புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 

குழந்தைகளுக்கான மனக்கணிதத்தை அதிகரிக்கும் ய+சிமாஸ்

குழந்தைகளுக்கான மனக்கணிதத்தை அதிகரிக்கும் ய+சிமாஸ்

இன்றைய காலகட்டத்தில் குழந்தைவளர்ப்பென்பது மிகவும் போட்டித் தன்மை மிக்கதாகிவிட்டது. அயல் வீட்டுப்பிள்ளை என்ன படிக்கின்றதோ அவற்றையெல்லாம், தமக்கு வசதியிருக்கிறதோ இல்லையோ தமது பிள்ளைகளிடமும் திணிக்க வேண்டிய கட்டாயத்தில் அனேக பெற்றோர் இருக்கின்றனர்.தமது பிள்ளைகளின் தேவையறிந்து, தேவையானவற்றைக் கற்பிப்பதை விடுத்து, தேவையற்ற சுமையை தங்களது பிள்ளைகளுக்கு ஏற்றி விடுகின்றனர்.

கிராமங்கள் எல்லாம் நகரங்களாக மாறிவரும் நிலையில், குழந்தைப் பருவத்தின் பல வசந்தங்களை எம் சிறார்கள் இழந்துள்ளனர். அந்த வகையில் அறிவின் மிகப்பெரிய சொத்தான மனக்கணிதத்தை இன்றைய சிறுவர்கள் இழந்துள்ளனர். கணிதம் மற்றும் விஞ்ஞானம் போன்ற பாடங்களில் வெற்றிபெறமுடியாமல் இருப்பதும், மனக்கணிதத்தில் அவர்கள் மிகவும் பின்தங்கியிருப்பதால்தான். அந்தவகையில் மனக்கணித்தில் சிறார்களைத் தேர்ச்சி பெற்றவர்களாக்குவதில் யூசிமாஸ் எனும் கல்வி முறை மிகவும் பயனுள்ளதாயிருப்பதாகக் கூறுகின்றார். யூசிமாஸ் அபாகஸ் கற்கைநெறியை இலங்கையில் அறிமுகப்படுத்தி பத்திரிகையாளர் மத்தியில் உரையாற்றிய, யூசிமாஸ் அபாகஸ் கற்கைநெறிகளுக்கான இலங்கை உரிமைத்துவத்தைக் கொண்ட ஜெனிசீஸ் அகடமியின் தலைமை நிர்வாகியான சித்ரா இளமநாதன் யூசிமாஸ் என்பது எல்லோருக்கும் ஒரு புதிய பெயராக இருக்கலாம்.

யூசிமாஸ் என்பது யுனிவர்சல் கான்செப்ட் மென்டல் அரித்மெடிக்சிஸ்டம் இது ஒரு உலகம் தழுவிய அமைப்பாகும். ஐந்து வயதில் இருந்தே குழந்தைகளின் அறிவாற்றலை பன்மடங்கு பெருக்கிறது. முறையான வழிகாட்டுதல் மூலம் குழந்தைகளிடம் புதைந்துள்ள அறிவாற்றல் வெளிக்கொண்டுவரப்படுகிறது. குழந்தைகளுக்கு “அபாகஸ்” எனும் கருவியின் மூலம் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்து சில மாதங்களுக்குப் பிறகு குழந்தை அபாகஸ் இல்லாமல் மனதிலேயே அபாகஸை கற்பனை செய்து அதன் மூலம் கணக்குகளுக்கு விடை காணுவதை இப்பயிற்சி அளிக்கிறது.

இளம் குழந்தைகளின் மனதில் மறைந்திருக்கின்ற கணக்கியல் மற்றும் பொது அறிவை கூர்மைப்படுத்தி சீனர்களால் 2000 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அபாகஸ் எனும் மணிச்சட்டத்தை வைத்து வளர்த்திடும் கல்வி திட்டம் தான் யூசிமாஸ் இந்த “அபகாஸ்” என்ற கருவியை இயக்குவதற்கு மின் சக்தியோ அல்லது மின்கல சக்தியோ தேவையில்லை. ஆகவே எந்த இடத்திலும் இதை எளிதாக இயக்கலாம். மேலும் “அபாகஸ்” பெறும் மதிப்பு “அபாகஸில் இருக்கும் மணி / மணிகள் இருக்கும் இடத்தைப் பொறுத்தே அமைகிறது.

ஜீசுவான் ஸ்கில் என்பது மூளைக்கும், உடல் உறுப்புகளுக்கும் ஏற்படும் ஒருங்கிணைப்பு அதாவது மூளை இடும் கட்டளைகளை, அந்தந்த உடல் உறுப்புக்கள் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப செயல்படுத்தினால் ஜீசுவான் ஸ்கில் அதிகரிக்கிறது. யூசிமாஸ் பயிற்சித்திட்டத்தில் ஜீசுவான் ஸ்கில் மேன்மை என்பது மிக முக்கிய அம்சமாகும் பயிற்றுவிப்பாளர் வகுப்பில் எண்களை வரிசையாக படிக்கும்பொழுது குழந்தைகள் அதை நன்கு கவனித்து மூளைக்கு செலுத்துகின்றனர். மூளை உடனே குழந்தைகளின் விரல்களுக்கு அபாகஸில் உள்ள மணிகளை சரியாக எவ்வாறு நகர்த்தல் வேண்டும் என கட்டளை இட்டு செயல்படுத்திகின்றது. அதாவது மூளை கைவிரல்கள் ஒருங்கிணைப்பு நடைபெறுகிறது.

நமது கை, கால் அசைவுகள் மூளையில் செல் தூண்டப்படுவதற்கும் பெரிதும் உதவுகின்றன. நாம் வலது கையை அதிகம் உபயோகிப்பதால் இடது மூளை வலது மூளையை விட நன்றாக திறன் வளர்ச்சி பெறுகிறது. யூசிமாஸ் சிறுவயதிலேயே குழந்தைகளின் மூளையின் முழுத்திறன் வளர்ச்சிக்கான பயிற்சிகளை அளித்து குறிப்பாக வலது மூளை செல்களை தூண்டச் செய்கின்றது. யூசிமாஸ் பயிற்சி பெறும் சிறுவர், சிறுமிகள் வியக்கத்தகு வேகத்தையும் அளப்பரிய ஆற்றலையும் பெறுகின்றனர்.

இமேஜிங் ஸ்கில் அல்லது போட்டோகிராப்பிக் மெமரி என்று அழைக்கப்படும் “பிம்பத் திறன் ஞாபகசக்தி” ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படும் திறமைகளில் மிகச் சிறந்த ஒன்றாகும் “அபாகஸ்”

ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனை, தெளிவாக புரிந்து கொள்ளல், போட்டோகிராபிக் மெமரி, வேகமும் துல்லியமும், தெரிந்து கொள்ளல், படைக்கும் திறன், தற்சார்பு நிலை, தன்னம்பிக்கை, கவனித்தல் என்பனவற்றை இதன்மூலம் பெறலாம். சிறுவர்களின் மூளை, அவர்களின் 13ஆவது வயதினை அடையும் பொழுது 80சதவீத வளர்ச்சியை அடைந்து விடுவதால், இதுபற்றிய விபரங்களை அறியவிரும்புவோர் இல 60/2 ஹமடன் வீதி கொழும்பு 06 இலுள்ள ஜெனிஸிஸ் அகடமியுடன் தொடர்பு கொள்ளலாம்.

8 நிலைகள் இப்பயிற்சி நெறியில் காணப்படுகின்றன. ஒவ்வொரு நிலையைப் பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அண்மையில் இடம் பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் சிறார்கள் பார்வையாளர்கள் கொடுத்த மிகச்சிக்கலான கணக்குகளைச் கூடநொடிப் பொழுதில் தீர்ந்து பார்வையாளர்களை ஆச்சரியமூட்டியமை குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.