புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

ெகளரவ பிச்ைச

ெகளரவ பிச்ைச

பச்சைப் பசேல் என்ற அந்த வயல் வெளியில் அமைந்திருந்தது அவளுடைய ஓலைக் குடிசை. இதில்தான் நீண்ட நாட்களாக அவளுடைய கணவன் சக்திவேல் அன்னபூரணி இரண்டு பேரும் வாழ்ந்து வந்தார்கள். சக்திவேல் ஒரு கூலித் தொழிலாளியாக இருந்த போதும் அவர்களின் வாழ்க்கையில் வசந்தம் வீசியது.

அவர்களின் அன்பின் சின்னமாக ஆண் குழந்தை கிடைத்தது. குழந்தையை மிகவும் சிறப்பான நிலையில் வளர்த்து வந்தார்கள். பிள்ளை வளர்ந்து பள்ளிப் பருவத்தை அடைந்த போது சக்திவேலும் அன்னைபூரணியும் சேர்ந்து மகனைப் படிப்பிக்க வேண்டும் என்று பேசிக் கொண்ட அவர்கள் நகரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சேர்ப்பித்தனர்.

பாடசாலையில் மிகவும் நல்ல நிலையில் இருந்தான் விஸ்வநாதன். சகல பொறுப்புக்களையும் தானே ஏற்றுக் கொள்ளக் கூடிய தகுதியைப் பெற்றிருந்தான். இதன் காரணமாக எல்லா ஆசிரியர்களும் விஸ்வநாதன் மேல் நல்லெண்ணம் வைத்தார்கள். கல்வியில் ஆர்வம் கொண்ட அவனால் உயர் தரம் வரை மட்டுமே படிக்க முடிந்தது. காரணம் தந்தை சக்திவேலின் மறைவு.

தந்தையின் மறைவுக்குப் பின் வீட்டில் வறுமை தனக்கு ஓர் இடத்தை பிடித்துக் கொண்டது. இதன் காரணமாக படிப்பைத் தொடர முடியாத அவன், இனித் தொழில் செய்வதே சிந்தது என்ற முடிவுக்கு வந்தான்.

யாருக்கும் சொல்லாமல் காலம் கடந்து கொண்டிருந்தது. தாயும் மகனும் பேசிக் கொண்டு இருக்கும் போது, அம்மா இனியும் என்னால் தொழில் இல்லாமல் இருக்க முடியாது. நான் வெளிநாடு போகிறேன் என்று சொன்ன போது, அம்மா மறுப்பு தெரிவித்தாள். இருந்தும் இருவரின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு ஒத்துக் கொண்டாள் அன்னபூரணி.

வெளிநாடு செல்ல அம்மாவிடம் அனுமதிப் பெற்றுக் கொண்ட விஸ்வநாதன், தனக்குத் தெரிந்த ஒருவரிடம் சென்று தனது நிலையை சொல்லி தான் வெளிநாடு செல்ல இருப்பதாக சொன்ன போது, விஸ்வநாதனும் அவர் உதவி செய்வதாக கூறினார்.

சொன்னது போல் சீனித்தம்பி முதலாளி விஸ்வநாதனை வெளிநாடு அனுப்பினார். வெளிநாடு சென்ற நான்காவது மாதம் விஸ்வநாதனின் தாய் மரணித்து விட்டாள். தாய் காலம் சென்றதை கேள்விப்பட்ட விஸ்வநாதன் சில நாட்களில் வீட்டுக்கு வந்தான். இப்போது, அம்மாவின் பிரிவு ஒரு புறம், மறுபுறம் தான் இருக்க ஆதரவற்ற நிலை.

இந்த நேரத்தில் விஸ்வநாதனின் நண்பன் ரகுவரன் விஸ்வநாதனை சந்திக்க வந்தான். நிலைமையக் புரிந்து கொண்ட ரகுவரன் தனது துணிக்கடையில் ஒருவருக்கு இடம் உள்ளது. முடிந்தால் கடையில் வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டான். அதற்கு விஸ்வநாதன் உடன்பட்டான்.

வேறு வழியின்றி நண்பனுடன் சென்ற விஸ்வநாதன், துணிக் கடையில் வேலை செய்தான். இதே நேரத்தில் சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை உருவானது விஸ்வநாதனுக்கும்.

இந்த நினைவுடன் ஆறு வருடங்கள் பறந்தன. அதன்பின் சில்லறை கடை ஒன்றுக்கு சொந்தக்காரனான விஸ்வநாதன் இதிலிருந்து பல நாட்களுக்கு பின் சுகவீனம் காரணமாக கடைக்கு செல்ல முடியவில்லை.

இந்த வேளையில் விஸ்வநாதனை குறுக்கிட்டாள் பெண் ஒருத்தி.

பிரபல தொழிலதிபர் ராஜசேகரன் மதிப்பும் மரியாதையும் இவருக்கு ஊருக்குள் நிறையவே இருந்தது. இவருடைய பெயரைக் கேட்டால் மக்கள் கைகூப்புவார்கள். காணி பூமியும் வாகனங்கள் நிறையவே இருந்தன இவருக்கு.

இப்படி வசதி வாய்ப்புடன் இருந்தார் அவர். அவருடைய ஒரே மகள்தான் லீலாவதி. ஒரே பிள்ளை என்பதால் மிகவும் செல்லமாக வளர்த்தார் இராஜசேகரன்.

விஸ்வநாதனை குறுக்கிட்ட லீலாவதி பல தடவைகள் தனது நிலையை சொல்ல நினைத்த போதும் விஸ்வநாதன் இடம்கொடுக்கவில்லை. லீலாவதி நிறைய முயற்சி எடுத்தும் இடம் கிடைக்காத போதும் எப்படியும் தெரிவித்துதான் ஆக வேண்டும் என்ற முடிவுடன் தனது உள்ளகிடக்கையை வெளியிட்டார்.

லீலாவதியின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக சொல்லி விட்டான் விஸ்வநாதன். அப்படி இருந்தும் லீலாவதி விட்டுக் கொடுப்பதாக இல்லை. இதனால் கோபம் கொண்ட விஸ்வநாதன் எனது நிலையை இப்போது நீ அறிந்தால் நீயாகவே விலகிவவிடுவாய்.

‘ஏன் விஸ்வம் அப்படிச் சொல்aங்கள். நான் உங்களை நம்பி இருக்கிறேன்’

‘லீலா நான் சொல்வதை கவனத்தோடு கேளுங்க. உங்கட அப்பா பெரிய தொழிலதிபர். நீங்கள் ஏகப்பட்ட சொத்துக்கு சொந்தக்காரி.’

‘நான் செய்த தொழில் நஷ்டப்பட்டு விட்டது. எனவே, எனது நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த நிலையில் நோக்கத்தை அப்பா ஏற்றுக் கொள்வாரா.’

‘விஸ்வம் நீங்கள் நினைப்பது போல் நான் சொத்துக்கும் அந்தஸ்துக்கும் ஆசை பட்டவளில்லை. இதை உறுதியாக நீங்கள் நம்பலாம்.’

‘நீங்கள் என்ன சொன்னாலும் உங்கள் அந்தஸ்துக்கும் எனக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்’ ‘இந்தா பாருங்க விஸ்வம், எனது பதவி சொத்து, சுகம் இவைகளுக்கு அப்பால் உள்ளவள் நான்’ இப்போது போகிறேன். என்றோ ஒருநாள் வருவேன். திரும்பிய லீலாவத திகைத்துப் போனாள். பக்கத்தில் அப்பா. லீலாவதிக்குத் தூக்கி வாரிப் போட்டது. அப்படி இருந்தும் காட்டிக் கொள்ளாமல் சுதாகரித்துக் கொண்டாள்.

‘லீலா அவனுடன் உனக்கு என்ன பேச்சு? அப்பாவின் குரலில் கடுமை தெரிந்தது’

‘அப்பா விஸ்வம் நல்லவர் அவரும் மனிதன் தானே அப்பா’

‘அவரும் மனிதன் தான். அவருக்கு என்ன வசதி வாய்ப்பு இருக்கு. நாம் இருக்கும் நிலைக்கும் அவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது லீலா’

‘அப்பா சொத்து சுகம் பட்டம், பதவி எல்லாம் காலப்போக்கில் மாறக் கூடியது அப்பா.’

‘லீலா இதுதானா உன் முடிவு. அப்படி என்றால் என் சொத்துக்களில் எதுவும் கிடைக்காது’

‘அப்பா இது முடிவு இல்லை. இனித்தான் ஆரம்பம்’ மகள் சொன்னதைக் கேட்டவுடன் அப்பாவுக்கு எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் இருந்தது.

‘லீலாவதி இந்தா பாருமா அவன் அம்மா அப்பா இல்லாதவன். அவனை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வது சரியாகுமா? யோசித்துப் பார்.

‘அப்பா என்னுடைய முடிவை யாரும் மாற்ற முடியாது. அப்பா உருவத்தை விட்டு நிழலைப் பிரிக்க நினைப்பது முட்டாள்தனம்’

‘அப்பாவை வெறுத்து விஸ்வநாத்திடம் வந்து, நான் இப்போது சொத்து அந்தஸ்து எல்லாம் கைவிட்டு உங்களை நம்பி வந்து விட்டேன் ஏமாற்றி விடாதீர்கள்’

‘ஏன் லீலா இப்படியான முடிவு ஏன் எடுத்தீங்க.’

‘வேற என்ன செய்ய எனக்கு எந்த வழியும் தோணல.’ ‘லீலா நான் இப்போது இருக்கும் நிலையில் எந்த முடிவும் எடுக்க முடியாது. அப்போது இருந்த விஸ்வம் வேற இப்போது இருக்கிற விஸ்வம் வேற.’

‘ஏன் விஸ்வம், அப்படி நினைக்கிaங்க. உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?’

‘நம்பிக்கை இல்லை என்று யார் சொன்னது. இப்ப இருக்கிற நிலையில் எதுவும் ஒத்து வராது.’

‘இந்தக் கதை எல்லாம் சரிபட்டு வராது. இரண்டு பேரும் போய்த் திருமணம் செய்து கொள்வதுதான் சரி.’

‘ஏன் லீலா இவ்வளவு அவசரம். நீங்க எதையும் யோசிக்க மாட்டிங்களா?’

விஸ்வம் நானும் உங்களைப் போல் தான் இருக்கிறேன். நான் ஏதும் சொன்னால் அந்தஸ்து அது இது சொல்வீங்க. இப்ப என்னிடம் எதுவும் இல்லை. நாங்க திருமணம் செய்து கொள்வது மாற்றம் இல்லாத என்னுடைய முடிவு.

‘நண்பர்கள் சிலரின் உதவியுடன் விஸ்வநாதனுக்கும் லீலாவதிக்கும் திருமணம் நடந்தது.

சில மாதங்களின் பின் ராஜசேகரன் மகளை நினைத்து மனம் கலங்கினார். எங்கே இருக்கிறாள் என்று கூட அவருக்குத் தெரியாது. இருந்தாலும் தகப்பன் இல்லையா விட்டுக் கொடுப்பாரா எப்படியோ கேட்டு மகளைப் பற்றிய விபரம் தெரிந்து கொண்டார்.

விஸ்வநாதனும் லீலாவதியும் தேவைகளை எல்லாம் நண்பர்கள் மூலமாகவே நிறைவு செயய்து கொண்டார்கள்.

ராஜசேகரன் மகள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு கடும் போராட்டத்துக்கு மத்தியில் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்துடன் மகளுடைய வீட்டுக்குப் போகிறார். நாம் கொடுக்கும் பணத்தை அவள் ஏற்றுக் கொள்வாளா மறுத்து விடுவாளா என்ற சந்தேகம் இருந்தது. யோசித்த வண்ணம் செல்கிறார். மகளை கண்ட சந்தோ ஷத்தில் சுகத்தைப் பற்றி கேட்டுக் கொண்டார்.

நீண்ட நாட்களுக்குப் பின் அப்பாவை கண்ட லீலாவதி சந்தோஷம் கொண்டவளாக அப்பாவை ஆதரித்த அவளுக்கு அப்பா என்ன நோக்கத்தில் வந்துள்ளார் என்பதை ஊகித்துக் கொள்ள கனநேரம் எடுக்கவில்லை.

ஒரு காலத்தில் விஸ்வநாதன் தகுதி இல்லாத தரித்திரம் என்று சொன்ன வாயால் இப்போது மாப்பிள்ளை என்று சொல்ல வேண்டியதாகி விட்டது. என்ன செய்ய மகளை ஏற்றுக் கொண்டவனாகி விட்டானே என்று அவரே சமாதானம் கொண்டார். கையில் இருந்த பெட்டியை மகளிடம் கொடுத்தார்.

அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த விஸ்வநாதன், ‘லீலா அதனை எடுக்க வேண்டாம்’ என கட்டளை இட்டான்.

‘மாமா நான் ஒரு சில காலத்துக்கு முன் செல்லாக்காசாக கணிக்கப்பட்டவன். உங்களால் நீங்களே அப்படி சொன்ன பிறகு இந்த கெளரவ பிச்சை எங்களுக்குத் தேவைபடாது மாமா சில நேரம் அப்படி நடந்தால் யோசிப்போம்’ என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.