புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 
உன்ைனக் . . . .

உன்ைனக் . . . .

(சென்றவார தொடர்)
தூரிகை வரைந்த ஓவியம்

கை மாறப் போகிறது காவியம்!
கார் இப்போது,
கொட்டியாகலையைநெருங்கிக் கொண்டிருந்தது.
அப்போது,
“பெட்ரோல் இல்லை. இன்னும் கொஞ்ச தூரம் தான் போகலாம்”என்றான் மாஸ்டர்.
“முட்டாள் முட்டாள் ஏன் புல் டேங்க் அடிக்காமல் வந்தாய்?”காட்டுக் கத்தல் கத்தினான் ஸ்டீபன்;ராஜ் .
“நீங்கமாணிக்கத்தின் காட்டுபங்களாவுக்கு போவீங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?”
“கவலைப்படத் தேவையில்லை. கொஞ்ச தூரம் போனதும் பெற்றோல் n'ட் ஒன்று இருக்கிறது” இடையில் குறுக்கிட்டான் குட்டி ஹிட்லர்.
அவன் சொன்னது உண்மைதான்.
அந்ததிருப்பத்தில் வாகனம் திரும்பியதும்,
எதிரிலேயே பெற்றோல் n'ட் ஒன்று
இருப்பதுதெரிந்தது.
பெற்றோல் அடிப்பதற்கு வசதியாக காரை நிறுத்தினான் மாஸ்டர்.
தூங்கி விழுந்தபடியே அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன்,
கார் வந்து நின்றதும்,
கண்களைக் சிக்கியபடியே காரை
நோக்கி வந்தான்.
அடுத்து,
அவன் காருக்குபெற்றோலை நிரப்பினான்.
உள்ளே இருக்கும் மாதுரி,
அந்த இளைஞனின் விழிகளில் விழந்துவிடாதபடி மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஸ்டீபன்ராஜ் .
அவர்கள் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை!.
தூக்க கலக்கத்தில் இருந்த அந்த இளைஞன்,
சும்மா சரி காருக்குள் எட்டிப் பார்க்கவே இல்லை!
சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான் குட்டி ஹிட்லர்.
அப்போது,
அந்தத் திருப்பத்தில் இருந்து கார் ஒன்று விரைந்து வருவதை,
அதன் விளக்கொளி பறைசாற்றியது.
விரைந்து வந்த அந்த சிவப்பு நிற கார் ‘கரீனா’ கார்,
டட்சன் காருக்கு பின்னால் நின்றது.
அந் நேரத்தில்,
அந்தக் காரின் வருகை,
இந்த மூன்று பேரையும்,
அச்சத்தின் ஆட்சிக்கு அழைத்துச் சென்றது.
குட்டி ஹிட்லரின்
வலது கை,
தானாகவே அவனது இடுப் பில் இருந்த ரிவால்வரை நோக்கிச் சென்றது.
வந்து நின்ற அந்த காருக்குள் இருவர் இருந்தார்கள்.
டிரைவர் ஆசனத்திற்கு பக்கத்து ஆசனத்தில் இருந்தவன் கீழே இறங்கினான்.
அவன்,
நல்ல உயரம்,
உயரத்திற்கேற்ற பருமன்.
பார்வைக்கு,
மல்யுத்த வீரனைப் போல் இருந்தான்.
கீழே இறங்கி அவன்,
டட்சன் காரை நோக்கி தனது பார்வையை வீசினான்.
குட்டி ஹிட்லரின் ‘உடல் மொழி’யைப் பார்த்து விட்டு,
மெல்ல நடந்து,
காரின் அருகில் வந்தான்.
ரிவால்வரை வெளியே எடுப்பதற்கு தயாரானான் குட்டி ஹிட்லர்.
அதே நேரம்,
அவனது கையை அழுத்திப் பிடித்து,
விழிகளால் ஏதோ ஜhடை காட்டினான்.
அப்போது,
என்ன பயந்துட்டீங்களா?” குட்டி ஹிட்லரின் அருகில் வந்த அந்த இளைஞன்,
கரகரத்த குரலில் கேட்டான்.
அந்தப் பகுதி கொஞ்சம் இருளில் மூழ்கியிருந்ததால்,
ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை.
இல்லை இல்லை நாங்கள் பயப்பட வில்லை…”ஸ்டீபன்ராஜ் தான் பதில் சொன்னான்.
அவனது குரலைக் கேட்டதும்,
அந்த உயரமான மனிதன் படாரென்று திரும்பி,
ஸ்டீபன்ராiஜப் பார்த்தான்.
பிறகு,
“ஸ்டீபன்ராஜpன் குரல் போல் இருக்கிறதே” என்றான்.
பிறகு,
ஓ. நான் நினைத்தேன் பெரிய சண்டியர்களாக இருக்க வேண்டுமென்று” என்று சொல்லிவிட்டு,
வாய் விட்டுச் சிரித்தான்.
அந்த சிரிப்பைக் கேட்டு விட்டு,
காருக்குள் இருந்த மூவரும்,
கதிகலங்கிப் போனார்கள்.
அதே நேரம்,
கரீனா’ காருக்குள் விளக்கு எரிந்தது.
காருக்குள் அமர்ந்திருந்தவன்,
ரிவால்வர் ரிஸ்வின்.
அவன் கையில் இருந்த ரிவால்வர்,
அந்தக் காருக்குள் இருந்தவர்களையே குறிபார்த்துக் கொண்டிருந்தது.
“யாரது? அர்ஜ_னாவா?” வறண்டு போன இதழ்களை ஈரமாக்கிக் கொண்டே கேட்டான் ஸ்டீபன்ராஜ் .
“ஆமாம்! அங்கே காருக்குள் ரிவால்வருடன் இருப்பபவன் ரிவால்வர் ரிஸ்வான். முடிக்க முடியாத எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டாம்”
“இல்லை… இல்லை இப்போது நாங்கள் எவ்விதமான பிரச்சினைக்கும் வரவில்லை”
படபடப்புடன் சொன்னான் ஸ்டீபன்.
வந்திருப்பவர்கள் யார் என்பது அவனுக்குத் தெரிந்து விட்டது.
“இரத்தக் காட்டேறி” கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
மிகவும் பயங்கரமான ஒரு கொள்ளைக் கூட்டம் அது.
பஞ்ச மா பாதகங்களையும்
செய்வதற்கு அஞ்சாதவர்கள்.
அதன் தலைவியாக இருப்பவள்.
துர்கா!
பெண் உருவில் இருக்கும் பேய் என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த கொள்ளைக் கூட்டத்தவர்களை இவ்வளவு விரைவில் சந்திப்போம் என்று ஸ்டீபன்ராஜ் எதிர்ப்பார்க்கவே இல்லை.
காரினுள் பார்த்தபடியே,
சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான்.
அர்ஜ_ன்.
உள்ளே இருக்கும் மாதுரியை அவன் பார்த்து விடாதபடி,
மறைத்துக் கொள்ள முயன்றான் ஸ்டீபன்ராஜ் .
ஆனால்,
அந்த முயற்சியில் அவன் தோல்வி அடைந்தான்.
அர்ஜ_னா அவளைப் பார்த்து விட்டான்.
“என்ன சரக்கா?” தீக்குச்சியை வீசியபடியே கேட்டான்.
இதோ பார் அர்ஜ_ன் நாங்கள் அவசரமாக போக வேண்டியிருக்கிறது…” என்று சொன்ன ஸ்டீபன்ராஜ் ,
மாஸ்டரின் பக்கம் திரும்பி,
“ம்... போ...?” என்றான்
இடது கையை கதவின் மீது வைத்தபடியே,
“குட்டி யார் ஸ்டீபன்ராஜ் ?” அமைதியாகக் கேட்டான் அர்ஜ_னா.

(அடுத்தவாரம் சந்திப்போம்)
 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.