புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 

பதுளை, மொனராகலை மாவட்டங்களில் தமிழ் மொழிமூல விஞ்ஞான பாடசாலைகள்

பதுளை, மொனராகலை மாவட்டங்களில் தமிழ் மொழிமூல விஞ்ஞான பாடசாலைகள்

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று ஊவா மாகாண சபை உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தலைமையில் காலை 10 மணிக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெறுகிறது.

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தமிழ் மொழிமூல விஞ்ஞான மற்றும் தேசிய பாட சாலைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜh ங்க கல்வி அமைச்சர் வே. இராதாகி ருஷ்ணனின் ஆலோசகரும், ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பி னருமான அ. அரவிந்தகுமார் விடுத்துள்ள ஊடகச் செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டு ள்ளார்.

அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டு ள்ளதாவது, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தமிழ் மொழி மூல விஞ்ஞான பாடசாலைகள் ஒன்றேனும் இல்லாத நிலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் சித்தியடைந்து விஞ்ஞானப்பிரிவில் உயர்தரத்தில் படிப்பினை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் விஞ் ஞானப் பிரிவில் உயர் கல்வியை மேற்கொள்ள விரும்பினாலும் அவ்வசதி ஊவா மாகாணத்தில் இல்லாமையினால் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங் களிலுள்ள பாடசாலைகளில் அனுமதியை பெறுவதற்காக கையேந்தி நிற்கும் நிலமையே தொடர்ந்து வருகின்றது.

பெற்றோரும் மாணவர்களும் வெளி மாகாணங்களில் அனுமதியை பெறுவதற் காக பல்வேறு சிரமங்களை சந்திப்ப தோடு இடைத்தரகர்களின் ஏமாற்று கைங்கரியங்களுக்கும் முகம் கொடுக்கி ன்றனர். வெளி மாவட்டங்களிலுள்ள பாடசாலை அதிபர்களை அனுமதிக்காக அணுகும்போது வெளிமாவட்டங்களிலு ள்ள பிள்ளைகளை மாகாண கல்வி அமைச்சின் அனுமதியின்றி உள்வாங் கக்கூடாதென பணிப்புரை வழங்கப் பட்டுள்ளதாகவும் அதனால் மாகாணக் கல்வி அமைச்சின் சிபாரிசினை பெற்று வருமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர். மாகாண கல்வி அமைச்சின் அனுமதியை பெறுவதென்பது குதிரைக்கொம்பாகவே இருக்கின்றது.

மிக சிறந்த பெறுபேறுகளை பெற்றிருந்தாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில மாணவர்களுக்கு மட்டுமே பகீரதபிரயத் தனங்களுக்கு பின் விஞ்ஞான பாடசாலை யொன்றில் நுழையக்கூடிய வாய்ப்பு கிடைத்து வருகின்றது. அதிலும் தொழிற் சங்க, அரசியல் செல்வாக்கு உள்ள வர்களின் பிள்ளைகளுக்கு மாத்திரமே இவ்வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தமை கண்கூடு. பல்வேறு பாரபட்சங்கள் காட்டப் பட்டதாக பெற்றோர்கள் அங்கலாய்க்கி ன்றனர்.

இறுதியில் தகுதியிருந்தும் முயற்சிகள் கைக்கூடாத நிலையில் பெற்றோர்களும், மாணவர்களும் விரக்தியுற்று தங்களது அபிலாசைகளுக்கு மாறாக இம்மாவட்டங் களிலுள்ள கலை மற்றும் வர்த்தகப் பிரி வுகளில் தங்களது உயர்தர படிப்பினை மேற்கொள்கின்றனர். இதனால் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டத்திலி ருந்து பல்கலைகழகங்களில் விஞ்ஞானம் மற்றும் வைத்திய துறைகளுக்காக உள் வாங்கப்படும் மாணவர்களின் எண் ணிக்கை பு+ஜ் ஜpயமாகவே இருந்து வரு கின்றது.

இந்நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து இம்மாவட்டங்களிலேயே தமிழ் மொழி மூல விஞ்ஞான பாடசாலைகளை உருவாக்க வேண்டிய அவசியத்தை முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் அ. அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இராஜhங்க கல்வி அமைச்சருமாகிய வே. இராதாகிருஸ் ணனின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இவ்விடயத்தை கரிசனையோடும் சமூக உணர்வோடும் நோக்கிய அமை ச்சர் வே. இராதாகிருஷ்ணன் புதிய அர சாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்ட த்தின் கீழ் இதனை அமுல்படுத்த நட வடிக்கை எடுக்க இணக்கம் தெரிவித்து ள்ளார்.

அத்தோடு பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தமிழ் மொழி மூல தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச் சரின் கவனத்திற்கு முன்னாள்; ஊவா மாகாணசபை உறுப்பினரினால் கொண்டு வரப்பட்டதையடுத்து இதுதொடர்பாகவும் தனது பு+ரண சம்மதத்தை தெரிவித்துள் ளார்.

அதற்கிணங்க முதற்கட்ட நடவடி க்கையாக இராஜhங்க கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணனின் ஆலோசகரும், முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினருமாகிய அ. அரவிந்தகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை (25.01.2015) காலை 10.00 மணிக்கு ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் கலந்துரை யாடல் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார்.

இக் கலந்துரையாடலில் ஆக்கபு+ர்வமான ஆலோசனைகளையும், கருத்துக்களை யும் முன்வைக்கும் வண் ணம் ஊவா மாகாணத்தின் தமிழ் கல்விக்கு பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி. கலையரசி யோக ஸ்ரீநாதன், தமிழ் உதவி கல்விப் பணிப் பாளர்கள், முன்னாள் தமிழ் உதவி கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கு கடிதமூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வொன்றுகூடலில் முன்வைக்கப்படும் ஆலோசனைகளும், கருத்துக்களும் இராஜhங்க அமைச்சர் வே. இராதாகி ருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படும் என அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டு ள்ளது.

ஊவா மாகாணத்தில் மொத்தமாக 878 தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகள் உள்ளன. இதில் தமிழ் பாடசாலைகள் 171, முஸ்லிம் பாடசாலைகள் 31 அடங்குகின்றது. சிங்கள மொழிமூல தேசிய பாட சாலைகள் 33ம் பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 2 தமிழ் தேசிய பாடசாலைகளும் ஒரு முஸ்லிம் தேசிய பாடசாலையும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.