புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
ஒருங்கிணைந்த செயற்பாடு, சீரான கல்வி மேற்பார்வை, பாடசாலை ஒழுங்கமைப்பு அவசியம்

ஒருங்கிணைந்த செயற்பாடு, சீரான கல்வி மேற்பார்வை, பாடசாலை ஒழுங்கமைப்பு அவசியம்

களுத்துறை மாவட்ட தமிழ்க்கல்வியின் எதிர்காலம்?

நம் நாட்டின் கல்வித்துறையைப் பொறுத்தவரையில் சகலருக்கும் சமமான கல்வி என்ற அடிப்படை யில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. இலவசக்கல்வி, மாணவர்களுக்கான இலவச சீருடை, பாடசாலை வளங்கல், புலமைப்பரிசில் திட்டங்கள் உட்பட பல வசதி வாய்ப்புக்களும் எவ்வித பாரபட் சமுமின்றி வழங்கப்பட்டு வருகிறது. நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு கிடைப் பது போலவே மலையகத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இவ்வசதிகள் வழங் கப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். போதாக்குறைக்கு சமூக அமைப்புக்களும் மாணவர்களின் கல்வி நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது பாராட்டத் தக்கது.

இவ்வாறான அனைத்து வளங்கள் வசதி வாய்ப்புக்கள் இருக்கும் நிலையில் களுத்துறை மாவட்டத் தமிழ்க்கல்வியைப் பொறுத்தவரையில் மாணவர்கள் தமது ஆரம்பக்கல்வியில் காட்டும் ஆர்வமும் திறமையும் உயர்கல்வியில் காணப்படுவ தில்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோர் மத்தியில் எழுந்திருக்கிறது.

பாடசாலைகளில் அனைத்து வளங்க ளும் காணப்படும் நிலையில் பெருந் தோட்ட சமூகத்தின் எதிர்காலக் கல்வி குறித்த சிந்தனை பெரும்பாலான ஆசிரி யர்கள் மத்தியில் இல்லாமையும் ஒரு காரணமாகும். ஆசிரிய சேவையின் மூலம் தமது சுயநலத்தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு குடும்ப பொருளாதாரத்தை வளமாக்கிக்கொள்ளும் சில ஆசிரியர்களும் மலையக சமூகத் தின் மத்தியில் இருப்பது இன்னொரு காரணமாகும்.

பெருந்தோட்ட மாணவர்களின் கல்வித்தரம் உயர் மட்டத்தை அடைய வேண்டுமானால் ஆசிரியர்கள் மட்டுமல்ல பெற்றோர், சமூக நல அமைப்புக்கள், மற்றும் புத்திஜீவிகள் கூடிய அக்கறை செலுத்த வேண்டியது அவசியமாகும். ஒருவரையொருவர் குற்றம் கூறிக்கொண்டி ருப்பதை விடுத்து மாணவர்களின் கல்வி நலனில் ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும். கல்வியில் ஆர்வம் செலுத் தக்கூடிய மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு பல்வேறு மலையக அமைப்புக்கள் தயாராகவே இருக்கின்றன. இவ்வாறான வாய்ப்புக்களை பயன்படுத் திக் கொள்வதுடன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர் களை ஊக்கப்படுத்தி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையச் செய்வ தில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு உயர் மட்டத்தை அடையும் போது மாணவர்கள் தம் உயர்க்கல்வி யைத் தொடரவும் தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். வெறுமனே பாடசாலையை நடாத்திவிட்டு தமது வாழ்நாளை ஒரே பாடசாலையில் கழித்து நீண்டகாலம் சேவை செய்தோம் எனக்கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. மலையக கல்வித்தரத்தை உயர்த்துவதில் அதிபர், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் சேவை யாற்ற வேண்டும். பாடசாலைகளில் இருக்கும் வளங்களைக் கொண்டு மனச்சாட்சியுடன் சேவையாற்ற முன்வர வேண்டும். களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை, மத்துகம, ஹொரணை ஆகிய மூன்று கல்வி வலயங்களையும் சேர்ந்த 43 தமிழ்ப்பாடசாலைகளிலிருந்து இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட் சைக்குத் தோற்றிய 100க்கும் மேற்பட்ட மாணவர்களில் களுத்துறை வலயத்திலி ருந்து ஒரு மாணவியும், மத்துகம வலயத்திலிருந்து மூன்று மாணவர்களும், ஹொரணை வலயத்திலிருந்து மூன்று மாணவர்களுமாக ஏழு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

களுத்துறை வலயத்தின் கீழ் வரும் அரப்பலாகந்த, குளோடன், பயாகல, எலதுவ, கொடஹேன, மலபொட ஆகிய ஆறு தமிழ்ப்பாடசாலைகளில் மலபொட தமிழ் வித்தியாலயத்திலிருந்து பரீட்சைக் குத் தோற்றிய 15 மாணவர்களில் ஜெயகுமார் சுவேதா 154 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.

மத்துகம வலயத்தின் கீழ் வரும் 18 தமிழ்ப் பாடசாலைகளில் சென்மேரிஸ் வித்தியாலய தமிழ்ப் பிரிவிலிருந்து தோற்றிய 27 மாணவர்களில் சந்திரபோஸ் தர்ஷிகா 188 புள்ளிகள் பெற்றுள்ளார். சிரிகந்துர தமிழ் வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 10 மாணவர்களில் மோகன் மதுஷான் 154 புள்ளிகள் பெற்றும், மொக மதியா தமிழ் வித்தியாலயத்திலிருந்து (விவேகானந்தா த.வி.) தோற்றிய எட்டு பேரில் மோகன்தாஸ் டிலக்ஷி 154 புள்ளி களையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

ஹொரணை வலயத்தின் கீழ் வரும் 16 தமிழ்ப் பாடசாலைகளிலிருந்து பரீட் சைக்குத் தோற்றியவர்களில் மில்ல கந்த தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 27 மாணவர்களில் குமரேஷ் வரன் மதுஷானி 161 புள்ளிகளையும் கீக்கியனகந்த தமிழ் வித்தியாலயத்திலி ருந்து தோற்றிய 10 மாணவர்களில் மோகன் மதுஷான் 161 புள்ளிகளையும் எதுராகல தமிழ் வித்தி¡யலயத்திலிருந்து தோற்றியவர்களில் ஆர். நிவேதா சசினி 155 புள்ளிகளையும் பெற்று சித்தியடை ந்துள்ளனர். கடந்த வருடம் நடைபெற்ற பரீட்சையில் களுத்துறை வலயத்திலிருந்து ஒருவரேனும் சித்தியடையவில்லை. மத்துகம வலயத்தின் நான்கு பாடசாலை களிலிருந்து ஐந்துமாணவர்களும், ஹொரணை வலயத்தின் இரண்டு பாட சாலைகளிலிருந்து மூன்று மாணவர்களு மாக எட்டு மாணவர்கள் சித்தியடைந் திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதில் கடந்த வருடத்தில் இரண்டு மாணவர்கள் சித்தியடைந்த மொகமதியா தமிழ் வித்தியாலயத்திலிருந்து இம்முறை ஒரு மாணவியும், இரண்டு மாணவர்கள் சித்தியடைந்த புளத்சிங்கள, மில்லகந்த தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து இம்முறை ஒரு மாணவி மட்டுமே சித்தியடைந்துள்ளார். அம்பேதென்ன, பள்ளேகொட, கலேவத்த கலைக்கள், அரப்பலாகந்த, குளோடன், ஹல்வத்துறை, எல்லகந்த, றைகம் கீழ்பிரிவு, றைகம் மேற்பிரிவு ஆகிய பாடசாலைகளிலிருந்து இம்முறையும் ஒரு மாணவர் கூட சித்தியடையவில்லை. மில்லகந்த, சென் மேரிஸ் போன்ற பிரபல பாடசாலை களிலிருந்து ஒவ்வொரு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். கடந்தாண்டில் எட்டு மாணவர்களாக இருந்து இவ்வரு டத்தில் ஏழாக குறைவடைந்துள்ளமை பெற்றோர் மற்றும் புத்திஜீவிகள் மத்தி யில் மிகுந்த அதிருப்தியும், கவலையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலான அதிபர், ஆசிரியர்கள் நேரத்துக்கு பாடசாலைக்குச் செல்லாது பிந்திச் சென்று முந்தி வெளியேறிவிடு கின்றனர். ஆசிரியர்கள் தமது கடமை நேரத்தில் கையடக்கத் தொலைபேசி பாவனை மற்றும் கல்வியுடன் தொடர் பில்லாத பகுதிநேர தொழில்களில் ஈடுபடுகின்றனர். ஒரே பாடசாலையில் நீண்ட காலமாக கணவன், மனைவி, பிள்ளைகள் என உறவுகளாக இருந்து வரும் நிலை கல்விக்கு பெரும் தடை யாகவே இருந்து வருகின்றன. பேருக்கு பாடசாலைகளைத் தரமுயர்த்தி தேவையான வளங்களைப் பெற்றுக் கொள்வதால் கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றது.

நாமும் அதே சமூகத்திலிருந்தே வந்தவர்கள் என்ற உணர்வுடன் மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு சமூகப்பற்றுடன் சேவை செய்ய முன்வரவேண்டுமென பெற்றோர் கருத்துத் தெரிவித்தனர்.

புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் தொடர்பாக புளத்சிங்கள பிரதேச சபை உறுப்பினர் ரீ. ஜெயராஜ் மற்றும் தொடங்கொட பிரதேச சபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் ஊடக இணைப்பாளருமான எஸ்.ரீ. சதாசிவம் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில் களுத்துறை மாவட்ட தமிழ்க்கல்வியின் தரம் மிகவும் கவலைக்குரியதாகும். மலையக சமூகம் முன்னுக்கு வரவேண்டு மாயின் கல்வியே அவசியமாகும். அந்தக் கல்வி அவர்களுக்கு உரிய முறையில் கிடைக்காவிடின் பேரிழப்பையே எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். அத்தகையதொரு துரதிர்ஷ்ட நிலை ஏற்பட இடமளிக்கக்கூடாது.

பாடசாலையில் கற்கும் மாணவர்கள் கூடுதலான நேரத்தை பாடசாலையிலேயே கழிக்கின்றனர். எனவே கடமையிலிருக் கும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடனும், சமூக உணர்வுடனும் செயற்படவேண்டும். குறிப்பாக ஒரு பாடசாலையில் ஐந்து வருடகால சேவையைப்பூர்த்தி செய்யும் அதிபர், ஆசிரியர்கள் கட்டாயம் இடமாற்றப்படல் வேண்டும் அதுமட்டு மல்ல கணவன், மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகளாக நீண்டகாலமாக ஒரே பாடசாலையில் இருந்து வரும் அதிபர், ஆசிரியர்கள் கண்டிப்பாக இடமாற்றப்படல் வேண்டும்.

இன்று களுத்துறை மாவட்டத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் இதே நிலையே காணப்படுகின்றது. மாணவரின் கல்வி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை. சொந்த நலன் குறித்து கவனம் செலுத்தி பணம் உழைப்பதி லேயே பலர் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர். விலை மதிக்க முடியாத கல்வி இன்று மிகவும் விலை மலிவான ஒரு பொருளாக மாறிவிட் டமை மிகவும் கவலைக்குரியதாகும்.

களுத்துறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஒருசீரான கல்வி மேற்பார்வையும் பாடசாலை ஒழுங்கமைப்பும் இல்லையென்பதே சரியாகும். ஆசிரியர்களின் குணநல மாற்றங்கள், நடவடிக்கைகள் மற்றும் முன்மாதிரியான செயற்பாடுகளில் வளர்ச்சி தெரியவில்லை. பதவிப்போட்டி, கருத்து வேறுபாடு, குழிபறிப்பு, பழிவாங்கும் நடவடிக்கைகள், உறவுகளுக்கு சலுகைகள் இவ்வாறான விரும்பத்தகாத சம்பவங்கள் இன்று அநேகமான பாடசாலைகளில் இடம் பெற்று வருவதால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதுடன் பரீட்சை முடிவுகளும் திருப்தியானதாக இருப்ப தில்லை. சில பாடசாலைகளில் ஒழுக்கம், கட்டுப்பாடு என்பன மிகவும் திருப்தி யற்றதாகவே காணப்படுகின்றமை மிகவும் கவலைக்குரியதாகும். களுத்துறை மாவட்ட தமிழ் மாணவரின் கல்வித் தரத்தை உயர்த்த அதிபர் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடனும், தூய உள்ளத்துட னும் சேவையாற்ற முன்வரவேண்டும்.

இதேவேளையில் பெற்றோரும் அதிபர் ஆசிரியர்களைக் குறை கூறாது பாடசாலை நடவடிக்கைகளில் தொடர்பு கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தம்பிள்ளைகளின் கல்வி குறித்து அடிக்கடி பாடசாலைக்குச் சென்று அதிபர், ஆசிரியர்களைச் சந்தித்து கேட்டறிந்து கொண்டு அதற்கேற்றவாறு பிள்ளைகளை வழிநடாத்த முயல வேண்டும். பிள்ளைகளின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து விட்டால் போதாது அவர்களின் கல்வி நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தி தங்களின் பங்களிப்பை வழங்கவேண்டும். அதிபர், ஆசிரியர்கள், தமிழ்க்கல்வி அதிகாரிகள், பெற்றோர் அனைவரினதும் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் சிறந்த பெறுபேறுகள்கிட்ட வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.