புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 
சிரே~;ட ஊடகவியலாளர் எம்.Nஜ.எம். தாஜ{தீனுக்க கலாபு+~ண விருது

சிரே~;ட ஊடகவியலாளர் எம்.Nஜ.எம். தாஜ{தீனுக்க கலாபு+~ண விருது

ஊடகத் துறையில் 30 வருடங்களுக்கும் மேலாக உன்னத சேவையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.Nஜ.எம். தாஜ{தீன் 2014 ஆம் ஆண்டின் ஊடகத்து றைக்கான கலாபு+'ண விருது பெற்றார்.

இது தொடர்பான அரச விருது வழங்கும் வைபவம் முன்னாள் அமைச்சர் ரீ. பீ. ஏக்கநாயக்க தலைமையில் கடந்த 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டாரநா யக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டது.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஊடகத் துறையில் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.Nஜ.எம். தாஜ{தீன்.

1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி நீர்கொழும்பு, கம்மல்துறையில் ஏ.சீ.எம். nஜலால்தீன், ஐ. சமூனா உம்மா தம்பதியரின் இரண்டாவது மகனாக இவர் பிறந்தார். கம்மல்துறை அல் - பலாஹ் முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் 1964 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண பரீட்சையிலும் பின்னர் 1979 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையிலும் சித்தியடைந்தார்.

1980 ஆம் ஆண்டு ஊடகத்துறைக்குப் பிரவேசித்த இவர் முதலில் 'தினபதி', சிந்தாமணிப் பத்திரிகைகளின் கொழும்பு நிருபராக நியமிக்கப்பட்டார்.

அக்காலப் பகுதியில் பத்திரிகை உலகின் ஜhம் பவான் எஸ். டி. சிவநாயகம் மற்றும் தினபதி பதில் ஆசிரியர் கே. கே. இரத்தினசிங்கம் அகியோரிடம் ஊட கத்துறை நுணுக்கங்களைக் கற்றார்.

பத்திரிகைகளுக்கு தலைப்புச் செய்திகள், கட்டு ரைகள், கவிதைகள் மற்றும் சிறுகதைகள் வரைந்தார். வெள்ளிதோறும் 'இஸ்லாமிய பு+ங்கா' வை தயார்த்து வெளியிட்டார். தினபதி பத்திரிகை நிறுவனம் மூடப் பட்டதையடுத்து தினகரனின் நீர்கொழும்பு நிருபராக நியமனம் பெற்று பின்னர் 1995 ஆம் ஆண்டு தினகரன் உதவி ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

1998 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறைக்கான டிப்ளொமா பட்டம் பெற்றார்.

தினகரன் நகரப் பதிப்புக்கு பொறுப்பாக நியமிக்கப் பட்ட இவர் வாராந்தம் 'ஆலமுல் இஸ்லாம்”, 'இஸ் லாமியச் சுடர்' மற்றும் 'பெருநாள் மலர்” 'மீலாத் மலர்” என்பவற்றைத் தயாரித்து வெளியிட்டார்.

தமது 55 ஆவது வயதில் ஓய்வு பெற்ற இவர் 2005 ஆம் ஆண்டு வீரகேசரி வாராந்தப் பத்திரிகை மற்றும் 'மெற்றோ' தினசரி ஆகியவற்றின் உதவி ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபு+ர்வ இணையத்தளமான றறற.நெறள.டம இல் பிரதம ஆசிரியாக நியமனம் பெற்றார்.

1981 ஆம் ஆண்டு இல்லறம் நுழைந்த இவர் நீர்கொழும்பு ஸீனதுல் ஸ{ல்பிகாவை மணந்தார். அதன் மூலம் சுல்பா, இஸ்மத் மற்றும் மின்பா ஆகிய மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார்.

1981 ஆம் ஆண்டு ஈரானுக்கு விஜயம் செய்த இவர் ஈரான்-ஈரான் யுத்த செய்திகளை சேகரித்ததோடு இஸ்லாமியப் புரட்சியின் மூன்றாம் ஆண்டு விழாவிலும் பங்குபற்றினார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.