புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 
தமிழோடிசை பாடல் இசைத் தமிழ் விழாவும் தலைக்கோல் விருது வழங்கலும் - 2015

தமிழோடிசை பாடல் இசைத் தமிழ் விழாவும் தலைக்கோல் விருது வழங்கலும் - 2015

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் தை மாதம் 30, 31 ஆம் திகதிகளில் 'தமிழோடிசை பாடல்'' இசைத் தமிழ் விழாவும், தலைக்கோல் விருது வழங்கலும் நடைபெறவுள்ளன.

30.01.2015 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சுவாமி விபுலானந்தர் அரங்கில் சங்கத் தலைவர் .ஆ.இரகுபதிபாலஸ்ரீதரன் தலைமையில் .இரா.பாலசுப்பிர மணியம் (சரிட்டா ஜ_வலரி, கொழும்பு), திருமதி சாரதா பாலசுப்பிரமணியம் தம்பதியினர் மங்கல விளக்கேற்றி வைக்கவுள்ளார்.

தமிழ் வாழ்த்தினை செல்வி தேனுகா கருணாகரன் இசைக்கவுள்ளார். வீணையிசையினை சங்கீத வித்வான் நந்தினி விஜயரத்தினத்தின் மாணவிகள் வழங்க வுள்ளார்கள்;. இந்நிகழ்ச்சிக்கு - மிருதங்கம்.ப.சாந்தரூப சர்மா மிருதங்கம் வாசிப்பார்.

தொடக்கவுரையை தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர். தெ.மதுசூதனன் நிகழ்த்துவார். நன்றியுரையை பொதுச் செயலாளர்.தம்பு சிவசுப்பிரமணியம்; வழங்குவார்.

இசை அரங்கில் இசைக்கலைமணி சுவர்ணலதா பிரதாபன், (இசை ஆசிரியை, சாந்த கிளேயர் கல்லூரி, வெள்ளவத்தை) கலாநிதி ஸ்ரீதர்'னன் (தலைவர், இசைத் துறை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) ஆகியோரும்; மிடற்றிசை வழங்க உள்ளார்.

இவர்களுடன் அணியிசைக் கலைஞர்களாக மிருதங்க கலாவித்தகர் வை.வேனிலான், இசைக்கலைமணி ச.திபாகரன், கலாவித்தகர் வி.பிரபா ஆகியோர் பங்குபற்று கின்றனர்.

31.01.2015 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு பேராசிரியர் வி.சிவசாமி அரங்கில் சங்கத் துணைத் தலை வர் பேராசிரியர் சபா nஜயராசா தலைமையில் ஆய் வரங்கு நடைபெறவுள்ளது. நீர்கொழும்பு இந்து வர்த்தகர் சங்கத் தலைவர், வேலு சந்திரசேகரம் மங்கல விளக் கேற்றி வைக்கவுள்ளார். தமிழ் வாழ்த்தினை செல்வி வை'hலி யோகராஜன் இசைக்கவுள்ளார்.

ஆய்வரங்கு - தமிழிசை மரபு என்னும் தலைப்பில் நடைபெறவுள்ளது.

~~தமிழிசை வேர்கள்" என்னும் தலைப்பில் கலாநிதி சியாமளாங்கி கருணாகரனும் ~~தமிழிசையும் கர்நாடக இசையும்" என்னும் தலைப்பில் இசைத்திரு அருணந்தி ஆரூரனும், ~~தமிழிசையும் இசை ஆளுமைகளும்" என்னும் தலைப்பில் இசைத்திருமதி கிருபாசக்தி கருணா வும், "தமிழிசை இயக்கம்" என்னும் தலைப்பில் சங்கீதபு+'ணம் சரோஜh தம்பு வும் ஆய்வுரைகளை நிகழ்த்தவுள்ளார்கள். நன்றியுரையை ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.கதிரவேலு மகாதேவர் வழங்குவார்.

31.01.2015 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சங்கத் துணைத் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தலை மையில் எஸ்.கணபதிப்பிள்ளை, திருமதி சந்திரா கணப திப்பிள்ளை தம்பதியினர் மங்கல விளக்கை ஏற்றி வைக்க வுள்ளானர். தமிழ் வாழ்த்தினை செல்வி பிரியங்கா ஆன் பிரான்சிஸ் இசைக்கவுள்ளார். தலைக்கோல் விருது வழங் கல் நாட்டியவாரிதி லீலாம்பிகை செல்வராஜhவும்;, பொன். ஸ்ரீவாமதேவனும், சங்கீதபு+'ணம் சரோஜh தம்புவும்; "தலைக்கோல்" விருது வழங்கிக் கௌரவிக்கப் படவுள் ளார்கள்.

இசைக்கலைமாணி தாரிணி ராஜ் குமாரும் கலைமாமணி தங்கராசா வாகீசனும் மிடற்றிசை வழங்கவுள்ளானர்

இவர்களுடன் அணியிசைக் கலைஞர்களாக மிருதங்க கலாகீர்த்தி க.சுவாமிநாதன் சர்மா, கலாபு+'ணம் சரஸ்வதி சுப்பிரமணியம், கலாவித்தகர் வி.பிரபா ஆகியோர் பங்குபற்றுகின்றனர்.

நன்றியுரையை இலக்கியக்குழுச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி வழங்குவார்.

தம்பு சிவசுப்பிரமணியம்

பொதுச் செயலாளர்

~தலைக்கோல்' விருது பெறுவோர்

1. திருமதி லீலாம்பிகை செல்வராஜh

இவர் சென்னை, அடையாறு ~கலா சே'த்ரா' வில் திருமதி ருக்மணிதேவி அருண்டேலிடம் பரதக்கலையினைப் பயின்று டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் மயிலாப்பு+ர் கௌரி அம்மாவிடம் விசேடமாகப் பதங்களைக் கற்றுக் கொண்டுள்ளார். இலங்கையின் மூத்த, முன்னணி நாட்டியக் கலைஞராகத் திகழும் இவர், ~கலைக்கோவில்' நடனப்பள்ளியின் நிறுவுனராவார்.

நடன ஆசிரியர், நடன அமைப்பியலாளர், யாழ் பல் கலைக்கழக நுண்கலைப்பீடத்தின் வருகை விரிவுரை யாளர், நடனத்துறை ஆலோசகர் எனப் பல நிலைகளில் பரதக்கலைக்கான இவரது பணி விரிவுபெற்றுள்ளது. இவர் எண்ணற்ற மாணவிகளை நடன ஆசிரியர்களாக உருவாக் கியுள்ளார். தனது மாணவிகள், பலரை அரங்கேற்றம் காணச் செய்த அம்மையார் அண்மையில் வடமாகாண முதலமைச்சர் விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ந}புர லயநிதி, கலாபு+'ணம், கலாரத்னா, நாட்டிய வாரிதி எனப் பல கௌரவங்களைப் பெற்றுள்ள இவர், ~நடன சாரம்', ~பரதநாட்டிய - கற்பித்தல் முறைகள்', ~ஆடற்கலை' என்ற மூன்று நூல்களையும் எமக்கு ஆக்கித்தந்துள்ளார்.

திருமதி. லீலாம்பிகை செல்வராஜh அவர்கள் பரதநாட்டியத்திற்கு வழங்கியுள்ள அரிய பங்களிப்பிற்காக, ~தலைக்கோல்' விருது வழங்கிக் கௌரவிக்கப்படுகிறார்.

2. பொன். ஸ்ரீ வாமதேவன்

சாவகச்சேரியைச் சேர்ந்த. பொன். ஸ்ரீ வாமதேவன் சென்னை, அடையாறு கர்நாடக சங்கீத மத்திய கல்லூhயில் இசைபயின்று, வாய்ப்பாட்டிலும் வயலினிலும் சங்கீத வித்வான் பட்டத்தைப் பெற்றுள்ளார். கல்முனை வெஸ்லி கல்லூரியில் தனது இசை ஆசிரியர் பணியினைத் தொடங்கிய இவர், சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் இறுதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தின் வெளிவாரி இசைப் பரீட்சகர், தற்காலிக விரிவரையாளர், வளவாளர் என இன்றும் இவரது இசைப்பணி தொடர்கிறது. இலங்கையில் ஆசிரியர் கீதமாக இசைக்கப்படும் ~முத்து முத்தான...' எனும் பாடலினை இவர். இயற்றி, மெட்டமைத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், சைவசமய பாடத்திட்டத்திலுள்ள தேவாரங்களை மாணவர்கள் பயிலும்படிபாடி, எட்டு இறுவட்டுக்களை இவர் வெளியிட்டுள்ளார். ஐம்பதிற்கும் மேற்பட்ட கீர்த்தனங்கள், மெல்லிசைப்பாடல்கள் என்பவற்றை இயற்றியுள்ளார்.

இலங்கை வானொலியின் யு பிரிவு வாய்ப்பாட்டுக் கலைஞராகவும், கூடவே மெல்லிசைத்துறையில் டீ பிரிவு கலைஞராகவும் உள்ள பொன். ஸ்ரீவாமதேவன்;, இசைத்துறைக்கு ஆற்றியுள்ள அரும் பணிக்காக, ~~தலைக்கோல்'' விருது வழங்கிக் கௌரவிக்கப் படுகிறார்.

3. செல்வி. சரோஜh தம்பு

கரவெட்டியைச் சேர்ந்த இவர், அறுபதுகளின் ஆரம ;பத்தில் தமிழ்நாட்டின் புகழ்பு+த்த அண்ணாமலைப் பல்க லைக்கழகத்தில் இசைபயின்ற பெருமைக்குரியவர். அங்கு ~சங்கீத பு+'ணம்' (சிறப்பு) பட்டத்தைப் பெற்றுக்கொண்ட அம்மையார், பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியருமாவார்.

இலங்கைக் கல்வித்துறையில் ஆசிரியர், அதிபர், பகுதிநேர விரிவுரையாளர், சங்கீத போதனாசிரியர், இசை ஆசிரிய ஆலோசகர், உதவிக் கல்விப் பணிப்பாளர் - அழகியல் என்பன இவரது இசைப் பணியின் மைல் கற்க ளாகும்.

இசைப்பணியில் இன்றும் தொடர்ந்து பங்களிப்பை வழங்குகின்ற அம்மையார்,

தமிழிசைச் செல்வி, இசைக் கலைவாணி, இசைவாரிதி, இசைக் கலைஞான கேசரி, கலாபு+'ணம் எனப் பல கௌரவங்களைய் பெற்றவராவார். முதுகலைஞர், கலாஜோதி, சைவஞான ஜோதி என்பன இவர் பெற்றுக் கொண்ட மேலும் சில விருதுகளாகும்.

எம். தண்டபாணி தேசிகரிடம் இசை கற்ற பெரு மைக்குரிய செல்வி சரோஜh தம்பு இசைத்துறைக்கு ஆற்றி யுள்ள அரும்பணிக்காக, ~தலைக்கோல்' விருது வழங்கிக் கௌரவிக்கப்படுகிறார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.