புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

கிரிக்கெட் போட்டிகளில் மாற்றங்கள்: I C C அங்கீகாரம்கிரிக்கெட் போட்டிகளில் மாற்றங்கள்: I C C அங்கீகாரம்

கிரிக்கெட் போட்டிகளில் மாற்றங்கள்: I C C அங்கீகாரம்

நீண்ட காலமாக ஆலோசித்து வந்த கிரிக்கெட் போட்டிகளில் சில மாற்றங் களை கொண்டு வரும் தீர்மானத்துக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. முக்கியமாக டெஸ்ட் போட்டி களை பகலிரவுப் போட்டியாக நடத்துவது, நடுவரின் தீர்ப்பை மீள் பரிசீலனை செய்வது போன்ற தீர்மானங்களுக்கு ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்துள்ளது.

டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்களும் பகல் போட்டியாக நடைபெறுவதால் அலுவலகம் செல்பவர்களும், பாடசாலை செல்லும் மாணவர்களும் போட்டிகளை ரசிப் பதற்கு வருவதில்லை. இவ்வாறான ரசிகர்களைக் கவருவதற்கே டெஸ்ட் போட்டிகளையும் பகலிரவாக நடத்தும் தீர்மானத்துக்கு ஐ.சி.சி. அங்கீகாரமளித்துள்ளது. இப்போது நடைபெற்று வரும் 20க்கு 20 போட்டிகளுக்கும், 50 ஓவர் கள் கொண்ட ஒருநாள் போட்டிகளுக்கும் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின் றனர்.

இதற்கு முக்கிய காரணம் தங்கள் அலு வல்களை முடித்துவிட்டு வீடு வருபவர்கள் இரவு வேளையில் இலகுவாக இப்போட்டிகளை தொலைக்காட்சிகளிலும், நேரடியாகவும் ரசிக்க முடிவதால் அவ்வகை போட்டிகளின்பால் ரசிகர் கள் ஈர்க்கப்படுகின்றனர். இதனால் டெஸ்ட் போட்டிகளையும் பகலிரவுப் போட்டிகளாக நடத்த அங்கீரித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். இம்முடிவை அவுஸ்திரேலிய கிரிக் கெட் சபையும் வரவேற்றுள்ளது. இம்முடிவி னால் சோபையிழந்துள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் புத்துயிர் பெறும் என்றும் அச் சபை அறிவித்துள்ளது. ஆனால் முன்னாள் நியுசிலாந்து அணித் தலைவரும், பயிற்று விப்பாளருமான ஜோன் ரைட் இம்முடிவு குறித்து விசனம் தெரிவித்துள்ளார். பழைமை வாதியான அவர் டெஸ்ட் போட்டிகளில் புதுமைகளைப் புகுத்தி அதன் தரத்தைக் குறைக்க வேண்டாம் என்றும் அவர் ஆதங்கப்படுகிறார்.

மேலும் இந்திய கிரிக்கெட் சபையும் இம்முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இப்போட்டிகளால் டெஸ்ட் போட்டியின் விறுவிறுப்புக் குறையும் எனவும் இந்தியக் கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி ரத்னாகர் ஷெட்டி கூறியுள்ளார். ஏற்கனவே இந்திய பிராந்திய அணிகள் மூன்று நாள் உள்ளூர்ப் போட்டிகளை பகலிரவுப் போட்டியாக நடத்தி இதன் சாதக பாதகங்களை ஆராய்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி கடந்த வாரம் தொடக்கம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்த மாற்றங் கள் நடைமுறைக்கு வந்துள்ளன. நோபோல், பெளன்ஸர், பவர் பிளே விதிகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பொதுவான மாற்றங்கள்

டி.ஆர்.எஸ். (டெஸ்ட் மற்றும் ஒருநாள்)

டி.ஆர்.எஸ். என அழைக்கப்படும் நடுவரின் தீர்ப்பை மேன்முறையீடு செய்யும் விதியின் எல். பி. டபிள்யூ. வழங்குவதில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் மேற்முறையீட் டின்போது காலில் படும் (பாட்) பந்து தொழில் நுட்பத்தினூடே விக்கெட்டுக்கு மத்தியால் (பெயில்களுக்கு நடுவால்) செல்வதாக காண்பித் தால் அது ஆட்டமிழப்பாக கருதவும், அதற்கு வெளியில் செல்வதாக காண்பிக்கப்பட்டால் ஆட்டமிழப்பில்லை என்று முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நோ போல் (மூன்று வகை போட்டிகள்)

பந்து வீச்சாளர் நோபோல் போட்டால் அது குறித்து மூன்றாவது நடுவரிடம் கேட்க களநடுவருக்கு அனுமதி அளிக்கப்படுவதோடு, கள நடுவருக்கு அது பற்றித் தெரியாத விடத்து மூன்றாவது நடுவர் அறிவுறுத்தவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

பந்து வீச தாமதித்தல்

ஓவர்களை தாமதமாக போட்டு முடிப்பதற் காக களத்தடுப்பு அணிக்கு அபராதம் விதிக் கப்பட்டு வருகிறது. அதேபோன்று துடுப்பாட்ட அணி தாமதத்திற்கு காரணமாக இருந்தால் அதற்கும் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட் டுள்ளது.

பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரு நாடுகளுக்கும் விருப்பம் இருந்தால் மட்டுமே பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஆறு மணி நேரம் மட்டுமே விளையாட வேண்டும். வர்ண பந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த நேரத்தில் விளையாட வேண்டும், போட்டியில் பயன் படுத்தப்படும் பந்தின் நிறம், வகை, தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை இரு நாட்டு கிரிக் கெட் சபைகள் தான் முடிவு செய்ய வேண்டும்.

டெஸ்ட் போட்டிகளில் பகல் போசன இடைவேளையான 40 நிமிடங்கள் மற்றும் தேநீர் இடைவேளையான 20 நிமிடங்களும் தற்போது போன்றே கடைப்பிடிக்கப்படும். ஆனால் போட்டியை நடத்தும் அணி அடுத்த அணியின் அனுமதியுடன் இரு இடைவேளைகளையும் 30 நிமிடங்களாக மாற்ற ஐ.சி.சிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஒரு நாள் போட்டிகளில் இரண்டு பவர் பிளே முறைகள் கடைப்பிடிக்கப்படவுள் ளன. முதலாவது பவர் பிளே முதல் 10 ஓவர் களிலும் கடைப்பிடிக்கப்படும். இதன்போது இரு களத்தடுப்பாளர்களே 30 யார் வட்டத்திற்கு வெளியில் களத்தடுப்பில் ஈடுபட முடியும். பின்னர் துடுப்பாட்ட அணியால் இரண்டாவது பவர் பிளே பெறப்படும். அது 5 ஓவர்கள் கொண்டதாகவும் 40 ஆவது ஓவருக்கு முன்ன தாகவும் பெற வேண்டும். இந்த பவர்பிளே ஓவரின் போது மூன்று வீரர்களுக்கே 30 யார் வட்டத்திற்கு வெளியில் களத்தடுப்பில் ஈடுபட முடியும். அத்துடன் பவர் பிளே ஒவர்கள் இல்லாத ஓவர்களின் போது 30 யார் வட்டத் திற்கு வெளியில் அதிக பட்சம் 4 வீரர்களு க்கு களத்தடுப்பில் ஈடுபட முடியும். முன்னர் இது 5 வீரர்களாக இருந்தது.

ஐ.சி.சி. விதி 42.6 (ஏ) இன் கீழ் ஒரு நாள் போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் அதிக பட்சமாக ஓவர் ஒன்றில் இரு பெளன்ஸர் பந்துகளை வீச அனுமதிக்கப்பட்டுள்ளது.

* இருபது – 20 போட்டிகளில் இரு இன்னிங்ஸ்களிலும் களத்தடுப்பில் ஈடுபடும் அணி ஏதாவது ஒரு ஓவரை தமக்கு விருப்பமான பக்கத்தில் இருந்து வீசுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

* போட்டிக்கான மாற்று வீரர் ஒருவரை ஒவ்வொரு அணியும் பரிந்துரைக்க வேண்டும். இதில் போட்டியில் பங்கேற்ற வீரர் ஒருவர் காயம், சுகவீனம் அல்லது ஏற்றுக் கொள்ளும் படியான காரணத்திற்காக விலகிக்கொள்ளும் பட்சத்தில் மாற்று வீரரை பயன்படுத்த முடியும்.

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை-நியூஸிலாந்து

இருபது-20 போட்டிக்கு காலநிலை தடை

தொடர்ந்தும் முதலிடத்தில் இலங்கை அணி

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு இருபது- 20 போட்டியும் கடந்த வாரம் மழை காரணமாக கைவிடப்பட்டது.

இலங்கை அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் அன்ஜலோ மத்தியூஸ் முதல் முறையாக அன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியின் நிரந்தர இருபது-20 தலைவராக செயற்பட்டிருந்தார்.

அடிக்கடி மழை குறுக்கிட்டதால் 14 ஓவர் போட்டியாக மாற்றப்பட்ட இப்போட்டியில் நியூசிலாந்து அணி 74 ஓட்டங்கள் எடுத்தது. 75 ஓட்டங் கள் வெற்றி இலக்காக துடுப்பெடுத் தாடிய இலங்கை அணி இரண்டு ஓவர்களுக்கு முகம் கொடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இலங்கை அணி இருபது- 20 தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது.

ஐ.பி.எல். தொடரை போன்று

பாகிஸ்தானிலும் நடத்த திட்டம்

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் போன்ற ஒரு தொடரை அடுத்த ஆண்டு முதல் நடத்தத் தீர்மானித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் சாகா அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தான் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை நடத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்துள்ளன. எனவே இது குறித்து பாகிஸ் தான் ஜனாதிபதி அசீப் அலி சர்தாரியிடம் அனுமதி பெற விண்ணப்பித்துள்ளோம்.

ஐ.பி.எல். தொடர் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. எனவே அதற்கு 2 வாரங்களுக்கு முன்னதாக பாகிஸ்தான் பிரீமி யர் லீக் தொடரை நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனங்கள் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கின்றனர்.

இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணப்புழக்கமும், தொடர் விரைவில் பிரபலமும் அடையும். ஷியால்கோட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு அணியின் உரிமையை வாங்கலாம் என்று தெரிகிறது.

மேலும் ஐக்கிய அரபு இராட்சியத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கூட ஒரு அணியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது என்றும், ஐ. பி. எல். தொடரின் பாணியை பின்பற்றியே பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்படவுள்ளது எனவும் கூறியுள்ளார்.

ஒலிம்பிக் பதக்கங்கள் திருட்டு

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இங்கிலாந்து வீரர்கள், வீராங்கனைகளுக்கான பாராட்டு விழா, பக்கிங்ஹாமில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இங்கிலாந்து ராணி எலிசபெத் செய்திருந்தார்.

இதில் துடுப்பு படகு வீரர் அலெக்ஸ பார்டிட்ஜ், ஹொக்கி வீரர் ஹன்னா மெக்லி யோடு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இருவரும் அணிந்து வந்திருந்த வெண்கலப் பதக்கங்களை, அவை வைக்கப் பட்டிருந்த ஜாக்கின் உடன் மர்ம நபர்களால் திருடப்பட்டது.

இது குறித்து பொலிஸார் விசாரித்து திருட்டு போன பார்டிரிட்ஜின் வெண்கலப் பதக்கம் மற்றும் அது வைக்கப்பட்டிருந்த ஜார்கின் ஆகியவற்றை கைப்பற்றினர். அத்துடன் அதைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் 31 வயதான நபர் ஒருவரை வட மேற்கு லண்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் மற்றொரு பதக்கத்தை குறித்து இதுவரை எதுவிதத் தகவலும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாண்டுக்கான தங்கப் பாதணி விருது பெற்ற மெஸ்ஸி 300 கோல்களைக் கடந்தார்

மேட்ரிட்டில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி வீரர் லயோனெல் மெஸ்ஸி 300 வது கோலை அடித்தார். ஆர்ஜென்டினா கால்பந்து அணி யின் தலை வரான மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்காகவும் விளையாடி வருகிறார். தற்போது ஸ்பெயினின் மேட்ரிட்டில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து கழக அணிகளுக்கான போட்டியில் பார்சிலோனா அணி இடம் பெற்றுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் ராயோ வாலேகானோவுடன், பார்சிலோனா அணி மோதியது. இதில் மெஸ்ஸி தன்னுடைய 300 வது மற்றும் 301 வது கோல்களை போட்டார். மெஸ்ஸி அடித்துள்ள 301 கோல் களில், 270 கோல்கள் பார்சிலோனா அணிக் காகவும், 31 கோல்களை ஆர்ஜென்டினாவுக் காகவும் போட்டுள்ளார். இதை வெறும் 419 ஆட்டங்களிலேயே அவர் சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டுக்கான தங்க காலணி விருதும் லயனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011–12ஆம் ஆண்டு பருவகால த்தில் ஸ்பானீஸ் லீக்கில் பார்சிலோனா அணிக் காக 50 கோல்களை அடித்து சோபித்ததால் இந்த விருதுக்கு மெஸ்ஸி தேர்வு செய்யப் பட்டார். இந்த விருதை மெஸ்ஸி பெறுவது இது 2 வது முறையாகும். இதற்கு முன்கடந்த 2010 ஆம் ஆண்டுக்கான தங்க காலணி விருதும் மெஸ்ஸி பெற்றுள்ளார்.

ஹொங்கொங் சிக்ஸர்ஸ் தென்னாபிரிக்கா வசம்

ஹொங்கொங் சிங்ஸர் தொடரில் தென்னா பிரிக்க அணி இறுதிப் போட்டியில் பாகிஸ் தானை 37 ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது.

இதில் கம்ரன் அக்மல் தலைமையிலான பாகிஸ்தான் அணி தென்னாபிரிக்க அணியை எதிர்கொண்டது. முதலில் ஆடிய தென்னாபிரிக்கா தனது 5 ஓவர்களுக்குள் 2 விக்கெட்டு களை இழந்து 142 ஓட்டங்களை விளாசியது. கொலின் இன்கிராம் 34 ஓட்டங்களை பெற்ற தோடு பந்து வீச்சல் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு அக்மல் சகோதரர்கள் கைகொடுத்த போதும் அந்த அணி 105 ஓட்டங்களையே பெற்றது. கம்ரன் அக்மல் 35 ஓட்டங்களையும் உமர் அக்மல் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த தொடரில் பங்கேற்ற ஜெஹான் முபாரக் தலைமையிலான இலங்கை அணி போட்டியின் முதல் நாளில் அனைத்து ஆட்டங்களிலும் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இதன்போது இலங்கை நெதர்லாந்து, இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி யது. ஆனால் நேற்று நடந்த இரண்டாவது சுற்றில் இலங்கை தென்னாபிரிக்கா, ஹொங்கொங் மற்றும் பாகிஸ்தானிடம் நேற்று இறுதி வாய்ப்பை இழந்தது. இந்த தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்றவராக உமர் அக்மல் பதிவானார். அவர் மொத்தம் 201 ஓட்டங்களை குவித்தார். அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற பெருமை தென்னாபிரிக்கா வின் டேவிட் மில்லருக்கு கிடைத்தது. அவர் மொத்தம், 21 சிக்ஸர்களை விளாசினார். ஓர் இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களை கம்ரன் அக்மல் பெற்றார் அவர் தென்னாபிரிக்காவுட னான இறுதிப் போட்டியில் 51 ஓட்டங்களை விளாசினார். அத்துடன் தொடரில் அதிகபட்ச மாக தென்னாபிரிக்காவின் லியோல்மெயர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக 383 சிக்ஸர்கள் விளாசப் பட்டன.

சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றது சிட்னி சிக்ஸர்ஸ்

சம்பியன்ஸ் லீக் இருபது – 20 போட்டியின் இறுதி ஓட்டத்தில் லயன்ஸ் அணியை 10 விக் கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா வின் சிட்னி சிக்ஸர்ஸ் கிண்ணத்தை கைப்பற் றியது. தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்கில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிட்னி அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய லயன்ஸ் அணி வீரர் கள் ஓட்டம் எடுக்க போராடினர். தடுமாற்றத் தின் தொடர்ச்சியாக அந்த அணியில் மேலும் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. அதிகபட்சமாக ஜீன் சைம்ஸ்மட்டும் நிலைத்து ஆடி 51 ஓட்டங்களை எடுத்தார். இறுதியில் அவ்வணி 121 ஓட்டங்கள் எடுத்தது.

சிட்னி தரப்பில் நதன் மெக்கல்லம், ஹேஸ்லிவூட் ஆகியோர் தலா 3 விக்கெட்டு களை வீழ்த்தினர்.

பின்னர் துடுப்பெடுத்தாடிய சிட்னி வீரர்கள் முதல் 5 ஓவர்கள் வரை நிதானமாகவே ஆடினர். தொடர்ந்து லயன்ஸ் வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி வெற்றியை நோக்கி அவர்கள் பயணித்தனர். தொடர்ந்து பயணித்த இந்த ஜோடி 12.3 ஓவரில் 124 ஓட்டங்கள் எடுத்து 2012 ஆம் ஆண்டு சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றது.

அஸரென்கா தொடர்ந்து முதலிடம்

உலக டென்னிஸ் கழகத்தின் (டபிள்யு. டி. ஏ.) டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் 10,595 புள்ளிகள் பெற்று பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

துருக்கி இஸ்தான்புல்லில் நடந்து முடிந்த மகளிர் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் ரஷ்யா வின் மரியா ஷரபோவாவிடம் தோல்வியடை ந்தார். இருப்பினும் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார்.

இப்போட்டியின் இறுதிச் சுற்றில் அமெரிக்க வீராங்கனை செரீனாவிடம் தோல்வியடைந்த ஷரபோவா 10,045 புள்ளிகள் பெற்று 2ஆவது இடத்தில் உள்ளார். மகளிர் சம்பியன்ஷிப் கிண்ணத்துடன் இந்த ஆண்டு 4 பட்டங்களை வென்றிருந்த போதும் 9,400 புள்ளிகள் பெற்ற செரீனா 3 ஆம் இடத்தையே பிடித்தார். போலந்தின் ரட்வெனஸ்கா 4 ஆம் இடத்தி லும், ஜெர்மனியின் கெர்பர் 5 ஆம் இடத்தி லும் உள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.