புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

சப்ரகமுவ மாகாண சபைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ‘லலிதா’ கே. இராமச்சந்திரன், அண்ணாமலை பாஸ்கரன் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் எடுத்துக்கொண்ட படம். (படம்: சுதத் சில்வா)

புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் சமரசம் காண முயற்சி;

கூட்டமைப்பில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த துடிக்கும் தமிழரசு கட்சி

பதிவு, சின்னம் விடயத்தில் கூட்டுக்கட்சிகள் விடாப்பிடி

தமிழ்க்கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் வலு வாக எழுந்துள்ள நிலையில் அந்தக் கூட்டமைப்பில் பிரதான பாத்திரம் வகிக்கும் தமிழரசுக் கட்சி பதிவு செய்யும் விடயத்தில் முரண்பட்டு நிற்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் தமது விடாப்பிடியான போக்கைத் தளர்த்தாவிட்டால் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படும் சாத்தியக்கூறுகள் தவிர்க்க முடி யாததாகி விடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விவரம் »

வடக்கு முதலமைச்சர் கனவில் இருப்பவரின் காய்நகர்த்தல்?

தனிநபரின் ஆசை வேட்கைக்கு பலியாகிறதா தமிழ்க் கூட்டமைப்பு!

கூட்டமைப்பின் உட்கட்சி முரண் பாடுகளுக்கு ஒரேயொரு பிரதான காரணமே கூறப்படுகிறது. நடைபெறவுள்ள வடமாகாண மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்காக தனக்குப் போட்டியாக எவரும் வந்துவிடக் கூடாது என்பதில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் முக்கியஸ்தரான முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர் பக்குவமாகக் காய் நகர்த்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விவரம் »

இருபது-20 உலகக் கிண்ணம் யாருக்கு?

இலங்கை - மேற்கிந்தியதீவுகள் கொழும்பில் இன்று பலப்பரீட்சை

இலங்கையில் நடைபெற்றுவரும் இருபது-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டத்தில் இலங்கை அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இன்று இரவு 7 மணியளவில் கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

விவரம் »

நிதி விவகாரங்களை பங்காளி கட்சிகளுடன் பகிர மறுக்கும் தமிழரசுக் கட்சி;

TNA க்குள் குழப்பம்

சம்பந்தன் - சுரேஸ் முறுகல் தொடர்வு: தீர்வு இல்லையேல் புதிய கட்சி உருவாகும் நிலை

o கூட்டுக் கட்சிகளுக்கு தெரியாமலே வெளிநாடுகளில் கிளையா?
o புலத்திலிருந்து வரும் பாரிய நிதியை தமிழரசுக் கட்சி கையாடல்!
o காலப் போக்கில் கூட்டுக்கட்சிகளை கழற்றி விடுவதே நோக்கம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய பங்காளிக் கட்சிகளை இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியாகவும் அந்நியப்படுத்திவிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்த அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாகத் தகவல் கசிந்துள்ளது.

விவரம் »

2014 உலக இளைஞர் மாநாடு இலங்கையில்

பான் கீ மூன் தெரிவிப்பு

2014ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் நாயகம் பான் கீ மூன் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.

விவரம் »

முஸ்லிம் மக்களின் பிரதிநிதி தமிழ் தேசிய கூட்டமைப்பா?

மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்கிறார் ஹக்கீம்

கிழக்கு தேர்தல் மூலம் அம்பலம்

தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பை முஸ்லிம் மக்கள் தங்களது பிரதிநிதிகளாக ஒருபோதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நீதி அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவரம் »

நுவரெலியா, வலப்பனை சூரியகாந்தி தோட்டத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள கலாசார மண்டபத்திற்கான அடிக்கல்லை பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஜெ. ஸ்ரீரங்கா எம்.பி நாட்டிவைத்தபோது எடுத்த படம். (படம்: எஸ். ரஞ்சன்)

 

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk



இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.