புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 

6ஆவது விக்கெட்டுக்கு உலக சாதனை இலங்கையை வீழ்த்தியது நியு+ஸிலாந்து

6ஆவது விக்கெட்டுக்கு உலக சாதனை இலங்கையை வீழ்த்தியது நியு+ஸிலாந்து

இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் நியு+ஸிலாந்து 108 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இரு அணிகளுக்கு இடையேயான 5ஆவது ஒருதின ஆட்டம் டுனெடினில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதலில் விளையாடிய நியு+ஸிலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய இலங்கை 43.4 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியு+ஸிலாந்து 20ஆவது ஓவரில் 93 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த லுக் ரோஞ்சி, கிராண்ட் எலியாட் 6ஆவது விக்கெட்டுக்கு இணைபிரியாமல் 267 ரன்கள் விளாசினர். ஒரு தின ஆட்டங்களில் 6ஆவது விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன் குவிப்பு இது. லுக் ரோஞ்சி 99 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 9 சிக்சர், 14 பவுண்டரிகளுடன் 170 ரன்களும், எலியாட் 96 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 2 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 104 ரன்களும் விளாசினர்.

லுக் ரோஞ்சி 170 ரன்கள் குவித்தது ஒரு தின ஆட்டங்களில் 7ஆவது ஆட்டக்காரரின் அதிகபட்சம் ஆகும்.

இலங்கை தொடர்ந்தபோது, தொடக்க ஆட்டக்காரர் திலகரத்ன தில்'hன் மீண்டும் ஒரு முறை சிறப்பாக விளையாடி 106 பந்துகளில் ஒரு சிக்சர், 17 பவுண்டரிகளுடன் 116

ரன்கள் குவித்தார். அவர் ஆட்டமிழந்ததும் ஆட்டத்தின் போக்கு மாறியது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.