராகவும் இணைப்பாளராகவும் 1996 ஆம் ஆண்டில் பணியேற்றார். இதற்கு முன்னதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 1986ம் ஆண்டு முதல் உதவி விரிவுரையாளராகவும், சித்த மருத்துவத்துறையிலே தமிழ் விரிவுரைகளையும், நிகழ்த்தினார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும், தமிழ் இணைப்பல்கலைக்கழகத்திலும் கலைப்பட்டதாரிகள் பலரை உருவாக்கினார்.

1980களில் ஈழநாடு பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் 1980 முதல் 1985வரை ஐந்தாண்டுகள் இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், பகுதிநேர அறிவிப்பாளராகவும் நேர்முகவர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளர்.

இந்திய அஹமாபாத்திலும், திருச்சி, மலேஷியா, இலண்டன், சுவிஸ்லாந்து போன்ற நாடுகளில் நடைபெற்ற இலக்கிய, சமய, சர்வதேசமாநாடுகளிலே 1979. 1983, 2002, 2004 ஆண்டுகளிலே பங்குபற்றினார். இலண்டன், கனடா ஆகிய நாடுகளிலே வெளியிடப்பட்டுள்ள சமய இலக்கிய மலர்களில் இவரது ஆய்வுக்கட்டுரைகள் தமிழிலில் பிரசுரமாகியுள்ளமை பெருமைக்குரிய விடயமே. ஸி.றி தமிழ் வானொலியிலும், கனடாவின் கீதவாணியிலும் டென்மார்க் பிரண்டாபதி ஸ்ரீ அபிராமி அம்மன் உபாககித் தாயாரது அருளொளி நிகழ்ச்சிகளிலே பங்கேற்று ஆன்மீக பேருரைகளை நிகழ்த்தியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தின் தேசிய சேவையிலும் ஆன்மிக நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தவர் கலாநிதி நாகேஸ்வரன் ஆவார்.

வாசீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரனின் மணிவிழாவினை விரைவில் நடாத்த, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறிய, வெளியேறவுள்ள மாணவர்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

நல்லையாதீனம், பருத்தித்துறை சாரதா சேவாச்சிரமம், கொழும்பு விவேகானந்த கலை, அகில இலங்கை இந்துமாமன்றம், கொழும்பு தமிழ்ச்சங்கம், அகில இலங்கை கம்பன் கழகம், யாழ்ப்பாணம் திருநெறிய தமிழிசைக்கழகம் கலாசார அமைச்சின் கலைக்கழகத்தின் இலக்கியக்குழு உறுப்பினர், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழக இந்துமாமன்றம், கொழும்பு பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் ஷிri ழிanka பிounனீationlnstitutலீ (ஷி.ழி.பி.யி) யாழ்ப்பாணச் செஞ்சிலுவைச் சங்கம், இந்து சமய கலாசார அமைச்சு, இந்துசமய கலாசாரத் திணைக்களம் ஆகிய நிறுவனங்களிலே இலக்கிய, சமய விரிவுரைகளை நிகழ்த்தியுள்ளார். இன்றும் இவற்றின் வேலைத்திட்டங்களிலும், நிகழ்வுகளிலும் பங்கேற்றுப் பணிபுரிந்து வருகிறார். தேமதுரத் தமிழ் ஓசையினை உலகெலாம். பரப்ப கால் நூற்றாண்டு காலம் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையில் சைவநற்சிந்தனை, கலைக்கோலம், இலக்கிய பேச்சுகள், இந்துசமய பேச்சு ஓசைச்சுடர், கலந்துரையாடல்கள், சொல்வளம் பெருக்குவோம், சைவாலயத் திருவிழாக்களின் நேர்முக வருணனைகள், நேர்காணல், கலந்துரையாடல்கள் அரங்கம் என்பவற்றில் பங்கேற்று இன்றுவரை சேவையாற்றி வருவதும் தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்ததே.

யாழ்பல்கலைக்கழகக் கலாசுரபி (1979) தடுத்தாட்கொண்ட புராணம் (பல்கலைக்கழக உள்வாரி வெளிவாரிப் பட்டதாரியானவர்களுக்கான பாடநூல்) (1989), சிவதத்துவமலர் (1996), நவநாதம் (1998), பக்திமலர் (2004) என்னும் நூல்களின் ஆசிரியரும் இவரே, முனைவர் கனகசபாபதி நாகேஸ்வரன் பாடசாலை மாணவப் பருவத்திலேயே இதழாசிரியராகச் சிறப்புப் பணியாற்றினார். மகாஜனக் கல்லூரியில் “சங்கமம்” என்னும் கலை, இலக்கியக் காலாண்டிதழின் ஆசிரியராகவும் , 1979 - 1980 களில் யாழ்ப்பாணம் ஈழநாடு செய்தி இதழின் துணையாசிரியராகவும் பணியாற்றினார். தமிழகத்திலிருந்து எழுதும் கே. மகாதேவா, கோபு எனப்படும் கோபாலரத்தினம், சபாரத்தினம் , சச்சி போன்றோருடன் கடமையாற்றியவர் இவர். பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபகத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பகுதிநேர அறிவிப்பாளராகவும், உரையாளராகவும், நேர்முகவர் ணனையாளராகவும், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் (1980 -1985) வரை பணியாற்றினார். சீனா தியிகிளி வானொலி, தொலைக்காட்சிப் பயிற்சிக்குப் புலமைப்பரிசில் பெற்றுச் சென்று திரும்பினார்.

பன்முக ஆளுமைவீச்சுக் கொண்ட வல்லவராய், தமிழ்கூறு நல்லுலகினில் நவீன எழுத்தாளனாய்த் தோன்றிவாழும் எம் நல்லாசான் பாதம் பணிந்து, அவரது பணிகள், உயர்வுகள், அபிலாசைகள் யாவும் உலகில் தமிழையும், சமயத்தையும், சொற்பொழிவுக்கலையையும் உயிர்ப்பிக்க வேண்டியும் அவரிடம் என்றுமே நிலைத்த எளிமையான உயர் பண்புகள் யாவும் அவர் தம்மாணக்கர்களுக்கு வழிகாட்டு முறையில் அமையவேண்டும் என வேண்டி இவரது கல்விப்புலம் சிந்தனை மென்மேலும் பயனுடைய பலாபலன்களை எம்போன்றோருக்கு வழங்கவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” திருமூலர்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.