புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 

*ஆளுநர் நியமனம், பிரதம செயலாளர் இடமாற்றம், 13 ஆவது திருத்தத்திற்கு சாதக சமிக்ஞை, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், மலையக வீடமைப்பு, மலையக பல்கலைக்கழகம்:

*நம்பிக்கையளிக்கும் ஆரம்பம்

*அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை சுமுகமாக முன்னெடுப்பதற்கான அத்திபாரமாக கருதி தமிழ் அரசியல் தலைவர்கள் நம்பிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது தலைமையிலான புதிய அரசாங்கம் எடுத்துவரும் மக்கள் நலன் சார்ந்ததும், நாட்டின் சிறப்பான எதிர்காலத்திற்குமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்துத் தமிழ் அரசியல் வட்டாரங்களில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக வடமாகாணத்திற்கான புதிய ஆளுநர் நியமனம், அம்மாகாணத்தின் பிரதம செயலாளருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் மற்றும் சிறைகளில் வாடும் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் விவகாரம் தொடர்பாக புதிய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைள் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களிடையேயும், தமிழ் தலைவர்களிடையேயும் நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.

விவரம்

 


லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரிய பீடப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் சமன் வகஆராச்சி நேற்றுக்காலை நிறுவனத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்ற போது எடுத்த படம். இந்த நிகழ்வில் ஊடக அமைப்புக்களின் முக்கியஸ்தர்களான என். எம். அமீன், றோகண சிறிவர்தன மற்றும் பலர் பங்கேற்றனர்.

 

 


புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சிலர் கடந்த வாரம் தமது கடமைகளைப் பொறுப்பேற்ற போது எடுத்த படங்கள். அமைச்சர் பி.திகாம்பரம், இராஜாங்க அமைச்சர்கள் கே.வேலாயுதம், ஹலீம், ஹஸன் அலி, வீ. இராதாகிருஷ்ணன் மற்றும் பிரதி அமைச்சர்களான விஜயகலா மகேஸ்வரன், தெளபீக், அமீர் அலி ஆகியோர் தமது கடமைகளைப்
பொறுப்பேற்றுக் கொண்டனர்.

 



 

தமிழருக்கு தீர்வொன்றை காணும் நிலைப்பாட்டில் புதிய அரசு உறுதி

வடக்குக்கு கூடிய அதிகாரங்களை வழங்குவது குறித்தும் ஆராய்வு

இலங்கையின் சிறுபான்மை சமூகமான தமிழ் மக்களுக்காக அரசியல் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்ற கடும் நிலைப்பாட்டில் புதிய அரசாங்கம் இருக்கின்றது. வடக்குக்கு கூடிய அதிகாரங்களை வழங்குவது குறித்தும் தமது புதிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.

 விவரம்»

தமிழ் - முஸ்லிம் தரப்பு இணைந்தே கிழக்கில் ஆட்சி அமைக்க வேண்டும்

இனியும் பிரிந்து நிற்பது
ஆரோக்கியமானதல்ல - சுமந்திரன்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முஸ்லிம்களோ, முஸ்லிம்களைத் தமிழர்களோ விட்டுவிட்டு நிர்வாகத்தை அமைப்பது நியாயமற்ற செயல் என்பதே எமது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம். இனியும் பிரிந்து நின்று ஒருவரை ஒருவர் புறக்கணித்துவிட்டு ஆட்சி அமைப்பது ஆரோக்கியமானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் . . .  .

 விவரம்»

ஊழல் மோசடிக்காரர்
தப்பிக்கவே முடியாது

கே.பிக்கு எதிரான விசாரணைகளும் ஆரம்பம்

ஊழல், மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எவரேனும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருப்பார்களாயின், இனியும் செல்வார்களாயின் அவர்களைக் கைது செய்வது ஒன்றும் கடினமான விடயமல்ல. சர்வதேச பொலிஸாருக்கு அறிவித்த பின்னர், அவர்கள், அத்தகைய மோசடிக்காரர்களை . . . . .

விவரம்»

தரம் 1இல் பிள்ளைகளைச் சேர்க்கும் போது

அநீதியான முறையில் பணம் வசூலிப்பா?

அழையுங்கள் 1988 என்ற இலக்கத்திற்கு

பெற்றார்களிடம் அநீதியான முறையில் பணம் வசூலிக்கும் அதிபர்கள் குறித்து மாகாண சபைகளிடமோ அல்லது கல்வி அமைச்சின் 1988 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தகவல் வழங்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்க்கும் போது பல்வேறு காரணங்களைக் கூறிப் பணம் . . .

விவரம்»

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.