புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
‘இந்துசமயமும், அவைதிக நெறிகளும்’ ஆய்வரங்கு

‘இந்துசமயமும், அவைதிக நெறிகளும்’ ஆய்வரங்கு

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் புத்தசாசனம், மத அலுவல்கள் அமைச்சு ஒன்றிணைந்து நேற்று முன்தினத்திலிருந்து 08.10.2012 வரை இந்து சமயமும், அவைதிக நெறிகளும் என்ற தலைப்பில் ஆய்வரங்கு ஒன்றை உருத்திரா மாவத்தை, வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் தினமும் காலை 9.00 மணியிலிருந்து நடாத்திவருகின்றது.

இவ் ஆய்வரங்கின் முதல் நாளுக்குப் பேராசிரியர் எஸ். தில்லைநாதன் தலைமை வகித்தார்.

இவ்வாய்வரங்கினை சிறப்பாக வருடம் தோறும் நடத்துவதற்கு பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருப்பவர் பேராசிரியர் சி.பத்மநாதன் என்றால் மிகையாகாது. இவரின் வழிகாட்டல் இத்திணைக்களத்திற்கு மிகவும் இன்றியமையாத தொன்றாகும்.

பேராசிரியர் பத்மநாதன் 1992ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இத்திணைக்களத்தில் ஆலோசகராக இருந்து மகத்தான ஆலோசனைகளை வழங்கி வழிநடத்திவருகிறார். இவர் திணைக்கள ஆய்வுப்பிரிவின் இந்துக்கலைக் களஞ்சிய ஆலோசகர் குழுவின் தலைவராக இருந்து கடந்த பல வருடங்களாகச் செயலாற்றி வருகின்றார். இவரின் வழிகாட்டலின் கீழ் 14க்கும் மேற்பட்ட ஆய்வரங்குகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் பத்மநாதன் 1940ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் பெற்றோர் சிவசுப்பிரமணியம், சிவபாக்கியம் ஆவார். இவர் தமது ஆரம்பக்கல்வியை 1945 -49 வரை அராலி சரஸ்வதி வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை 1950-59 வரை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கற்றார். இதன்பின்னர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி இந்திய வரலாற்றைப் பிரதானமாகக் கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க மாணவராகப் பரீட்சையில் எல்லாக் காலங்களிலும் முதல் நிலையில் சித்தியடைந்தார். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணி புரியும் வாய்ப்பிணைப்பெற்றார்.

அதனைத் தொடர்ந்து இந்திய வரலாறு, இலங்கை வரலாறு, இலங்கைத் தமிழ் சாசனங்கள் பதவி, ஏறக்குறைய 200க்கு மேற்பட்ட கட்டுரைகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியவர். இந்து நாகரீகம் தொடர்பாக இவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை.

“கலாபூஷணம்”

செல்வத்தம்பி மாணிக்கவாசகர்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.