புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

இவ்வார பலன்

கிரகம் நிற்கும் ராசி நிலை


குரு : இடபம் (நட்பு)
கேது : இடபம் (நீசம்)
ராகு : விருச்சிகம் (உச்சம்)
சூரியன் : கன்னி (பகை)
சனி : துலாம் (உச்சம்)
புதன் : துலாம் (நட்பு)
சுக்கிரன் : சிங்கம் (பகை)
செவ்வாய் : விருச்சிகம் (ஆட்சி)
சந்திரன் : கடகம், மிதுனம்,
சிங்கம், இடபம்
சிங்கம், இடபம்

07.10.2012 முதல் 13.10.2012 வரை

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா

மேடம்

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

மேட ராசிக்காரர்களுக்கு இவ்வாரம் செவ்வாய், சனி, ராகு, கேது கிரகங்கள் பெரும்பாலும் நல்ல நிலையில் அமையாததன் காரணமாக சிரமங்கள் இருந்த வண்ணம் இருக்கும். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து கொள்ளுங்கள்.
புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமானால் பெரியோர்களின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள்.


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இடபராசிக்காரர்களுக்கு ஜென்மத்தில் அமைந்துள்ள குரு, கேது காரணமாகவும் சூரியன் காரணமாகவும் சில சங்கடங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். அலைச்சல் கூடுதலாக இருக்கும். பிள்ளைகளாலும் தொந்தரவு இருக்கும். சனி, செவ்வாய் காரணமாக பண புழக்கம் தாராளமாக இருக்கும். சமாளிக்க கூடியதாக இருக்கும்.


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

மிதுனராசிக்காரர்களுக்கு குரு, கேது, செவ்வாய், சனி போன்ற கிரகங்கள் நல்ல பலன்களை தரக்கூடியனவாக இவ்வாரம் அமையவில்லை.
எடுக்கின்ற முயற்சிகளுக்கு பலவித சிரமங்களுக்கு முகம் கொடுத்தே காரியங்களை சாதிக்க வேண்டியிருக்கும். ராகு நல்ல இடத்தில் அமைந்திருப்பதால் பரீட்சை வழக்கு முடிவுகள் பாதகத்தை தராது.


கடகம்

புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்

கடகராசிக்காரர்களுக்கு செவ்வாய், சனி, ராகு இவ்வாரம் நன்மை தரக்கூடிய இடங்களில் அமைந்திருக்கவில்லை. எல்லா விதத்திலும் கஸ்டங்களை எதிர்நோக்கி உங்களுடைய தேவைகளை அடையக்கூடியதாக இருக்கும். பிள்ளைகளாலும் மனதில் யோசனை இருக்கும்.
தேவைக்கு பணம் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாக இருக்கும்.


சிங்கம்

மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்

சிங்க ராசிக்காரர்களுக்கு செவ்வாய், சனி கிரகங்கள் நன்மை தரக்கூடிய இடங்களில் அமைந்திருப்பதால் பணப் புழக்கம் தாரளமாக இருக்கும்.
சகோதரர்கள் உதவுவார்கள். வாகன விற்பனையாளர்களுக்கு லாபம் ஏற்படும். மேலும் அவ்வப்போது சில சிரமங்களுக்கு உள்ளாக நேரிடும்.


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

கன்னி ராசிக்காரர்களுக்கு இவ்வாரம் செவ்வாய், சனி மற்றும் ஜென்மத்தில் உள்ள சூரியன், புதன் காரணமாக எதோ ஒரு வழிகளால் தொந்தரவும் அலைச்சலும் ஏற்படலாம்.
நிம்மதி குறைவாக இருக்கும். காரியங்களை செய்யக்கூடிய வழி வகைகள் அவ்வப்போது உங்களுக்கு கிடைத்து கொண்டிருக்கும்.


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

துலாராசிக்காரர்களுக்கு ஜென்மத்தில் உள்ள செவ்வாய், சனி மற்றும் ராகு, கேது, குரு ஆகிய கிரகங்களின் இருக்கைகள் நல்ல இடங்களில் அமையவில்லை. பலவித சிரமங்களுக்கு மத்தியில் உங்களது முயற்சிகளை கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.
பன்னிரண்டாம் இடத்து சூரியன், புதன் காரணமாக பெருமளவு செலவுகளுக்கு இடம் உண்டு.


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜென்மத்தில் உள்ள ராகு காரணமாகவும் 12 ஆம் இடத்தில் அமையப்பெற்ற செவ்வாய், சனி கிரகங்கள் நன்மை தரக்கூடிய ஸ்தானங்களில் அமையவில்லை. வெளியூர் பிரயாணமும் ஏற்படவில்லை. விரும்பியவரை பிரியவும் நேரிடலாம். அவ்வப்போது தேவைக்கு ஏதோ ஒரு வழியில் பணம் வந்து சேரும்.


தனுசு

மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்

தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய், சனி சூரியன் நல்ல இடங்களில் அமைந்திருப்பதால் எதிர்பாராத இடத்தில் நல்ல யோகம் ஏற்படலாம்.
வெளியூர் பிரயாணம் கைகூடி வரும். வைத்திய ஆலோசனை பெறவேண்டி வரும். கடன்கள் இல்லாமல் போகும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வந்து சேரும்.


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

மகர ராசிக்காரர்களுக்கு குரு, ராகு கிரகங்கள் நல்ல இடங்களில் அமைந்திருப்பதால் நீங்கள் எடுத்த காரியங்களை சுமுகமாக முன் எடுத்து செல்வீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்தும் செவ்வாய், சனி கிரகங்கள் சிறப்பான இடத்தில் அமையாததால் யாரிடமிருந்தும் நன்மையை நீங்கள் எதிர்பார்க்க முடியாது.


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்

கும்பராசிக்காரர்களுக்கு ராகு, கேது, செவ்வாய், சனி கிரகங்கள் இந்த வாரம் உங்களுக்கு நன்மை தரக்கூடிய இடங்களில் அமையப் பெறாததால் முழுமையாக நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. தந்தையாரை விட்டு பிரிய வேண்டி வரும். பல கஷ்டங்கள் இருந்தாலும் உங்களது காரியங்களை ஓரளவாவது செய்யக்கூடியதாக இருக்கும்.


மீனம்

பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

மீனராசிகாரர்களுக்கு சூரியன், புதன், செவ்வாய், சனி, ராகு கிரகங்கள் நன்மைகளைத் தரக்கூடிய இவ்வாரத்தில் அமையவில்லை. எடுத்த காரியங்களுக்கு எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் வரும் தடைகளை தாண்டித் தான் உங்களது எண்ணங்கள் நிறைவேறக் கூடியதாக இருக்கும். திருமண பேச்சுக்கள் தாமதமாகும். அவ்வப்போது கைக்கு பணம் வந்து சேரும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.