புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
உங்கள் சமையல் அறை பகல் நேரங்களில் வெளிச்சமாக இருக்க வேண்டும்!

உங்கள் சமையல் அறை பகல் நேரங்களில் வெளிச்சமாக இருக்க வேண்டும்!

குளியல் அறை உங்கள் வீட்டுக்குள் இருந்தால் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் அந்த அறைக்குள்ளே மெழுகு வர்த்தி ஒன்றை ஏற்றி வையுங்கள். இதனால் குளியல் அறைக்குள் ஏற்படும் தோஷங்கள் குறைந்து விடும்.

வாரத்திற்கு ஒரு முறை இப்படிச் செய்ய முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். குளியல் அறையில் இருக்கும் லைட்டை, அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி ஒளியில் குளிப்பது சிறந்த ஓர் அனுபவமாக இருக்கும். எங்கள் மனதிற்குள் இருக்கும் பிரச்சினைகளுக்கும் அது ஒரு சிறந்த தீர்வாகவும் இருக்கலாம்.

வீட்டில் உள்ள வாசல் கதவோ அல்லது வீட்டிற்குள் இருக்கும் வேறு எந்த கதவாக இருந்தாலும் அதை முழுவதுமாக திறக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் உள்ள கதவுகள் எல்லாம் முழுமையாக திறக்கக் கூடியதாக இருக்கிறதா என்று பாருங்கள். அப்படிப்பட்ட கதவுகள் இருந்தால். அதனால் பலவிதமான தோஷங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இப்படியான அறைகளுக்குள் இருந்து செய்யப்படுகின்ற காரியங்களும் முழுமைப் பெறாமல் போய்விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் அணியும் காலணிகளை வீடெங்கும் போடாதீர்கள். அவை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைத்திருக்க வேண்டும். ஒரு சிலர் வெளியே சென்றுவிட்டு வந்ததும், கண்ட கண்ட இடங்களில் அதை கழற்றிப் போட்டுவிட்டுப் போவார்கள். இப்படி செய்வதன் மூலம் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி ஏதாவது ஒரு நோய் வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

காலணிகளை எல்லாம் ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டும். அல்லது அதற்கென்று தனியாக ஒரு கபர்ட்டை செய்து அதற்குள் அடுக்கி வைக்க வேண்டும். கண்ட கண்ட இடங்களிலோ அல்லது வீடு முழுவதிலுமோ காலணிகளை போட்டு வைக்காதீர்கள்.

உங்கள் வீட்டில் உள்ள சமையல் அறையை எக்காரணம் கொண்டும் இருட்டில் வைக்காதீர்கள். ஒரு சிலர் சமையல் அறையில் தங்கள் வேலை முடிந்ததும் அங்கே எரிந்து கொண்டிருக்கும் லைட்டை அணைத்து விட்டுப் போவார்கள் . இதனால் சமையல் அறை இருட்டாகிவிடும்.

இதனால் என்ன நடக்கும் தெரியுமா?

பணவரவு குறையும் அதிர்ஷ்டம் அலறிக்கொண்டு ஓடிவிடும். சமையல் அறையில் இருக்கும் ஜன்னலை திறந்து வையுங்கள். அல்லது எப்போதும் அங்கே ஒரு லைட்டைப் போட்டு வையுங்கள்.

வீட்டுக்குள் இருக்கும் குளியல் அறையோ டொய்லட்டோ பகல் நேரத்தில் இருளில் மூழ்கி இருந்தால் அங்கே ஒரு லைட்டைப் போட்டு வையுங்கள். வீட்டிற்குள் இருக்கும் பகுதிகளில் இந்த டொய்லட்டும் குளியல் அறையும் தான் அதிகமான தோஷமுள்ள இடங்களாகும். எனவே இந்த இடங்களை எப்போதும் வாசமுள்ள பகுதியாகவும் பகல் நேரத்தில் வெளிச்சம் பாயக்கூடிய விதத்திலும் இருக்கும் விதத்திலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் வீட்டின் இலக்கத்தை வாசலில் பெரிதாக எழுதி வையுங்கள் சற்றுத் தொலைவில் இருந்து பார்க்கும் போது கூட உங்கள் வீட்டின் இலக்கம் தெரிவதாக இருந்தால் அதிர்ஷ்டம் உங்கள் வீடு தேடி வரும். உங்கள் வீட்டு எண்ணிலும் ஒருவிதமான VIBRATION  இருக்கிறது என்பதை மறந்தவிடாதீர்கள்.

எக்காரணம் கொண்டும் கண்ணாடியினால் செய்யப்பட்ட மேசைகளை பயன்படுத்தாதீர்கள்.

உங்களுக்கு கண்ணூர் நிறைய இருக்கிறது அல்லது யாராவது சூனியம் செய்து விட்டார்கள் அல்லது எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றினால்,

நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

அலுவலகத்தில் நீங்கள் அமர்ந்து வேலைசெய்யும் இடத்திற்கு அருகில் இருக்கும் சுவற்றில் சேவல் ஒன்றின் நேரடியாக எடுக்கப்பட்ட படம் ஒன்றையோ வரைபடம் ஒன்றையோ மாட்டி வையுங்கள். உங்களுக்கு ஏற்படக்கூடிய மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு இந்த சேவலின் படம் உங்களுக்கு உதவும். என்று இந்திய வாஸ்து வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் விபரங்கள் தேவை என்றால் 0114949124 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.