புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
அறிஞர் அண்ணா விழாவில் ஐந்து கலைஞர்களுக்கு கௌரவம்

அறிஞர் அண்ணா விழாவில் ஐந்து கலைஞர்களுக்கு கௌரவம்

,திரிஸ் என்றால் நினைவில் வந்து நிற்பவர் எம்.ஜி.ஆர். அறிஞர் அண்ணாவையும், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரையும் தற்போது அம்மாவையும் என்றும் மறவாத தீவிரத் தொண்டர் இந்த எஸ்.எச்.எம். இதிரிஸ்.

42 ஆண்டுகளாக தமிழகத் தலைவர்களுக்காக கூட்டம் போட்டு குடியிருந்த இல்லிடத்தையும் இழந்த நிலையிலும் அண்ணாதுரையையும், எம்.ஜி.ஆரையும் ஆண்டாண்டு நினைவு கூரும் இவர், கடந்த ஞாயிறு அண்ணாவின் 104ஆவது பிறந்த நாளை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடத்தி முடித்தார்.

அண்ணா விழாவுக்கு அனுசரணை வழங்கி அன்புக்கரம் கொடுத்தவர் மக்கள் ஆதரவை பெற்றுவரும் நவோதய இளைஞர் அமைப்பின் தலைவர் தேசமான்ய, டாக்டர் எஸ்.கே.கிருஷ்ணா, அண்ணா விழாவில் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக கலைப் பணி ஆற்றிவரும் ஐந்து முஸ்லிம் கலைஞர்களுக்கு பணப் பரிசில் வழங்கி ஐக்கிய உணர்வை வெளிப்படுத்தினார் விடிவெள்ளியாக விளங்கும் எஸ்.கே.கிருஷ்ணா.

பழம்பெரும் பாடகி கைரியா இஸ்மாயில், அபுநானா குழுவின் நகைச்சுவை நாயகி “ஆரிபா” ஞெய் றஹீம் ஷஹீட், நாடகக் கலைஞர் உல்பத் நசார், சகோதரி நூர்ஜஹான் மர்சூக்குடன் என்னையும் இணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர் இதிரிஸ்.

விழாவுக்கு தொழிலதிபர்கள் கலைக்காவலர்கள் டாக்டர் ஏ.பி.அப்துல் கையூம், எம்.எஸ்.தாஜ்மஹான் முன்னிலை வகித்தனர். நவோதய பொதுச்செயலாளர் சந்திரன் இளையதம்பி இனிய தமிழில் வரவேற்புரை வழங்க, சிறப்புரை ஆற்றினார் சிந்தைக்கவர் செந்தமிழில் தாஜ்மஹான்.

அறிஞர் அண்ணா பற்றிய அரிதான தகவல்களை அள்ளி வழங்கினார் அன்பழகன். தமிழக சொற்பொழிவாளர்களுக்கு ஈடாக இலங்கையிலும் இருக்கிறார்களென்பதை அறிவிப்பாளர் ச.சசாங்கன் சர்மா சுந்தரத் தமிழில் பேசி சபையோரை சொக்கவைத்தார், என்னையும்தான்............

“நவோதய” ஆதரவில் நூறு மாணவ மாணவி களுக்கு பாடப் புத்தகம் வழங்கப்பட்டதுடன் “மகுடி” மாத இதழும் இலவசமாக விநியோகிக்கப்பட்டது எல்லோருக்கும் பரவசம் .

இதிரிஸ் தன் அரு மைத் துணைவி சித்தி ஆயிஷாவுடன் இணைந்து ஒவ்வொரு நிகழ்ச்சிக ளையும் உற்சாகத்துடன் நடத்தி வருகிறார்.

இதிரிஸை சாதார ணமாக நினைப்பவர்களுக்கு நடந்து முடிந்த கலைஞர் கெளரவிப்புடனாக அண்ணா நிகழ்வு கண்ணைத் திறந்து பார்க்க வைத்திருக்கும்.

“உன்னால் முடியும் தம்பி” என்று அண்ணாவின் வாழ்த்து எதிரொலி இதிரிஸின் எதிர்கால நிகழ்வுகளுக்கு வளம்சேர்க்கும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.