புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

சவ+தி மன்னரின் மரணமும் பின் சவுத் குடும்பத்தின் சவாலான எதிர்காலமும்

சவ+தி மன்னரின் மரணமும் பின் சவுத் குடும்பத்தின் சவாலான எதிர்காலமும்

றிஸ்லிம்களின் முதல் இரு புனிதத் தலங்க ளும் இருக்கும் சவ+தி அரேபியாவில் கடந்த வெள்ளிக்கி ழமை வழமையை விடவும் அமை தியான தினமாக இருந்தது. அன்று காலை சவ+தி அரச தொலைக் காட்சி நிதானமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

90 வயதாகும் மன் னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மரணமடைந்து விட்டார் என்பதே அந்த அறிவிப்பு. இதனையடுத்து சவ+தி தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு புனித அல்குர்ஆன் ஓதும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

மன்னர் இறந்தார் என்பதற்காக பெரிதாக ஆரவாரம் எதுவும் இரு க்கவில்லை. தேசியக் கொடி வழ மைபோல முழு கம்பத்தில்தான் பற ந்தது.

மரணமடைந்த மன்னரின் உடல் இஸ்லாமிய சடங்குகளுக்கு அமைய கழுவப்பட்டது. அவரது சொத்துக ளின் நிகர மதிப்பு 20 பில்லியன் டொல ர்கள் என கணக்கிடப்பட்டிருக்கிறது.

ஆனால் மரணித்த மன்னரின் உடல் வெறுமனே இரண்டு வெள்ளை துணி த்துண்டுகளால் சுற்றப்பட்டது. பொது ப்படையாக சொல்வதென்றால் இஸ் லாமிய சம்பிரதாயத்திற்கு முரணாக மன்னர் என்பதற்காக இறுதிக் கிரி யைகளில் விசேடமாக எதுவும் சேர் க்கப்படவில்லை.

வெள்ளிக்கிழமை மாலை மன்ன ரின் உடல் (ஜனாஸா) தலைநகர் ரியாத் பெரிய பள்ளிவாசலுக்கு கொண் டுவரப்பட்டு, இமாம் துர்கி பின் அப் துல்லாஹ் ஜனாஸா தொழுகையை நடத்தினார். இந்த சடங்குகள் முடிய மன்னரின் ஜனாஸா அல் அவுத் மையவாடிக்கு கொண்டுசெல்லப்ப ட்டு எந்த அடையாளமும் இடப்படா மல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கட்டுப்பாடான இஸ்லாமிய சம்பிர தாயங்களை பேணும் சவ+தி அரேபி யாவில் கடந்த ஒரு தசாப்தமாக முழு அதிகாரம் கொண்ட ஆட்சியா ளராக அப்துல்லாஹ் செயற்பட்டார். இஸ்லாமிய உலகிற்கும் மேற்குல கிற்கும் இடையில் கத்திமுனையில் நடப்பது போலவே சவ+தியின் ஆட்சி வெளியுலகுக்கு தெரியும்.

தமக்கே உரிய கட்டுப்பாடான இஸ்லாமிய வரையறை கொண்ட சவ+தி ஆட்சி முறையில் ஒரு சிறு அள வான சீர்திருத்தவாதி யாக அப்துல்லாஹ்வை அடையாளப்படுத்த முடியும்.

அப்துல்லாஹ் பிறந்த திகதி குறித்து உறுதியாக ஒருவருக்கும் தெரியாது. ஆனால் அவர் 1924ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ரியாதில் பிற ந்திருக்கிறார்.

அப்துல் அஸீஸ் அல்-சவுத் 1902 ஆம் ஆண்டு தனது பூர்வீக நில மான ரியாதை ஆக்கிரமிக்கிறார். மூன்று தசாப்த ஆக்கிரமிப்புகளு க்கு பின்னர் அவர் சுமார் மத்திய அரேபியா முழுவதையும் தனது ஆட் சிக்கு கீழ் கொண்டுவருகிறார். 1922ம் ஆண்டு நஜpத் பகுதியை ஆக்கிரமிக்கும் பின்; சவுத் பின்னர் 1925ம் ஆண்டு ஹிஜhஸை கைப்ப ற்றுகிறார்.

இந்த அனைத்து நிலங் களையும் ஒன்று சேர்த்து 1932ம் ஆண்டு சவ+தி அரேபிய இராச்சியம் என்ற புதிய நாட்டையே அறிவிக்கி றார். தனது குடும்ப பெயரைத் தான் அவர் நாட்டுக்கும் சூட்டுகி றார். குடும்ப பெயர் கொண்ட நாடு உலகில் எங்கும் இல்லை என்பது வேறு கதை. அத்தோடு தனது குடும்பத்தைத்தான் அந்த நாட்டை ஆட்சி செய்யவும் அனுமதிக்கிறார்.

பின் சவுத்தின் குடும்பக் கிளை பற்றி பெரிதாகச் சொல்ல உறுதி யான வழிகள் இல்லை. ஆனால் அவருக்கு 45 மகன்கள் என்று கூற ப்பட்டிருக்கிறது. மகள்கள் எத் தனை என்று கேட்டால், ஏகப்பட்டது என்று வைத்துக் கொள்ளலாம். இந்த 45 மகன்களில் 13 ஆவது புத ல்வன்தான் அப்துல்லாஹ்.

அப்துல்லாஹ்வின் தாயின் பெயர் பஹ்தா என்று சுருக்கமாக செல்ல லாம். இவர் அல்-சவுத்தின் எட்டா வது மனைவி. சவுத்திற்கு மொத் தம் 22 மனைவியர் என்று கூறப்படு கிறது.

அரேபிய நாடோடி பரம்பரை யைச் செர்ந்தவர் என்பதால் அப்து ல்லாஹ் தனது ஆரம்ப காலங்களை பாலைவனத்தில்தான் கழித்திருக்கி றார். தனது தந்தை வழியான சம்பி ரதாயங்கள், மத சிந்தனைகள் மூல ம்தான் அப்துல்லாஹ் வளர்ந்தார்.

அப்துல்லாஹ்வின் அரசியல் வாழ் க்கை 1961ம் ஆண்டு புனித நகரான மக்காவின் ஆளுநராக நியமிக்கப்ப ட்டது தொடக்கம் ஆரம்பமாகிறது. இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சவ+தி தேசிய படையின் கட்டளை தளபதியாக நியக்கப்பட்டார். இந்த பதவியில் அவர் 2010ம் ஆண்டு வரை இருந்தார்.

1975ம் ஆண்டு பைஸால் மன்னர் படுகொலை செய்யப்பட்டு காலித் மன்னராக முடிசூட்டிக் கொண்டபோது அப்துல்லாஹ் துணை பிரதமராக பதவி உயர்ந்தார்.

1970களில் மத்திய கிழக்கு மீதான அமெரிக்க கொள்கைகளை வெளி ப்படையாக விமர்சித்த அப்துல்லாஹ் அரபு ஒற்றுமை குறித்து வலியுறுத் தியதால் பிராந்தியத்தில் அவருக்கு தனி மதிப்பு ஏற்பட்டது.

1982ம் ஆண்டு காலித் மன்னரின் மரணத்திற்கு பின்னர் மன்னரா முடி சூட்டிக் கொண்ட பஹத், தனது முடி க்குரிய இளவரசராக அப்துல்லா ஹ்வை நியமித்தார். இவரது நியம னம் குறித்து பஹத் மன்னரின் நேரடி வழி சகோதரர்களிடம் எதிர்ப்பு கிள ம்பியபோதும் அப்துல்லாஹ் அதனை வெற்றிகரமாக சமாளித்தார்.

1995ம் ஆண்டு பஹத் மன்னர் பக்கவாதத்தால் பதிக்கப்பட்டதை அடுத்து நாட்டின் அதிகாரம் முழுவ தும் அப்துல்லாஹ்வின் கைக்கு வந் தது. அப்துல்லாஹ் சவ+தியின் அன் றாட அதிகாரங்களை தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்ததை அடு த்து சவ+தி சற்று அதிகமாகவே அமெ ரிக்காவை நெருங்கியது பிராந்திய த்தில் சலசலப்பையும் ஏற்படுத்தி யது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனா திபதி ஜோர்ஜ் புஷ் (மூத்தவர்) மன் னர் அப்துல்லாஹ்வை தனது ~~அன்பு ள்ள நண்பர்" என்று வர்ணித்து, சதாம் ஹ{ஸைன்; 1990ல் குவைட் டின் மீது படையெடுத்தற்கு எதிர் ப்பு திரட்ட அவர் ஆற்றிய பங்கை தான் மறக்க இயலாது என்று கூறியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

2002ம் அண்டு அரபு லீக்கில் அப் துல்லாஹ் கொண்டுவந்த பிரேரணை யில் இஸ்ரேல்-அரபு மோதலை முடி வுக்கு கொண்டுவர தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஒரு தசாப்த காலம் மறைமுக ஆட்சியாளராக இருந்த அப்துல்லாஹ் 2005ம் ஆண்டு ஓக ஸ்ட் மாதம் பக்கவாதத்தால் பாதிக் கப்பட்ட பஹத் மன்னர் மரணமடை ந்ததை அடுத்து முறைப்படி மன்ன ராக முடிசூட்டிக் கொண்டார்.

அல் கொய்தா அச்சுறுத்தல், 2011 அரபு வசந்தம், ஈரானின் எதிர் ப்புகள் என்று பின் சவுத் குடும்ப த்தின் ஆட்சி பறிபோகும் சந்தர்ப்ப ங்கள் அதிகமாக இருந்தபோதும் அவை அனைத்தையும் சமாளித்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட அப்துல்லாஹ் மன்னர், நாட்டின் கடு மையான கட்டுப்பாடுகளையும் சற்று தளர்த்தினார். குறிப்பாக தனது அரசை ஓரளவுக்கேனும் விமர்சிப்பதற்கு ஊடக சுதந்திரம் ஒன்றை அப்துல் லாஹ் வழங்கினார். வீட்டுக்குள் அடைக்கப்பட்ட பெண்களை வேலை க்கு செல்லவும் அப்துல்லாஹ் ஊக் குவித்தார்.

சவ+தி அரேபியாவில் பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து பேட்டி ஒன்றில் அப்துல்லாஹ் கருத்து தெரி வித்தபோது, ~~பெண்களின் உரிமை பற்றி நான் உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால் எனது தாய் ஒரு பெண், எனது சகோதரி ஒரு பெண், மகள் ஒரு பெண், எனது மனைவி ஒரு பெண்" என்று பதிலளித்திரு ந்தார்.

2011ம் ஆண்டு பெண்களுக்கு வாக் களிக்கவும், மாநகரசபையில் போட்டியிடவும் சவ+தியில் உரிமை வழங்கப்பட்டது. பல தசாப்தங்களில் சவ+தியில் முன் னெடுக்கப்பட்ட மிகப் பெரிய சீர்திருத்தமாக இது பார்க்கப் பட்டது. அதேபோன்று அளவு க்கு அதிகமான அதிகாரங் களை வைத்திருந்த சவ+தி மதப் பொலிஸாரை கட்டுப்படு த்தியதிலும் மன்னர் அப்துல்லாஹ் வுக்கு பங்குண்டு.

மன்னரின் மறைவை அடுத்து அவரது ஒன்றுவிட்ட சகோதரரான 79 வயது சல்மான் புதிய மன்ன ராக நியமிக்கப்பட்டிருக்கிறார். புதிய மன்னராக பொறுப்பேற்றதும் தனது முன்னோர்களின் கொள்கையை தொட ர்ந்து கடைப்பிடிப்பதாக அவர் வாக் குறுதி அளித்திருக்கிறார்.

~~சவ+தி நிறுவப்பட்டது தொடக் கம் முன்னெடுக்கப்படும் சரியான கொள்கையை நாம் தொடர்ந்து கடைப்பிடிப்போம்" என்று மன்னரின் மரணத்திற்கு பின்னர் மூடிசூடிக் கொள்ளும் சல்மான் அரச தொலை க்காட்சியில் தோன்றி அறிவித்தார்.

உலகில் அதிக எண்ணெய் ஏற்று மதி செய்யும் நாடு, பிராந்திய விவ காரங்களில் அதிக தாக்கம் செலுத் தும் நாடு, இஸ்லாத்தின் இரு புனி தத் தலங்களின் பாதுகாப்பை வைத் திருக்கும் நாடு, சர்வதேச அளவில் சுன்னி முஸ்லிம்களுக்கு தலைமை ஏற்பதாக குறிப்பிட்டுக் கொள்ளும் நாடு என்று பல கோணங்களில் முக்கியமான சவ+தி அராபியாவில் அதிகார மாற்றம் ஏற்படுவதென் றால் அது உலக அளவில் பாதி ப்பை செலுத்தும்.

என்றாலும் அதி காரத்தில் புதிய தலைகள் வருவ தென்றால் அது குறித்து பின் சவ+த் அரச குடும்பத்தின் சிரேஷ்ட இளவர சர்களின் திருப்தியை பெற்றிருக்க வேண்டும். எனினும் முடிக்குரிய இள வரசராக சல்மான் ஏற்கனவே நிய மிக்கப்பட்டிருந்ததால் மன்னருக்கு பின் அவர் மன்னராவது இயல்பான தாக இருந்தது. சல்மான் மன்னரா னதை அடுத்த முடிக்குரிய இளவர சராக முக்ரின் நியமிக்கப்பட்டிருக்கி றார்.

புதிய மன்னர் சல்மான் மற்றும் முடிக்குரிய இளவரசர் முக்ரின் ஆகி யோர் கூட பின் சவுத் புதல்வர்க ளாவர். பின்; சவுத்திற்கு பின்னர் 1953 தொடக்கம் இதுவரை ஆட்சிக்கு வந்த அறு மன்னர்களும் அவரின் புதல்வர்கள்தான். ஆனால் தாய் மாத்திரம் வேறாக இருப்பா ர்கள்.

இதில் முடிக்குரிய இளவரசராக நியமிக்கப்பட்டிருக்கும் முக்ரின் தனது 60 வயதுகளின் கடைசியில் இருக் கிறார். அவர் பின்; சவுத்தின் இளைய மகனாவார். ஆனால் முக்ரினின் மூத்த சகோதரர்களான இளவரசர் அஹமது உட்பட சிலர் உயிரோடு தான் இருக்கிறார்கள். இளவரசர் அஹமது மற்றும் மன்னர் சல்மான் ஆகியோர் அல் சவ+த்தின் விருப்ப த்திற்குரிய மனைவியான ஹஸ்ஸா அல் சுதைரியின் உயிருடன் எஞ்சி யிருக்கும் புதல்வர்களாவர். பின்; சவுத் ஆண் வாரிசுகளில் இந்த சுதைரியில் புதல்வர்கள் வலுவான வர்களாக பார்க்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் வயதில் மூத்த இளவரசர் அஹமதுவை கடந்து முக்ரின் முடிக்குரிய இளவரசராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆட் சிக்கு வரும் வாய்ப்பு கொண்ட பின் சவ+த் புதல்வர்களின் நீண்ட வரிசை முடிவுக்கு வருகிறது. ஏனென்றால் முக்ரின் தான் அந்த வரிசையில் கடைசியாக இருந்தவர்.

எதிர்பாராத இந்த முன்னெடுப்பு மூலம் முக்ரினுக்கு அடுத்த முடிக்கு ரிய இளவரசராக பின் சவுத் வழி யில் அடுத்த தலைமுறைக்கே செல் லவிருக்கிறது. இது தலைமுறை இடைவெளியை தவிர்க்க மேற்கொ ள்ளப்பட்ட முயற்சியாகவே பார்க்க வேண்டி இருக்கிறது.

முடிக்குரிய இளவரசர்களாக இரு ந்த சுல்தான் மற்றும் நயாப் ஆகி யோர் மன்னராகும் முன்னரே அண் மைக் காலத்திற்குள் மரணித்து விட் டனர். இந்த நிலையில் முக்ரினை முடிக்குரிய இளவரசராக்கியதில் சிக் கல்கள் இல்லாமல் இல்லை. அதா வது பின் சவ+த்தின் புதல்வர்கள் பேரக் குழந்தைகள் சேர்ந்த நம்பிக் கையாளர் கவுன்ஸில் மூலம் தான் புதிய மன்னர், முடிக்குரிய இளவர சர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மரணித்த மன்னர் அப்துல்லாஹ் தலைமையில் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த கவுன்ஸில் கூடியபோதே முக்ரின் அப்போது பிரதி முடிக்கு ரிய இளவரசராக நியமிக்கப்பட்டார். எனவே, சல்மான் மன்னரான பின் னர் முக்ரின் இயற்கையாகவே முடி க்குரிய இளவரசராக மாறியிருக்கி றார்.

ஆனால், இந்த தீர்மானத்திற்கு பின் சவுத் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் ஆதரவாக வாக்களிக் கவில்லை. எனவே, தற்போதைய சூழலில் இந்த முடிவுக்கு எதிராக சலசலப்புகள் ஏற்படவும் வாய்ப்பு கள் இருக்கின்றன.

பின் சவுத் பேரக் குழந்தைகளி டம் அடுத்த கட்டமாக ஆட்சி மாறு ம்போதும் தளம்பல்கள் ஏற்பட வாய் ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக அதி காரத்தில் இருக்கும் மன்னர்கள் தமது புதல்வர்களை முன்னுக்கு கொண்டுவரும் வகையில் காயை நகர்த்தியிருக்கிறார்கள். எனவே, இந்த அதிகார சங்கிலியை இழக் கும் இளவரசர்கள் தமது புதல்வர் களின் எதிர்காலம் பற்றியும் கவ லைப்பட நேர்கிறது.

மன்னர் அப்துல்லாஹ் ஆட்சியில் இருந்தபோது 60களில் இருக்கும் அவரது மூத்த மகன் இளவரசர் முதைப்பை கடந்த ஆண்டு பலம்மி க்க தேசிய படையின் கட்டளை தள பதியாக நியமித்தார். அமைச்சரவை அந்தஸ்த்து அவருக்கு வழங்கப்பட் டது. எனவே, சவ+தி மன்னர் குடும்ப த்திற்குள் வெளியே தெரியாவிட்டா லும் எத்தனையோ கயிறிழுப்புகள் இருப்பது மட்டும் தெளிவாகிறது.

பல தசாப்தங்களுக்கு முன்னர் பின் சவுத், சவ+தி அரேபியா என்ற நாட்டை உருவாக்கியபோது இருந்த உலகம் அல்ல இப்போது இருப் பது. அடிப்படையில் மன்னர் ஆட்சி முறை எப்போதோ காலாவதியாகி விட்டது. இதுமட்டுல்லாது சவ+தி அரே பியா உள்நாட்டுக்குள்ளும் பல பிர ச்சினைகளுக்கு முகம்கொடுத்து வரு கிறது. அங்கு இளைஞர்களின் வேலை யின்மை அதிகரித்திருக்கிறது.

ஈராக் மற்றும் சிரியாவில் ஜpஹாத் போரா ட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற பலரும் மீண்டும் சவ+திக்கு திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத்தால் சவுத் அரச பரம்பரையின் ஒடுக்கு முறைகள் குறித்து உள்நாட்டிலும் விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றன. 'pயாக்களின் ஆதிக்கம் கொண்ட கிழக்கு பகுதியில் பதற்றம் அண் மைக்காலத்தில் தீவிரம் கண்டிருக் கிறது.

உள்நாட்டில் இப்படி வெடிக்கும் தறுவாயில் ஏகப்பட்ட பிரச்சினை கள் இருக்கும்போது அயலில் இரு க்கும் நாடுகளும் அச்சுறுத்தலா கவே காணப்படுகின்றன. வடக்கு எல்லையில் இருக்கும் ஈராக் நாட் டில் இஸ்லாமிய தேசம் குழுவின் பிரச்சினை தலைக்குமேல் போயிரு க்கிறது. அதேபோன்று தென்கிழக் கில் இருக்கும் வறுமைப்பட்ட நாடான யெமனில் 'pயாக் கிளர்ச்சியாளர்க ளான ஹவ்திக்கள் ஆதிக்கம் செலு த்துவது பெரும் அச்சுறுத்தலாக இரு க்கிறது.

இந்த பதற்றமான சூழலில் தனது குடும்பத்திற்குள் குழப்பம் இருப்ப தாக பின் சவுத் மன்னர் குடும்பம் வெளியுலகுக்கு காட்டிக் கொண் டால் அது எதிரிகளுக் சாதகமாக அமைந்துவிடும் என்பதை மூத்த இளவரசர்கள் தெரிந்தே வைத்திரு க்கிறார்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.