புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 

தேசிய வர்த்தக சிறப்புகள் விருதுகளில் வெற்றியாளராக 99X Technology தெரிவு

தேசிய வர்த்தக சிறப்புகள் விருதுகளில் வெற்றியாளராக 99X Technology தெரிவு

99X Technology ஐப் பொறுத ;தமட்டில் 2014 என்பது மிகவும் சிறப்புகள் பொருந்திய ஆண்டாக அமைந்திருந்தது. பல்வேறு செயற் பாடுகளுக்காக இந்த நிறுவனம் கௌரவிக்கப்பட்டிருந்ததுடன், ஆண்டின் இறுதியில் இடம்பெற்ற தேசிய வர்த்தகச் சிறப்புகள் விருது கள் வழங்கலின் போது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் வெற்றியா ளராக தெரிவு செய்யப்பட்டிருந்தது. தகவல் தொழில்நுட்ப துறையில் வர்த்தக சிறப்புகளை பின்பற்றுகின் றமைக்காக வழங்கப்பட்டிருந்த கௌரவிப்பாக இது அமைந்திரு ந்தமை குறிப்பிடத்தக்கது.

கூட்டாண்மை மேலாண்மை, கொள்ளளவு கட்டியெழுப்பல், வினைத்திறன் நிர்வாகம், சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தை சென்றடைய, கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு மற்றும் சூழல் நிலையாண்மை மற்றும் வியாபார மற்றும் நிதி பெறுபேறுகள் போன்ற வற்றில் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்தமைக்காக 99X Technology க்கு இந்த பெருமை க்குரிய விருது வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதை பெற்றுக் கொண் டமை தொடர்பில் 99X Technology இன் இணை தாபகரும் பிரதம நிறை வேற்று அதிகாரியுமான மனோசேகரம் கருத்து தெரிவிக ;கையில், "கம்பனியின் முழு செயற்பாடுகளையும் கரு த்தில் கொண்டு கௌர விப்பை வழங்கும் ஒரு விருதாக இது அமைந்து ள்ளது. நாட்டின் சிறந்த மதிப்பை பெற்ற நிறுவ னங்களில் ஒன்றாக நாம் திகழ்வதையிட்டு மிகவும் பெருமையடை கிறோம். எதிர்வரும் காலங்களில் மேலும் உயர்வான நிலையை எய்துவதற்கு நாம் திட்டமிட்டுள் ளோம்" என்றார்.

தேசிய வர்த்தக சிறப்புகள் விருதுகள் வழங்கலின் போது, கடந்த ஆண்டுகளிலும் 99ஓ வுநஉhn ழடழபல விருதுகளை தனதாக்கி யிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2012 ஆம் ஆண்டில் இடம்பெற்ற விருதுகள் வழங்கல் நிகழ்வின் போது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் பிரி வில் உயர் விருதை தனதாக்கி யிருந்தது. 2014 இல் இந்த விருதை வென்றமையானது, கம்பனி தனது நிதி செயற் பாடுகள் மற்றும் வியாபார செயற்பாடுகள் ஆகியவற்றை முன்னேற்றுவதற் காக தொடர்ச்சி யாக மேற்கொண்டு வரும் செயற் பாடுகளுக்கான கௌரவிப்பாக அமைந்துள்ளது.

இலங்கை தேசிய வர்த்தக சம் மேளனத்தின் மூலமாக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வாக தேசிய வர்த்தக சிறப்புகள் விருது கள் அமைந்துள்ளன. வியாபார தாபனங்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங் கப்படுகின்றன.

வர்த்தக செயற்பாடுகளில் சிற ப்பை பதிவு செய்திருந்ததுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சி யில் பங்களிப்பை வழங்கிய நிறு வனங்களை கௌரவிப்பது இந்த விருதின் நோக்கமாகும்.

இதன் மூலம், இலங் கையை சிறப்பான முறையில் வியா பாரங் களை கையாளும் நிறு வனங்களை கொண்ட நாடாக மாற்றியமைத்து, அதன் மூலம் நாட்டி னுள் பெருமளவு வெளி நாட்டு முதலீடுகளையும் இணை தாபிப்புகளையும் கவர் வது தேசிய வர்த் தக சம் மேளனத்தின் நோக்கமாக அமைந்துள் ளது.

இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் மூலமாக வருடா ந்தம் ஏற்பாடு செய்யப்படும் நிகழ் வாக தேசிய வர்த்தக சிறப்புகள் விருதுகள் அமைந்துள்ளன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.