புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

இவ்வார பலன்

கிரகம் நிற்கும் ராசி நிலை


குரு : இடபம் (நட்பு)
கேது : இடபம் (நீசம்)
ராகு : விருச்சிகம் (உச்சம்)
சூரியன் : துலாம் (நீசம்)
சனி : துலாம் (உச்சம்)
புதன் : துலாம் (நட்பு)
சுக்கிரன் : கன்னி (நீசம்)
செவ்வாய் : விருச்சிகம் (ஆட்சி)
சந்திரன் : சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம்
சிங்கம், இடபம்

04.11.2012 முதல் 10.11.2012 வரை

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா

மேடம்

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

மேட ராசிக்காரர்களுக்கு தனுசு ராசியில் பகை பெற்ற 9ஆம் இடத்து செவ்வாய் காரணமாக தொழில் துறைகளாலும் முதலீடுகளாலும் பெருமளவு லாபத்தை எதிர்பார்க்க முடியாது. அத்துடன் பரீட்சை வழக்கு முடிவுகள் நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் அமையாது.
கணவன் மனைவி பிணக்குகள், தந்தை மகன் பிணக்குகள் ஏற்படுவதற்கு இடம் உண்டு. திருமண பேச்சுக்கள் இழுபடும். எடுக்கின்ற காரியங்களும் தடங்கல் ஆகும்.


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இடபராசிக்காரர்களுக்கு தனுசு ராசியில் பகை பெற்ற 8ஆம் இடத்து செவ்வாய் காரணமாக போக்குவரத்தின் போது மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். பித்தம் சம்பந்தமான வைத்திய ஆலோசனையும் பெற நேரிடலாம். நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் சந்தோஷமான காரியம் நிகழும். நண்பர்கள் கைகொடுத்து உதவுவார்கள். பெரியவர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

மிதுனராசிக்காரர்களுக்கு தனுசு ராசியில் பகை பெற்ற 7ஆம் இடத்து செவ்வாய் காரணமாக வீட்டில் கலகம் ஏற்படலாம். அலைச்சல் அதிகமாக இருக்கும் எதிரிகளின் தொந்தரவும் உண்டு. வைத்திய ஆலோசனையும் பெற நேரிடலாம். நன்மையான பலன்களை எதிர்பார்க்க முடியாது. பிள்ளைகளால் பலவித யோசனைகள் மனதை கவலையடையச் செய்யலாம். குடும்பத்தில் சச்சரசு தோன்றலாம். இனசன உறவினர்களின் ஆதரவு கிடைக்கலாம்.


கடகம்

புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்

கடகராசிக்காரர்களுக்கு தனுசு ராசியில் பகை பெற்ற 6ஆம் இடத்து செவ்வாய் காரணமாக தங்கம் செம்பு போன்ற உலோகங்களுடன் தொடர்புடையவர்களுக்கு லாபம் ஏற்படும். வழக்குகளில் இருந்து விடுபடலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். சொத்துகளாலும் பிரச்சினைகள் ஏற்படலாம். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். வாகனங்களால் செலவு ஏற்படும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேரலாம். மனதுக்கு ஆறுதலான செய்தி கிடைக்கும்.


சிங்கம்

மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்

சிங்க ராசிக்காரர்களுக்கு தனுசு ராசியில் பகை பெற்ற 5ஆம் இடத்து செவ்வாய் காரணமாக பிள்ளைகளின் யோசனை உங்கள் மனதை வாட்டலாம். வைத்திய ஆலோசனை பெற வேண்டி இருக்கும்.
வழக்கு முடிவுகள் ஏமாற்றத்தை தரலாம். புதிய சொத்துக்கள் சேரலாம். பல வழிகளாலும் பணம் வந்து சேரும். அரச பதவி உயரலாம் அல்லது புதிதாக நியமனம் கிடைக்கலாம். குடும்ப சுகம் மேம்படும்.


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

கன்னி ராசிக்காரர்களுக்கு தனுசு ராசியில் பகை பெற்ற 4ஆம் இடத்து செவ்வாய் காரணமாக தேவையில்லாத அறிமுகங்கள் ஏற்படலாம்.
வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம். போக்குவரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். வைத்திய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்திலும் பிரச்சினைகள் தலைதூக்கும். சமூகத்தில் மதிப்பு குறையலாம். பெண் நண்பர்கள் கைகொடுப்பார்கள். விருந்துக்கு குறைவிருக்காது.


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

துலாராசிக்காரர்களுக்கு தனுசு ராசியில் பகை பெற்ற 3ஆம் இடத்து செவ்வாய் காரணமாக ஈடுபடுகின்ற தொழில்துறைகளால் பலவிதத்திலும் லாபம் ஏற்படும். பரீட்சை வழக்கு முடிவுகள் நன்மையை தரும்.
இறைவழிபாடு கூடும். தந்தையாரின் உடல் நலம் பாதிக்கப்படலாம். அலைச்சல் அதிகமாக இருக்கும். ஆடைகள் ஆபரணங்கள் தொடர்புடைய வியாபாரிகளுக்கு லாபம் ஏற்படும்.
 


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

விருச்சிக ராசிக்காரர்களுக்கு தனுசு ராசியில் பகை பெற்ற 2ஆம் இடத்து செவ்வாய் காரணமாக திருடர்கள் பற்றிய பயம் மனதில் இருக்கும். நெருப்பு தொழிலுடன் சம்பந்தப்பட்டவர்கள் முன்கவனம் நன்று. அரச வழியால் தொந்தரவு ஏற்படலாம். தந்தை வழியால் செலவு ஏற்படும். வெளிநாட்டு பிரயாணம் ஏற்படலாம். பிள்ளைகளால் மனதில் யோசனை ஏற்படும். இரும்புப் பொருட்களால் செலவும் உண்டு. கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் சுமுகமாக இருக்கும்.


தனுசு

மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்

தனுசு ராசிக்காரர்களுக்கு தனுசு ராசியில் பகை பெற்ற 1ஆம் இடத்து செவ்வாய் காரணமாக (ஜென்மத்தில்) எடுக்கின்ற காரியங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் தடை ஏற்படலாம். வைத்திய ஆலோசனையும் பெற வேண்டி வரும். எதிரிகளின் தொந்தரவு இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தோன்றும்.
கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் சுமுகமாக இருக்கும். பெண் நண்பர்களால் மனம் பாதிப்படையலாம்.


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

மகர ராசிக்காரர்களுக்கு தனுசு ராசியில் பகை பெற்ற 12ஆம் இடத்து செவ்வாய் காரணமாக பலவிதங்களிலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
கண்சம்பந்தமாகவும் பித்தம் சம்பந்தமாகவும் வைத்திய ஆலோசனை பெற நேரிடலாம்.
தொழில் பார்க்கும் இடங்களில் வீணான தகராறுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளை கைவிட்டு விடுங்கள். பெண் நண்பர்களால் உதவி கிடைக்கலாம்.
 


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்

கும்பராசிக்காரர்களுக்கு தனுசு ராசியில் பகை பெற்ற 11ஆம் இடத்து செவ்வாய் காரணமாக செய்கின்ற தொழில் துறைகளால் எதிர்பாராத விதத்தில் நல்ல வருவாய் ஏற்படும். குடும்ப சுகம் மேம்படும்.
பரீட்சை, வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளை காணமுடியாது. எதிரிகளின் கரைச்சல்கள் கூடும். போக்குவரத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். பெண் நண்பர்கள் கைகொடுப்பார்கள்.


மீனம்

பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

மீனராசிகாரர்களுக்கு தனுசு ராசியில் பகை பெற்ற 10ஆம் இடத்து செவ்வாய் காரணமாக தோல் சம்பந்தமான மருத்துவ சிகிச்சை பெற வேண்டி வரும். திருடர்கள் பற்றிய பயம் மனதில் இருக்கும்.
ஆயுதங்களால் பாதிப்பு ஏற்படலாம். போக்குவரத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். புதிய முயற்சிகள் எதனையும் தொடங்க வேண்டாம். பெண் நண்பர்களால் பிரச்சினைகள் தலைதூக்கலாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.