புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

முடிவின்றி தொடரும் கொலைகள்

முடிவின்றி தொடரும் கொலைகள்

நாட்டின் மூன்று பகுதிகளில் அண்மையில் நடைபெற்ற மூன்று கொலைகளில் இரண்டு திட்டமிடப்படாமலும் மற்றையது திட்டமிடப்பட்ட கொலையென்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். கடைசியாக இடம்பெற்ற பாரதூரமான கொலை மொனராகலையில் இடம்பெற்றது. வீட்டறையில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த பதினாறு வயது மகன் வெட்டிக் கொல்லப்பட்டார்.

வேறுயாரோவென நினைத்து தவறுதலாக இனம்காணப்பட்டதால் இக்கொலை இடம் பெற்றிருக்கலாமெனவும் அனுமானிக்கப்படுகிறது. தாயுடன் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருப்பது. அவரது கணவரென தவறுதலாக எண்ணி மகன் கொல்லப்பட்டிருக்கலாம். அன்றிரவு தந்தை வயலுக்குச் சென்றிருந்தார். தாய் வேரொருவருடன்தகாத உறவு கொண்டிருந்தார். தாய்வேறொருவருடன் தகாத உறவுகொள்வதை திடீரென விழித்துக் கொண்டமகன் கண்டிருக்கிறார் விஷயம் வெளியே வந்துகசிந்து விடுமெனப் பயந்து பதற்றமடைந்தாயின் காதலன் அதனை மறைப்பதற்கு பதினாறு வயது மகனை வெட்டிக் கொன்றிருக்கலாம்.

கொலைக்கான காரணத்தை இன்னும் பொலிஸார் கண்டறிய வில்லை. மகனின் மரண ஓலத்தை கேட்ட தாய் விழித்த போது மகன் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அறை விளக்கை எரியச்செய்தபோது அக்காட்சியை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. சந்தேக நபர் பெண்ணின் தலைப்பகுதியை பலமாகத்தாக்கி பின் அங்கிருந்து தப்பிச் சென்றார். இச்சம்பவம் 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் எட்டாம் திகதி திங்கட் கிழமை அதிகாலையில் இடம்பெற்றது.

தலைப்பகுதியில் தாக்கப்பட்ட பெண் அயல் வீடொன்றுக்கு ஓடிச்சென்று தொலைபேசி மூலம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். காயமடைந்த பெண் அயலவர்களால் மொனராகலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பதினாறு வயதுடைய இளைஞனின் சடலம் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பொலிஸார் கண்டனர். கூர்மையான ஆயுதத்தினால் இளைஞன் வெட்டி கொல்லப்பட்டுள்ளதாயும் இறந்தவர் பீ.வி. கவுன் மதுசங்க எனவும் அடையாளம் காணப்பட்டது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நாற்பது வயதுடைய பத்மா ரன்ஜனிக்கு மூன்று பிள்ளைகள் கொல்லப்பட்டவர் மகன் மற்ற இரு பெண் பிள்ளைகளும் சம்பவத்தின்போது வீட்டிலிருக்கவில்லை. மூத்த மகள் வேறிடத்தில் தொழில் செய்வதாகவும் இளையமகள் உறவினரின் இல்லத்திற்கு சென்றுள்ளதாகவும் தெரியவந்தது.

சந்தேக நபர், வீட்டிலுள்ளோர் அயர்ந்து நித்திரையிலிருக்கையில் அவர்கள் அறியாதவாறு உள்ளே நுழைந்து பத்மா ரன்ஜினியின் கணவரென நினைத்து வாளினால் வெட்டி கொன்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். மகனின் மரண ஓலத்தை கேட்டதாய் விழித்துக் கொண்டதும் தாயின் தலையில் தாக்கிய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.

மொனராகலை மாவட்ட பாதாள உலகத்தினரின் பல குற்ற செயல்கள் சம்பந்தமான வழக்குகளின் முக்கிய சாட்சியாளராக பத்மா ரன்ஜியின் கணவர் விளங்கினார். பாதாள உலகத்தினரால் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கொலையாக இது இருக்கலாம். என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை செய்கின்றார். சந்தேக நபர் கைது செய்யப்படாததால் இளைஞனின் கொலைக்கான காரணத்தையறிய முடியவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

பாதையில் இருவருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் நாற்பது வயதுடைய நபரொருவர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார். கடந்த வாரம் பாணந்துறையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இறந்தவர் பாலித் சில்வா என அடையாளம் காணப்பட்டார். வாகனச் சாரதியான இவரின் வயிற்றில் குத்தப்பட்ட கத்தியை இழுத்தெடுத்து மீண்டும் அவரை குத்தமுயன்ற போது கத்தியின் முன்பகுதி வயிற்றில் சொருகியிருந்தது. இவர் உடனடியாக பாணந்துறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் இவர் உயிர் பிரிந்தது. சில மணித்தியாலயங்களில் சந்தேக நபரை பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். பாணந்துறைபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹேஸ் பெரேராவின் பணிப்பின்பேரில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

மூன்றாவது சம்பவம் கம்பளையில் இடம்பெற்றது. தொன்னூற்றேழு வயதுடைய முதியவர் அவரது பேரனினால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இறந்தவர் கம்பளையை சேர்ந்த என். முஹம்மத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இக்கொலையின் சந்தேக நபரான இவரது பேரனுக்கு வயதுஇருபத்தொன்று. இவர் தன் தாயையும் பாட்டியையும் ஏற்கனவே கோடரியால் தாக்கியதாகவும் ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்து விடுதலையானவர் என்பதும் தெரியவந்துள்ளது. இவரது குரூரச் செயல்களினால் கிராமத்தவர் பீதியுடன் வாழ்ந்து வந்தனர். இவர் தன் பாட்டனாரின் தலையில் மூன்று முறை கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக கம்பளை பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.