புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
எமக்கு அரசாங்கத் தொழில் தேவையில்லை பன்வில கிராமத்தில் ஒரு புதிய அனுபவம்

எமக்கு அரசாங்கத் தொழில் தேவையில்லை பன்வில கிராமத்தில் ஒரு புதிய அனுபவம்

பன்னலையை அக்காலத்தில் பன்வில என்றே அழைத்தார்கள். பொசன் சந்திர ஒளியில் கொத்மலையிலுள்ள பூண்டுலு ஓயா விளையாட்டரங்கானது மக்களால் நிரம்பி வழிந்தது. மாலை இருள் சூழ்ந்து வரும் வேளையில் காவிய iர பண்டித விசித்ர பாணி பன்னல ஞானாலோக தேரர் அங்கு மேடைக்கு அழைத்துவரப்பட்டார். அத்தகைய ஒரு ஆரவாரத்தை நாம் எங்குமே காணவில்லை.

ஆரம்பத்தில் விசுவாசிகள் இரு கைகளையும் கூப்பி கழுத்தின் மேல் வைத்துக் கொண்டனர். அதற்கு மத்தியில் வந்த தேரர் பிரார்த்தனையோடு கூடவே உலாவந்தார். 1980 ஆம் ஆண்டுகளில் வானொலி மற்றும் பல தனியார் அலைவரிசைகளிலும் கவிதை மற்றம் போதனைகளை மிக இனிமையாக வழங்கிய ஞானாலோக தேரரின் கிராமத்துக்கு நான் முன்னொரு நாள் சென்றேன்.

காரணம் அவரின் போதனைகளைக் கேட்கவல்ல. கவிதைகளால் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொண்ட கிராமிய மக்களைத் தேடியே சென்றேன். கேகாலை மாவட்டத்தில் புலத்கொகுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் பன்னல வடக்கு கிராமம் அவர் பிறந்த ஊராகும்.

தேரரே புத்த பெருமானுக்கு அடுத்த கவிஞராவார். ஆனால் புத்த பெருமான் பாடல்களைப் பாட விரும்பவில்லை என்பதை புத்த போதனைகளிலிருந்து தெரிய வருகின்றது. எனவே கவிதை போதனைகளால் பிரபல்யமான நீங்கள் இந்த தொழிற்பாடுகள் புத்த போதனைக்கு பொருத்தமானவையா? என்று நான் அவரிடம் கேட்டேன்.

ஐயா அக்காலத்தில் புராதன வரலாற்றில் காணப்பட்டது பெளத்த போதனைகள். அவை புத்தரின் பழக்க வழக்கங்கள் என்றே கூறப்பட்டன. இப்போது பாருங்கள் தனியகோபால சூத்ரய என்பது முழுமையாகவே ஒரு காவியமாகும். இந்த போதனைகளை ஒருவித தாளத்தில் பாடினால் தான் பெளத்தர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

இப்போது நாம் நீங்கள் பிறந்த ஊரைப்பற்றி பேசுவோம்.

உண்மையில் எனது கிராமம் மிக அழகானது. அதேபோல் பின் தங்கிய பிரதேசமாகும். எமது கிராமத்தின் பெளத்த கோயில் தான் எமது வெளிச்சம். அடுத்தது பாடசாலை. எமது மூதாதையர் கிராமத்துக்கு மிக கஷ்டத்துடனேயே சென்றார்கள். சரியாக ஒரு பாதை கூட இருந்திருக்கவில்லை. மழை காலத்தில் மட்டுமே பயிர் செய்யலாம். அதுவும் ஒரு காலத்துக்கு மட்டுமே.

அக்கிராம மக்களுக்கு பல பிரச்சினைகளுண்டு. மிகப்பெரும் பிரச்சினை காணிப்பிரச்சினையாகும். 15 பேர்ச்சர்ஸ் உள்ள காணியை தான் ஒரே குடும்பத்தின் பிள்ளைகள் துண்டு துண்டாக வேறுபடுத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் இக்காணியை எப்படித் தான் மேலும் பிரித்துக்கொள்ளப் போகிறார்கள் என்ற பிரச்சினை எமக்குள்ளும் எழுந்தது. அட்டுலுகமகே சைமன் இக்கிராமத்தின் ஒரு பழைய மனிதர். சரக்குப் பொருட்களை விற்பனை செய்வதில் பல காலம் ஈடுபட்ட அவர் எம்மிடம் இவ்வாறு கூறினார்.

துண்கோறளை என்பது தான் எனது ஊர். அரசில்வாகளும் இக்கிராமத்தை மறந்துவிட்டார்கள் ஐயா. முன்னர் இங்கு விவசாய பொருளாதாரம் காணப்பட்டது. அது எமது மூதாதையர் காலத்தில். இப்போது எமக்கு பயிர் செய்ய நிலங்களில்லை.

இக்கிராமத்தை முழுமையாக பொதி செய்யும் கிராமமாகக் கருதுவதும் பிழையானது. அவர்கள் அரசாங்கத்திடமிருந்து தொழில்களைக் கேட்டு கஷ்டப்படுத்தவில்லை. அரசாங்க தொழில் ஒன்று கிடைத்த ஒருவர் இருந்ததென்றால் அது விவசாய உத்தியோகத்தர் என்ற தொழிலைப் பெற்றவர்தான்.

70 வயதுடைய டீ.ஜே.விஜேதுங்க என்ற இந்த மனிதர் சிலகாலம் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் வேலை செய்த ஒருவராவார். அவர் கிராமத்தைப் பற்றி கூறிய கதைகள் விசித்திரமானவை. பன்னல என்று சொன்னாலும் அக்கிராமத்தை முன்னர் அழைத்தது பன்வில என்றுதான். சாதாரணமாக கிராமிய பெயர் மாறியதோடு பன்னல என்ற பெயரைப் பெற்றுள்ளது.

சைக்கிள்களில் அம்பாறை, பொலன்னறுவை, மட்டக்களப்பு போன்ற தூர பிரதேசங்களுக்குப் போய் இவர்கள் வியாபாரம் செய்திருக்கிறார்கள். இன்று கிராமத்தில் சிலர் வாகனங்களையும் வாங்கியிருக்கிறார்கள். இக்கிராமத்தில் சுமார் 70 - 80 குடும்பங்கள் வாழ்வது கூட உண்மையில் இந்த பொதி செய்யும் வியாபாரத்தினால்தான். இன்று திவிநெகும திட்டத்தின் கீழ் கேகாலை மாவட்டத்தில் புலத்கொகுபிட்டிய ஆசனத்தில் பன்னலயைத் தான் விருத்தி செய்யக்கூடிய கிராமமென்று தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

பன்னல வடக்கு கிராமத்தவர் சுப நேரம் பார்ப்பதில் பெயர் பெற்றவர்கள். சோந்தினா என்ற குரு எமது பன்னல தேரரின் தந்தையாவார். 10 பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் கடைசி பிள்ளையான பத்மசிறி ஜயதிஸ்ஸ சிறு பராயத்திலிருந்தே ஒரு பிக்குவாக வரக்கூடிய அறிகுறிகளோடு தென்பட்டார். சோந்தினா குரு கவிபாடி சிறு பிள்ளைகளை சுகப்படுத்தும் போது சிறிய ஜயதிஸ்ஸ மிக உன்னிப்பாக அவற்றைக் கவனித்துக்கொண்டிருந்தார்.

ருவன்வல்ல, அங்குருவல்ல, வராவ போன்ற எல்லா இடங்களிலிருந்தும் எமது தந்தையை கூட்டிச் சென்றார்கள். அவர் ஒரு பெயர் பெற்ற கட்டாடியாவார். தேரர் கூறிய வார்த்தைகள் எனது சிந்தனைக்கு எட்டியது. இரவு வேளையில் கெட்டி மேளம், பூஜை ஒலிகள் இக்கிராமத்தில் கேட்காத நாளே இல்லை. அந்தளவுக்கு சோந்தினா மாமாவுக்கு வேளை இருந்தது.

சத் கோரளையின் கவி என்பது புதிய ஒரு விடயமல்ல. தினமும் வேலை செய்யும் போதும் மக்கள் தமது சோம்பலை போக்கிக் கொள்ளவும் வேலைகளை இலகுவாகச் செய்து கொள்ளவும் கவிகளைப் பாடினர். பத்மசிறி சிறு வயதில் தனது சக வயதுடைய ஆண், பெண் பிள்ளைகளோடு விளையாடும் போது சாரம் அல்லது ஒரு சேலையை ஒரு காவியுடையாக அணிந்து வலம் வந்தார்.

அது எதிர்காலத்தில் ஒரு பிக்குவாக வருவார் என்ற அறிகுறியையே எடுத்துக் காட்டியது. மூதாதையர் மிகவும் எளிமையாக தனது வாழ்க்கையை நடத்திய பத்மசிறியை மிகவும் சிறந்த ஒருவராகவே கருதினர்.

80களில் ஜயதிஸ்ஸவுக்கு 13 வயது நிரம்பியது. அவர் அலபலாவல மஹிந்த ஞானதிஸ்ஸ அனுநாயக தேரரின் கீழ் ஸ்ரீ ஞானதிலக பிரிவேனாவில் கற்றார். பேரவில பியதஸ்சி அலவதுரே விஜிதவன்ஸ போன்ற கவிஞர்களின் சாயல்கள் அவரின் கவிதைகளில் தோற்றமளித்தன.

1980 ஆம் ஆண்டில் அவரின் சகோதரர் ஹேனேபொல சுமணஜோதி தேரரை சந்திக்க அவர் முதல் முறையாக கொழும்புக்கு வந்தார். அது ஸ்ரீ லங்கா வித்தியாலயம் (ஓடே பன்சல) பத்தேகம விமலவன்ச அனுநாயக தேரரைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைத்தது இவ்வாறு தான். அன்று ஒரு விசித்திரமான நிகழ்வு நிகழ்ந்தது. கோஹுவல தாதுமலு விகாராதிபதி மாபலகம சோமிஸ்ஸர தேரரின் ஆராதனையாகும். பெரிய தேரர் ஆராதனைக்கு வரவில்லை. பத்தேகம தேரர் சிறிய பிக்குவுக்கு ஆராதனை செய்ய அழைத்தார்.

1980 ஆம் ஆண்டு வானொலியில் ஆராதனை மேற்கொண்ட 13 வயது நிரம்பிய சிறிய பிக்குவுக்கு இவ்வாறு பன்னல ஞானலோக தேரராக வர சந்தர்ப்பம் கிடைத்தது.

ஏ.ஜீ.சிறிசேன உடன் நான் சிறிது நேரம் பேசினேன். எங்கள் கிராமத்தின் இளைஞர்கள் ஒற்றுமையானவர்கள். ஆனால் எமது கிராமம் இந்தப் பெரிய சமூகத்திலிருந்து தூரம் சென்று விட்டது. எமக்கு ஜீவியம் நடத்த தேவையான வேலை வாய்ப்புகளைக் கொடுக்க எவரும் முன்வரவில்லை. ஒரே காணித்துண்டில் நாம் ஒன்றாக வாழ்கிறோம்.

நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். நாம் அரசாங்கத்திடம் சில காணிகளைத் தருமாறு தான் கேட்கிறோம். அதுவும் எமக்கு பயிர் செய்ய. இக்கிராமத்தின் மக்கள் தைரியமுள்ளவர்கள். ஆகவே எமக்கு அரசாங்க வேலை தேவையில்லை.

திவிநெகும திட்டத்தின் கீழ் இக்கிராமத்தைக் கட்டியெழுப்ப முயற்சியெடுப்பது பெரும் நன்மையாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.