புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 

மீண்டும் மணியுடன் ஐஸ்!

மீண்டும் மணியுடன் ஐஸ்!

நடிகை ஐஸ்வர்யா ராய், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார்.

குழந்தை பெற்றதற்கு பின்பு நடிகை ஐஸ்வர்யா நடிக்கும் படம் இதுவாகும்.

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் ஐஸ்வர்யா அறிமுகமானார்.

பின்னர் பொலிவுட்டில் புகழ்பெற்று விளங்கினாலும் தமிழில் அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டார்.

கடைசியாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்தார். குழந்தை பெற்றெடுத்த பின்பு நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் நடித்துக் கொடுத்தார்.

இந்நிலையில் 1938ம் ஆண்டு கால நாவலான ரெபக்காவை படமாக்கும் முயற்சியில் இறங்குகிறார் மணிரத்னம். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒப்பந்தமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.