புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
“நம்ம ஊரில் நத்தார்”

“நம்ம ஊரில் நத்தார்”

கல்முனையில் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இவ்வருடமும் நத்தார் விழா

ஜனாதிபதி செயலகம் கிறிஸ்தவ ஒன்றியத்தினுடனும் தேசிய ஐக்கிய சர்வமத தாபனங்களுடனும் இணைந்து இவ்வருட நத்தார் விழாவை கல்முனையில் டிசம்பர் 22ம் திகதி நடத்திவிருக்கின்றது.

“நம்ம ஊரில் நத்தார்” நிகழ்வினை கல்முனை வாழ் சகல மத அனுசரணையோடு நடத்துவதற்கான ஒழுங்குகளை ஜனாதிபதி செயலகம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் ஐக்கியத்தையும் மத ஒற்றுமையையும் பேண வழிவகுக்குமெனவும் இதில் கல்முனை வாழ் மக்கள் மாத்திரமின்றி நாடு தழுவிய ரீதியில் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதினைந்து வயதுக்குக் கீழ் பட்டவர்களும், பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்குமாக நத்தார் போட்டிகள் வகுக்கப்பட்டுள்ளன. சிறந்த நத்தார் கீதம், சிறந்த கிறிஸ்மஸ் மர அலங்காரம், சிறந்த கிறிஸ்மஸ் கேக் மற்றும் ரபான், மேளம் கோஷ்டி கானம், நத்தார் இளவரசன், இளவரசிதேர்வு என்பன சிறப்பு அம்சங்களாக போட்டியில் இடம்பெறவுள்ளன. 2013ம் ஆண்டு தேசத்திற்கு மகுடம் ‘தயட்ட கிருள’ அம்பாறை மாவட்டத்தில் நிகழவிருப்பதால் அதற்கு முன்னோடியாக நம்ம ஊர் நத்தார் விழாவை கல்முனையில் நடத்த திட்டமிட்டதாகவும் செயலாகம் குறிப்பிட்டுள்ளது. நத்தார் கீதத்திற்கான இசையை வழங்க பொலிஸ், இராணுவ, விமானப் படை வாத்திய கோஷ்டிகளும் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளன.

இவ்விழா சிறப்பாக நடந்தேறுவதற்கான ஒழுங்குகளை மதப் பெரியார்களின் ஆலோச னைக்கமைய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முன்னெடுத்துச் செல்கிறார்.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்புகளும், அன்பளிப்பு பொதிகளும் விழா மேடையில் வைத்தே வழங்கப்படும் .நிகழ்வினை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் நேரடியாக ஒளிபரப்பும்.

போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது விண்ணப்பங்களை 10.12.2012ம் திகதிக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும். பங்கு பற்றும் நிகழ்வின் தலைப்பை கவரின் மேல் குறிப் பிட்டு

நத்தார் விசேட போட்டி,

வண பிதா ஹெட்டியாராச்சி

ஜனாதிபதி சமய ஆலோசகர்

சார்டட் வங்கி கட்டிடம், 3ஆம் மாடி

ஜனாதிபதி மாவத்தை

கொழும்பு -01 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். மேலதிக விபரம் அறிய விரும்புவோர் 0112354511 அல்லது 0718220910-0772072348 இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியலாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.