புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
வர்ணம் தொலைக்காட்சி “கன்சுல் இஸ்லாம்” ஹஜ்ஜுப் பெறுநாள் முதல் வெள்ளிதோறும்

வர்ணம் தொலைக்காட்சி “கன்சுல் இஸ்லாம்” ஹஜ்ஜுப் பெறுநாள் முதல் வெள்ளிதோறும்

இஸ்லாமிய சமூக கலை, கலாசார, சமய சஞ்சிகை நிகழ்ச்சி

வர்ணம் தொலைக்காட்சி சேவை பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6.00 மணி முதல் 6.30 வரை “கன்சுல் இஸ் லாம்” இஸ்லாமிய கலை, கலாசார, சமய, சமூக பொக்கிஷங்களை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கவிருக்கிறது. வர்ணம் தொலைக்காட்சிச் சேவை நிறைவேற்று அதிகாரி சதீஸ் ஐயர், முகாமையாளர் முஹம்மத் ஹிஷாம் ஆகியோரின் முயற்சியில் “கன்சுல் இஸ்லாம்” நிகழ்ச்சிகள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், முஸ்லிம் சமூக, சமய, கலை, கலாசாரம் உள்ளடக்கப்பட்ட சஞ்சிகை நிகழ்ச்சியாக தயாரித்து ஒளிப்பரப்பபடவிருக்கிறது.

ஒலி, ஒளிபரப்பாளர் ஐ.டி.என்.ஆரம்ப தமிழ், முஸ்லிம் நிகழ்ச்சி தயாரிப்பாளரும், முத்துச்சரம், ரசிகர் அரங்கம், நாடக அரங்கம் என தொலைக்காட்சி வரலாற்றில் 100 வாரம் மெகா தொடராக ஒளிபரப்பான “அபுநானா” புகழ் டைரக்டருமான லியாவுல் பன்னான் கலைச்சுடர் கலாபூஷணம் அல்ஹாஜ் எம்.பி.ஹுஸையின் பாரூக் நெறிப்படுத்தலில், ராம்சம் சம்பத்தின் ஒளிப்பதிவில் லட்சுமணன் சுதாகர் வீடியோ தொகுப்பில், பாத்திமா பவாசா ரியாஸ்தீன் உதவியுடன் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படவிருக்கிறது.

கன்சுல் இஸ்லாம் நிகழ்ச்சியின் அமைப்பாளர்களாக, பிரபல ஜனரஞ்சக எழுத்தாளர் மொழி வாணன் தேசகீர்த்தி நசாரி காமில், தேசகீர்த்தி ஏ.அப்துல் அkஸ் ஆகியோர் சமூக, கலை, கலாசார சமய பிரிவுக்கு பொறுப்பாகவிருந்து செயல்படுவர்.

நம் நாட்டு கலைஞர்கள் கவிஞர்கள், பாடகர்களின் இசைக்கலைகளைக் கொண்டு நம் நாட்டு படைப்பாக “கன்சுல் இஸ்லாம்” எதிர்வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹஜ்ஜுப் பெருநாள் விஷேட நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்டு பின்னர் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6.00 மணி முதல் 6.30 வரை ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் கலைஞர்களுக்கு களமமைத்துக் கொடுக்கும் நிகழ்ச்சியாக விளங்கும் “கன்சுல் இஸ்லாம்” நிகழ்ச்சியில் தலைசிறந்த உலமாக்களின் நற்சிந்தனைகள், கவிஞர்களின் “கலையரங்கம்”, நம் நாட்டு, வெளிநாட்டு இஸ்லாமிய பாடகர்களின் இஸ்லாமிய கீதங்கள், பக்கீர் பாவாக்களின் “பக்கீர் பைத்” பாடலில் நம்நாட்டு கவிஞர்களின் படைப்புக்கள், அபுநோனா, ஆரிபா, தோது இப்லால், ஹலோ பவ்மி குழுவினரின் சமூக சிந்தனைகள் அடங்கிய நகைச்சுவை துணுக்குகள், முஸ்லிம் பாடசாலை மாணவர்களின் இஸ்லாமிய அறிவுத்திறனை பரீட்சிக்கும் அறிவுக்களஞ்சியம் போட்டி நிகழ்ச்சிகள், முஸ்லிம் பாடசாலைகள், இயக்கங்கள் ஆகியவற்றில் நடைபெறும், கலை, கலாசார விழாக்களின் தொகுப்புகளை முஸ்லிம் செய்திச் சரமாக தயாரித்து வழங்கல் போன்ற அம்சங்களுடன் ஓர் சஞ்சிகை நிகழ்ச்சியாக கன்சுல் இஸ்லாம் தயாரிக்கப்படவிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு பங்குகொள்ள விரும்பும் ஆண்/பெண் ஆர்வமுள்ள கலைஞர்கள் எம்.பி.ஹுசைன் பாரூக், 0712 740 054 இல் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.