புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

இந்கக் கல்லிலும் . . .

அது ஓர் அரச மருத்துவமனை. இரவு பன்னிரண்டு மணி இருக்கும் எல்லா நோயாளிகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். ஓர் சிலரைத் தவிர, ஒரு நர்ஸ் மட்டும் உலா வந்து கொண்டிருக்க, இன்னும் சில தாதிகள் தொலைக்காட்சியில் இலயிக்க முடியாமல் தூக்கக் கலக்கத்தில் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தனர். நுஸ்ராவுக்கு உறக்கமே வரவில்லை. ம்

இரவு திடீரென அவளது அன்னைக்கு நெஞ்சு வருத்தம் கூடிவிட்டது. அவசரமாக இங்கு கொண்டுவந்து சேர்த்தார்கள். அவசரமாக மேற்கொள்ளப்பட்ட தீவிர சிகிச்சைகளுக்குப் பிறகு வார்ட்டில் கொண்டுவந்து போட்டார்கள். சேலைன் ஏறிக்கொண்டிருந்தது. அவள் அன்னை ஆமினா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அன்னையின் நிலைக்குறித்து ஏற்பட்ட பதட்டம் இன்னும் முழுமையாக விடுதலைப்பெற்றிருக்கவில்லை. உடலும் உள்ளமும் சோர்ந்து போயிருந்தாள்.

நோயாளிகளுக்கு துணையாக இருக்கும் பலர் நோயாளிகளுக்கு அருகிலேயே தரையில் பாய்களையும், பெட்சீட்களையும் விரித்து தலையணைக்கு பதிலாக துணிகளால் பொட்டலம் செய்து, அதை தலைக்கு வைத்து உறங்கிக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் தமது கைகளை மடித்து தலையணையாக்கிக் கொண்டிருந்தனர்.

நுஸ்ரா அன்னையை நோக்கினாள். கண்கள் பணித்தன. அன்னை இன்னும் நீண்டகாலம் வாழ வேண்டுமென உள்ளம் இறைவனை பிரார்த்தித்துக்கொண்டது. பெட்சீட்டினால் மார்புவரையில் நன்றாக போத்திவிட்டாள். அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தபடி கட்டிலில் தலையை சாய்த்துக்கொண்டாள். உறக்கம் மெதுவாக அவளை ஆட்கொள்ளத் துவங்கிய வேலையில், அடுத்த கட்டிலில் இருந்த ஓர் வயோதிப நோயாளிப் பெண்ணின் முனங்கள் அவளை உசுப்பிவிட்டது.

“மிk... மிk...” என அவள் மிகச் சிரமப்பட்டு பல முறைகள் அழைத்து விட்டாள். ஒரு மிஸியையும் காணவில்லை. நுஸ¤ரா எழுந்து சென்று நர்ஸை தேடினாள் அவர்கள் இருந்த இடம் காளியாக இருந்தது. அவள் திரும்பி வருவதைக்கண்ட அந்த மூதாட்டி

“துவே...மே என்ன துவே (மகளே இங்க வா) என அழைத்தாள். நுஸ்ரா அவள் அருகில்சென்று” மொனவா¡ ஓனே அம்மே. மிkலா கவ்ருத் னே’ (உங்களுக்கு என்ன வேணும் அம்மா மிஸ் யாரையும் காணவில்லை) என மிகவும் தயவோடு வினவினாள். அவளால் தொடர்ந்து பேசுமுடியாத அளவுக்கு வரட்டு இருமல் அவளை வாட்டி வதைத்தது.

“மட்ட உணு வத்துர டிக்கக் ஓனே துவே” (எனக்கு சுடு நீர் கொஞ்சம் வேணும் மகள்) என இருமி இருமியே மிகச் சிரமப்பட்டு வேண்டினாள். உடனே நுஸ்ரா அவளது சுடுநீர் போத்தளை தூக்கி ஆட்டிப் பார்த்தாள். அதில் சுடுநீர் இருக்கவில்லை. அவள் உபயோகிக்கும் கிளாஸை எடுத்துவந்து தமது போத்தலில் இருந்த கொதிநீரை ஊற்றி. ஆறிய நீரோடு கலந்து, பருக முடியுமான சூட்டில் கொண்டுபோய் கொடுத்தாள். இருமி இருமியே நா வரண்டு போயிருந்ததால் அவசரமாக அதை வாங்கிப் பருக முற்பட்டுத் தோற்றுப்போனார். அவளது கரங்கள் நடுங்கிக் கொண்டிருந்ததால் அந்த தண்ணீரை வாங்கி அவளால் தனியாக பருக முடியவில்லை.

அவள் நிலையை உணர்ந்த நுஸ்ரா மெதுவாக அவளது தலையை ஒரு கையால் தூக்கிப் பிடித்து,மறுகையில் அந்த நீரைப் பருக்கினாள். பருகி முடிந்ததும் மீண்டும் படுக்க வைத்தபோது அவளது கையைப் பற்றிப் பிடித்துக்கொண்டு மெதுவாக சிங்கள மொழியில் கூறினாள். “இதுக்கு மேல என்னால பொறுத்துக்கொள்ள முடியாதும்மா” என்றபோது நுஸராவுக்கு எதுவுமே புரியவில்லை.

“என்ன வேணுமம்மா?”

பணிவோடு வினாவினாள்

“பாத்ரூம் போகனும் ரொம்ப நேரமா தவிக்கிறேன்”. இப்படி கூறியபோது நுஸ்ராவுக்கு அவள் மீது மிகவும் பரிதாபம் ஏற்பட்டது.

“எப்படி போவீங்க? உங்களால நடக்க முடியுமா?”

‘நடக்க முடியாது வீல் செயாரிலதான் போகனும்.”

வீல் செயாரைத் தேடிப்போனாள் நுஸ்ரா. தாதிப்பெண்களை இன்னும் காணவில்லை. ஒருவாறு வீல் செயாரைத் தேடி தள்ளிக் கொண்டு வந்தாள். அவளின் ஒத்துழைப்புடன் அதில ஏற்றி கழிவறைக்கு கொண்டு சென்றாள். எல்லாம் முடிந்து திரும்பி வரும்போது தாதிப்பெண்கள் வந்திருந்தனர். நுஸ்ராவைக் கண்டதும்.. “இந்த அம்மாவால தனியா எதையுமே செய்ய முடியாது. அவர உதவிக்கு ஆள் வைக்கச் சொல்லி பல தடவை சொல்லிவிட்டோம். இதுவரை இவ வீட்டார் யாருமே கணக்கெடுக்கவேயில்ல. இந்த ஹொஸ்பிட்டலிலயே கூலிக்கு ஆள் இருக்காங்க. அதையும் செய்யாம இருக்காங்க. ஹொஸ்பிட்டலில போட்டதோட தன் கடமையெல்லாம் முடிஞ்சிட்டதா நினைக்கிறாங்க போலயிருக்கு. பாவம் இந்த அம்மா என்றாள் ஓர் தாதிப்பெண். நுஸ்ராவுக்கு அந்த மூதாட்டியின் மீது ஏற்பட்ட பரிதாபம் அதிகரித்தது. கவனமாக கட்டிலில் ஏற்றி படுக்க வைத்துவிட்டு வீல் செயாரை இருந்த இடத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்தாள். இப்போது அந்த மூதாட்டி அதிகமாக இரும ஆரம்பித்து விட்டிருந்தாள். மீண்டும் சுடுநீர் பருகச் செய்தாள் நுஸ்ரா.

இருமி இருமி மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டி ருந்தவளை நீண்ட நேரமாக நெஞ்சை தடவிவிட்டுக் கொண்டிருந்தாள்.

இப்படியே பொழுது விடிந்துவிட்டது. நோயாளர் பார்வையிட ஒதுக்கியிருந்த காலை வேலையிலயே ஓர் பெண் அந்த மூதாட்டியிடம் வந்துவிட்டதில் நுஸ்ராவுக்கு திருப்தி ஏற்பட்டது. இனி அவள் கவனித்துக்கொள்வாள் என எண்ணினாள். ஆனால் சிரிது நேரத்திலயே அவளது திருப்தி காணமல் போய்விட்டது. அவள் வந்த நேரத்திலிருந்தே அந்த மூதாட்டியின் ஒவ்வொரு குறைகளையும் “கண்டுபிடித்து ஏசிக்கொண்டே இருப்பதைக் கண்டாள். “கிaம்கிறேக்கர்” பிஸ்கட் உண்ணும்பேது சிறுசிறு துண்டுகள் கட்டிலுக்கு கீழே வீழந்து கிடந்தன. அதுக்கு ஓர் நீண்ட ஏச்சு. பிளாஸ்க்கை ஒழுங்காக மூடி வைக்கவில்லை கொதிநீர் வாங்கி வைத்துக்கொள்ளவில்லை. கட்டிலில் பெட்சீட் ஒழுங்காக விரித்து இல்லை. இப்படியே சீ.ஐ.டி... வேலையில் “அவார்ட் வாங்கிக் கொண்டவளைப்போன்று ஒவ்வொரு தவறுகளையும் தேடித்தேடி ஏசும்போது நுஸ்ராவுக்கு அவள் மீது கோபம் கோபமாக வந்தது.

“வீட்டுலதான் சுத்தமாக இருக்க தெரியாது. இங்கேயும் வந்து அதே வேலயைதான் செய்ற்ங்களா? இப்படியே இருந்தா உங்களால சுகமாகி வீட்டுக்கு வர முடியாது. இங்கேயே கிடந்து. சாகவேண்டியதுதான். “ இப்படி வந்தவள் திட்டியபோது நுஸ்ரா உதிரம் கொதித்துப்போனாள்.

என்ன பெண் இவள்? ஒரு நோயாளியோடு எப்படி நடந்துகொள்வது, எப்படி பேசுவது என்பது கூட தெரியாத, ஈவிரக்கமில்லாத, கல்லாக இருக்கிறாளே நிச்சயமாக அவள் அவளது மகளாக இருக்க முடியாது. மகளாக இருந்தால் இப்படி பேச மாட்டாள். இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அவள் அந்த மூதாட்டியின் ‘மருமகள்’ என அறியக்கிடைத்து. இப்போது அவள் கொதிப்பு அதிகமாகியது. காலம் முழுவதும் அவளை வைத்துக் காப்பாற்றக்கூடிய ஓர் மகனை பெற்று முழுமையாக அவளுக்கு கொடுத்திருக்கிறாளே. அந்த “நன்றி கூடவா இல்லை. “நன்றி” என்பது எந்த மனிதரிடமும் கட்டாயமாக இருக்கவேண்டிய மிகச் சிறந்த நற்குணமாகும் என அவளது அன்னை அடிக்கடி கூறுவார். அத்தோடு ஒரு வாகனத்தின் தங்குத்தடைகளற்ற சீரான ஓட்டத்திற்கு அதன் “இஞ்ஜின்’ முக்கிய இடம் வகிக்கிறது. அந்த இஞ்சின் றிப்பையர் என்றால் சீரான ஓட்டமும் தடைப்பட்டு விடுகிறது. அதில் தொடர்ந்து பிரயாணிக்க வேண்டுமானால் அடிக்கடி சீர்த்திருத்த வேண்டியதாகிவிடுகிறது. மனித நிலையும் இப்படித்தான். ஒருவரிடம் “நல்ல உள்ளம்” இருக்குமானால் அவரது அனைத்துச்செயல்களும் நல்லதாகவே அமைந்து விடுகிறது. உண்மை, நேர்மை, நன்றி, பாசம் என எதையுமே வெவ்வேறாக தேட வேண்டிய அவசியமின்றி அவை அனைத்தும் அதில் ஐக்கியமாகியிருந்துவிடுகிறது.

அவை இல்லையெனில் “உள்ளம்” என்ற “என்ஜினுக்கு” அடிக்கடி “உபதேசம்” ஏனும் றிப்பையாரைக் கொண்டு சீர்திருத்த வேண்டும். அதுவும் இல்லையெனில் அவர் ஓர் மனிதனாகவே இருக்கப்போவதில்லை என்ற அவளது அன்னையின் கருத்துக்களை அவள் சிறுபிராயத்திலயே ஏற்றுக்கொண்டிருந்ததினால் தான் இன்று, அவளாலும் ஓர் நல்ல மருமகளாக, நல்ல மனைவியாக, நல்லதாயாக வாழ முடிகிறது. ஒருவர் நல்லவராய் வாழவில்லை என்றால் அவருக்கு நல்ல உள்ளம் இல்லை என்பதோ, அல்லது நல்ல உபதேசம் கிடைக்கவில்லை என்பதோ தான் காரணம் எனக்கூரியதும் அதே அன்னைதான் அதில் பொதிந்துள்ள உண்மைகளை அவள் வாழ்வில் நேரிடையாக அடிக்கடி சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறாள்.

இன்று அந்த அன்னைதான் ஓர் இருதய நோயாளியாக வைத்தியமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அன்று அவருக்கும், இன்று அவள் பிள்ளைகளுக்கும் சிறந்த உபதேசியாகவும், சிறந்த வழிக்காட்டியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த அன்பு ஜீவன் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதே அவளது மானசீகமான பிரார்த்தனையாகும்.

அவளது ஏச்சிக்களில் உடைந்துபோயிருந்த அந்த மூதாட்டியின் பரிதாபமான அந்த முகத்தை நோக்கியபோது அவளது கண்கள் கலங்கியது. வைத்தியர்களின் பரிசோதனை நேரம் துவங்கியது. அவளது அன்னை ஆமினாவை பரிசோதித்தவைத்தியர் அவசரமான ஓர் இரத்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்ற போது தவித்துப்போனாள். தனியார் நிலையத்தில் அந்த அறிக்கையை பெறவேண்டும். அவசரமான சூழ்நிலையில் அங்கு வரவேண்டி ஏற்பட்டதால் பணம் எதுவும் கொண்டு வரவில்லை. என்ன செய்வது என தடுமாறிக்கொண்டிருந்தாள். ஒரு தாதிப் பெண் வந்து அன்னையின் “குருதியை” எடுத்து ஓர் குப்பியில் இட்டு அவரிடம் கொடுத்தாள். “மிஸ் இந்த டெஸ்ட்டை பகலைக்கு செஞ்சிட்டு வரட்டுமா?” என்று மெதுவான குரலில் விணவினாள் அவள்.

இதுட றிபோர்ட் கிடைச்சாதான் உங்க உம்மாவுக்கு ட்aட்மண்ட தொடங்க ஏலும், அதனால அவசரமா இந்த டெஸ்ட்டை செஞ்சிட்டு வாங்க” எனக் கூறிவிட்டு நகர்ந்தாள் அந்த மிஸி. “என்ன செய்யலாம்?” என குலம்பியவள்” யா அல்லஹ் நீதான் எனக்கு உதவனும் “என்று உள்ளத்தால் வேண்டிய வண்ணமிருந்தாள். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்த மூதாட்டியின் மருமகள்... “மொனவாத நங்கி ப்ரஷ்னயக்த? தங்கச்சி ஏதும் பிரச்சினையா என வினவினாள் . “இந்தக் கல்லுக்கிட்டயா என் கவலையை சொல்லனும்? “ என எண்ணியது அவள் மனம். அவளை திரும்பியும் பார்க்க ,அவளுக்கு மனம் வரவில்லை. என்ன ஆச்சர்யம் அவனின் அருகிலயே வந்து மீண்டும் சிங்களத்தில் வினவினாள்.”உங்களுக்கு என்ன பிரச்சினை? ஏன் கவலயோட இருக்கீங்க?” என்று உடனே அவளுக்கோபம் வந்தது. அவரின் அருகிலயே வந்து மீண்டும் சிங்களத்தில் வினவினாள்.

“உங்களுக்கு என்ன பிரச்சினை ஏன் கவலயோட இருக்கீங்க? என்று. உடனே அவருக்கு கோபம் வந்தது.

“சொந்த மாமிய கவனிக்கத் தெரியலை. அதுலயும் மத்தவங்கட விசயத்துல தலையிடுறாளே. இவளெல்லாம் ஒரு பொம்புளயா?” இப்படித் தோன்றியது அவளுக்கு ஆயினும் அவள் விடுவதாக இல்லை. சற்று எரிச்சலுடன் அவளை நோக்கினாள் நுஸ்ரா.

“கியன்ன நங்கி ப்ளட் செக் கரன்ன யன்ன சல்லி ஓனத?” (ரத்தம் பரிசோதனைக்குப் போவ சல்லி வேணுமா?)

அவளிடம் இப்படியொரு கேள்வியை நுஸ்ரா எதிர்பார்க்கவேயில்லை. இன்னும் நம்ப முடியவில்லை அவளால் அதிசயமாகப் பார்த்தாள். அவள் கேட்டதோடு மட்டும் நின்றுவிட இல்லை.

உடனே தனது பர்ஸைத் திறந்து ஆயிரம் ரூபாய்த் தாளை எடுத்து அவளிடம் நீட்டினாள். “இக்மனட்ட ஆசிரி ஹொஸ்பிட்டல்ட்ட யன்ன நங்கி. பரக்குனோத் மே ப்லட் சாம்பல் கன்னே நே” ,(சீக்கிரமா ஆசிரிக்கு போங்க. சுணங்கினா இந்த பிளட்டை சம்பல் எடுக்க மாட்டாங்க) எனத் துரிதப் படுத்தினாள் அவள். நுஸ்ராவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

இது எதிர்பாராதா உதவி

“கெதர கட்டிய ஆவாம மே சல்லி அரன் தென்னம் “வீட்டாரு வந்ததும் இந்த சல்லிய வாங்கித் தாரன், என்றவாறு நன்றியோடு அந்த பணத்தை வாங்கினாள். நன்றியை தெரிவித்துவிட்டு அவசரமாக செயற்பட்டாள். இந்தக் கல்லில் கூட “ஈரம்” இருக்கும் அவள் எதிர்பார்க்கவில்லை. எந்தவொரு அறிமுகமும், எந்த உறவுகளும் இல்லாத ஒருவருக்கு தானாக முன் வந்து உதவும் அளவிற்கு மனிதாபிமானம் இருக்கும் ஒரு பெண்ணுக்கு, ஏன் தன்னுடைய உறவின் துன்பத்தை உணர முடியவில்லை? அப்படியானால் இந்த இஞ்சினுக்கு றிப்பையார் தேவைப்படுகிறது. அந்த றிப்பையாரை செய்ய கொஞ்சம் முயன்று பார்த்தால் என்ன. இன்றே இல்லாவிட்டாலும் கூட என்றாவது ஓர்நாள் அந்த றிப்பையார் வேலை செய்யலாம் யார் எப்படிப் போனால் என்ன? என்று நினைப்பதைவிட, தன்னால் முடிந்த உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வாழும் வாழ்க்கையே அர்த்தமுள்ள வாழ்கை “என அவரது அன்னை அடிக்கடி சொல்வது அவளது ஞாபகத்தில் எட்டிப் பார்த்தது. முதலில் அன்னையின் வேலையை முடிக்க விரைந்தாள். தன்னையே நம்பி, தன்னையே அனுதினமும் நாடி வாழும் ஜீவன்களோடு தான் இருப்பதாகக் கூறும், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவிகள் அடிக்கடி கிடைத்து அவளை மெய்சிலிர்க்க வைப்பதை எண்ணி மானசீகமாக இறைவனுக்கு நன்றி கூறினார். அல்ஹம்துலில்லாஹ்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.