புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 
மலேசிய மாநாட்டில் மகேஸ்வரன் தம்பதியர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பு

மலேசிய மாநாட்டில் மகேஸ்வரன் தம்பதியர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பு

மலேசியா, கோலாலம்பூரில் மலாயா பல்கலைக்கழகத்தில் ஜனவரி 29ம் திகதி முதல் பெப்ரவரி 2ம் திகதி வரை நடைபெறவுள்ள ஒன்பதாவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் பேராதனைப் பல்கலைக்கழக பிரதி நூலகரும் ஊடகவியலாளருமான இராசையா மகேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ளார்.

‘உலகமயமாதல் சூழலில் இலங்கையில் புலம்பெயர்ந்த இந்தியத் தமிழர்களது தனித்துவமான கலாசார விழுமியங்களையும் அண்மைக்கால மாற்றங்களையும் ஆவணப்படுத்தல்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரையினை சமர்ப்பிக்கவுள்ளார்.

மற்றொரு அமர்வில் வைத்திய கலாநிதி திருமதி கோமதி மகேஸ்வரன், இரா. மகேஸ்வரன் இணைந்து சமர்ப்பிக்கவுள்ள ஆய்வுக்கட்டுரையில் ‘இலங்கையில் பெண் தெய்வ வழிபாடும் தமிழர் பண்பாட்டில் அதன் செல்நெறியும்’ என்ற ஆய்வினை சமர்ப்பிக்கவுள்ளனர்.

இரா. மகேஸ்வரன் இந்தியா, தமிழ் நாடு, கோவையில் நடைபெற்ற தமிழ் செம்மொழி மாநாடு, தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு, மலேசியாவில் நடைபெற்ற முருகபக்தி மாநாடு,

லண்டன் உலக தமிழியல் ஆய்வு நடுவம் நடாத்திய லண்டன் தமிழாய்வியல் மாநாடு, பல்கலைக்கழக நூலாக சம்மேளன மாநாடு, சர்வதேச ஹொக்கி சம்மேளன மாநாடு ஆகிய சர்வதேச ஆய்வு மாநாடுகளில் ஆய்வு கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

மொரிசியஸில் நடைபெற்ற புலம்பெயர்த் தமிழ் இலக்கியம் மாநாட்டிலும், சுவீசில் நடைபெற்ற முருகவழிபாடு ஆய்வு மாநாட்டிலும் இவரது கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. மலேசியா இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு மலரில் இவரது கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு கொழும்புத் தமிழ்ச் சங்கம், கண்டி தமிழ்ச் சங்கம், இலங்கை பல்கலைக்கழக நூல்கள் சங்கம், பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை நடாத்திய தமிழ் ஆய்வுக் கருத்தரங்கு ஆகிய தேசிய ஆய்வு மாநாடுகளிலும் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். இவை மாநாட்டு கட்டுரை மலர்களிலும் இடம்பெற்றுள்ளன.

வைத்திய கலாநிதி கோமதி மகேஸ்வரன் குண்டசாலை கரந்தகொல்ல விலங்கு பரிபாலன பாடசாலை சிரேஷ்ட விரிவுரையாளர், விவசாயத்துறை, விலங்கு பரிபாலனத்துறை மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.

இவ்வருவரும் ஜனவரி 27ம் திகதி மலேசியா பயணமாகின்றனர். அங்கு நடைபெறும் இலக்கியவாதிகள் சந்திப்பிலும் கலந்து கொள்வதுடன் சிறப்புரையாற்றவும் உள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.