புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
தேயிலை உற்பத்திச் செலவு அதிகரிப்பால் சவால்களை எதிர்கொள்ளும் பெருந்தோட்டத்துறை

தேயிலை உற்பத்திச் செலவு அதிகரிப்பால் சவால்களை எதிர்கொள்ளும் பெருந்தோட்டத்துறை

உற்பத்தி செலவு அதிகரித்து செல்வதால் தேயிலை உற்பத்தித்துறை தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு வருவதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களு க்கு வழங்கப்படும் சம்பளம் இந்த உற்பத்தி செலவீனத்தில் பெரும் பங்கை வகிப்பதாகவும், இந்த அதிகரிப்புச் செலவீனத்தை ஈடுசெய்யும் வகையில், இத் துறையை தொடர்ந்து முன்னெடுத் துச் செல்லும் வகையில் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான தேவை எழுந்துள்ளதாக அதில் மேலும் குறிப் பிடப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு ரூ. 124.06 ஆக காணப்பட்ட ஒரு கிலோகிராம் தேயிலை யின் உற்பத்திச் செலவு அதிகமாக காணப்படுவதாகவும், இந்நிலை தொடரு மானால் எதிர்வரும் காலங்களில் தேயி லைத்துறையை தொடர்ந்து முன்னெடு த்து செல்ல முடியாத நிலை ஏற்படலாம் என சம்மேளனம் எதிர்வுகூறியுள்ளது.

மொத்த உற்பத்தி செலவில் சேவைகள் மற்றும் மூலப்பொருட்கள் போன்றன முறையே 6 வீதம் மற்றும் 16 வீதத்தை மட்டுமே கொண்டுள்ள நிலையில், ஊழியர்களுக்கான செலவீனம் 63 - 68 வீதமாக அமைந்துள்ளது. கம்பனியின் ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர் களின் சம்பளம் (பிரதம நிறைவேற்று அதிகாரி முதல் தோட்ட அதிகாரி வரையிலான அனைவருக்கும்) மொத்த உற்பத்தி செலவீனத்தின் 10 வீதமாக அமைந்துள்ளது. எனவே, பெருந்தோட் டத்துறை தொழிலாளர்கள் மற்றும் அவர் களின் சேமலாப நடவடிக்கைகளுக்கான செலவீனங்கள் போன்றன பெருந்தோட்ட கம்பனியொன்றின் மொத்த செலவீனத் தின் 70 வீதமாக அமைந்துள்ளது என சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், தேயிலை சிறு தோட்ட செய்கையாளர்களை போலல்லாமல், பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர் களின் சம்பளத்தையும் சேமலாப வசதி களை வழங்கத்தவறுதல் போன்ற நட வடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும், இந்த கூட்டுடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளமை பிரதான காரண மாக அமைந்துள்ளது. தற்போது அண்ணளவாக சுமார் 220,000 பேர் பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் தொழில் புரிந்து வருகின்றனர். ஆயினும், பெருந்தோட்ட கம்பனிகள் பெருந்தோட் டத்துறையை சேர்ந்த சுமார் 1 மில்லியன் வரையிலான மக்களுக்கான வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

இதில் பெருந்தோட்டங்களில் பணிபுரி யும் தொழிலாளர்களின் குடும்ப அங்கத் தவர்களும் உள்ளடங்குகின்றனர். இவர் கள் அனைவருக்கும் இலவச குடிநீர், மருத்துவ வசதிகள், வீடமைப்பு மற்றும் இதர வசதிகள் போன்றவற்றை பெருந் தோட்ட கம்பனிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

2012 ஆம் ஆண்டில் தேயிலை உற்பத்தி செலவு கணிசமாக அதிகரித் துள்ளதெனவும், பிரதானமாக நிலையான ஊழியர் செலவீனங்கள் இதில் பிரதான பங்கு வகிப்பதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது. இவ்வாண்டின் முதல் அரைப்பகுதியில் நாட்டில் நிலவிய கடும் வரட்சியான காலநிலை காரணமாக, பெருந்தோட்ட கம்பனிகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் அளவு 12 வீதத்தினால் வீழ்ச்சிய டைந்திருந்தது. இதன் காரணமாக பெருந் தோட்டக் கம்பனிகளின் வருமானத்திலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அத்துடன், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலையின் காரணமாக இலங்கை தேயிலையை பெருமளவு கொள்வனவு செய்யும் பிராந்திய நாடுகளில் காணப்படும் அமைதியற்ற சூழ்நிலை மற்றும் பொருளாதார தடைகள் போன்றனவும் இலங்கையின் தேயிலைத் துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய நிலை யில் ஒரு கிலோ தேயிலையை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி செலவு ரூ.400 - 410 ஆக அமைந்துள்ளதாகவும், கடந்த ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் ஒரு கிலோ கிராம் தேயிலையின் சராசரி ஏல விற்பனை பெறுமதி ரூ. 385.66 (3.05 அமெரிக்க டொலர்கள்) ஆக அமைந் துள்ளதாகவும் பெருந்தோட்ட முதலாளி மார் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் உற்பத்தி செய்யப் படும் தேயிலைக்கான விலையும் அதிக ரித்த வண்ணமுள்ளன. கென்யாவில் தயாரிக்கப்படும் ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை 3.20 அமெரிக்க டாலர்களாக அமைந்துள்ளது. இதன் மூலம் இலங்கை தேயிலைக்கு சர்வதேச நாடுகளில் காணப்படும் உயரிய நாமம் வீழ்ச்சியடையக்கூடிய நிலை எழுந்துள் ளது. கென்ய தேயிலைக்கு உயர்ந்த விலை கிடைப்பதற்கு சில காரணங்களாக, கென்யா தனது தேயிலை உற்பத்தியை 11 வீதத்தால் குறைத்துள்ளமையும் சிறந்த சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் கைக் கொள்ளப்பட்டமையும் அமைந்துள்ளன. குறைந்த களைநாசினிகள் பாவனையுடன், சூழலுக்கு நட்புறவான முறையில் தயாரிக்கப்படும் இலங்கைத் தேயிலையின் தரம் உயர்ந்த நிலையில் காணப் படுவதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஆயினும் உரிய முற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடின் இந்த உயர் நாமம் விரைவில் இல்லாமல் போகக்கூடிய நிலை ஏற்படலாம். முறையான சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத விடத்து, இலங்கைத் தேயிலையின் ஏல விலை வீழ்ச்சியடைக் கூடிய நிலை ஏற்படுவதுடன், தொழில் துறையும் பின்னடைவை எதிர்கொண்டு, இலங்கையின் அந்நியச் செலாவணியும் பாதிப்படையும் நிலை ஏற்படும்.

அதிகரித்துச் செல்லும் உற்பத்தி செலவீனம், இலங்கை தேயிலையை சந்தைப்படுத்துவதற்கான போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை போன்ற காரணங்களுக்கான தீர்வைக் காண குறித்த துறைசார்ந்த அனைத்து நிபுணர்களும் தமது கவனத்தை செலுத்த வேண்டும் எனவும், உற்பத்தி செலவீனம் என்பது பெருமளவில் தொழிலாளர்களிடையே தங்கியுள்ள தெனவும், தேயிலைக்கான விலைகளை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் நேரடியாக செல்வாக்கு செலுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

உற்பத்தி செலவீனத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு பெருந்தோட்ட கம்பனிகளை மட்டுமல்லாமல், தேயிலை சிறுதொழில் செய்கையாளர்களையும் பாதித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. தற்போது நிலவும் இந்த சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் இந்த துறையின் தொடர்ச்சியான நிலைப்பாட்டுக்காக, பெருந்தோட்ட கம்பனிகளும், தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து, உற்பத்தித்திறனை அதிகரிப்பது குறித்த தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளதென பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளது.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.