புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 

2012 மணமகள் கண்காட்சியில் தமது திறமையை வெளிப்படுத்திய கிறிஸ்ஸி அகடமி மாணவர்கள்

2012 மணமகள் கண்காட்சியில் தமது திறமையை வெளிப்படுத்திய கிறிஸ்ஸி அகடமி மாணவர்கள்

கிறிஸ்ஸியின் ஹெயார் டிசைன் ஸ்டூடியோ மற்றும் அகடமி (Chrissy’s Hair Design Studio and Academy)  தனது முதல்வர் கிறிஸ்ஸி றொசெய்ரோ தலைமையில் வருடாந்த பட்டமளிப்பு விழாவை அண்மையில் வெற்றிகரமாக நடாத்தியது. வத்தளை, கந்தானை போன்ற இடங்களில் அமைந்துள்ள கிறிஸ்ஸியின் ஹெயார் டிசைன் ஸ்டூடியோ மற்றும் அகடமியில் சிகையலங்காரம், அழகியல் துறைகளில் உள்ளூர் மற்றும் சர்வதேச டிப்ளோமா கற்கைநெறிகளில் சித்தியெய்திய இன்னொரு தொகுதி மாணவர்கள் இந்தப் பட்டமளிப்பு விழாவில் தமது பட்டத்தைப் பெற்றுக்கொண்டனர். இவர்கள் அனைவரும் இலங்கைக் கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற 2012 ஆம் ஆண்டுக்கான மணமகள் கண்காட்சியில் சிகையலங்காரம், ஒப்பனை போன்றவற்றில் தமது விசேட திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

சிகையலங்கரிப்பாளர்கள் மற்றும் அழகுக்கலை நிபுணர்களின் இலங்கை ஒன்றியத்தின் (SLAHAB) முன்னாள் தலைவரான கிறிஸ்ஸி றொசய்ரோ இங்கிலாந்தின் புகழ்பெற்ற Morris School இல் தனது முதலாலது டிப்ளோமாவைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து முடிதிருத்தும் துறையில் உயர் டிப்ளோமாவையும் Tony & Guy இடமிருந்து படைப்பாற்றல் கொண்ட முடி திருத்தும் நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்து கொண்டார். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரேயே தனது சொந்த அழகு நிலையத்தை ஆரம்பித்த இவர் மணப்பெண் அலங்காரம், சிகையலங்காரம் ஒப்பனை ஆகியவற்றைத் தொழிலாக முதலில் தொடங்கினார்.

கிறிஸ்ஸி றொசய்ரோ மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் கேடயங்களையும் வழங்கிக் கெளரவித்த இந்நிகழ்வில் மணமகள் அலங்காரத்தை முன்பு மேற்கொண்டவர்கள், மணமகள்களாக உள்ளோர், வாடிக்கையாளர்கள், பெற்றோர்கள் ஆகியோருடன் மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர். சிகையலங்காரத்திலும் ஒப்பனையிலும் தமது ஆற்றல், படைப்புத் திறன் ஆகியவற்றுடன் நிறப்பயன்பாடு, முகத்தின் அமைப்பு ஆகிய நுணுக்கங்களைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கு இந்த மணமகள் கண்காட்சியில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.