புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 
150 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் கொழும்பு மாநகர சபை

150 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் கொழும்பு மாநகர சபை

கொழும்பு மாநகர சபை அதன் சிறப்புமிகு 150 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாட்டமும் சர்வதேச மேயர்களின் மாநாடு இன்று 13ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலிலும் நாளை 14ஆம் திகதி கொழும்பு மாநகர சபையிலும் நடைபெற உள்ளது.

தெற்காசியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த கொழும்பு மாநகர சபை 1865ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டில் புள்ளிவிபரப்படி 6 இலட்சத்து 41 ஆயிரம் சனத்தொகையினைக் கொண்டது. இந்த நாட்டின் தலைநகரமாகவும் இதயமாகவும் திகழுவது கொழும்பு மாநகரமாகும். ஒரு நாளைக்கு 10 இலட்சம் பேர் கொழும்புக்கு வந்து போகின்றனர்.

இம் மாநகரை கடந்த 50 வருடங்களாக ஜ.தே.கட்சியின் மேயரைக் கொண்டு ஆட்சி நடைபெற்று வருகின்றது. 53 மக்கள் பிரநிதிகளைக் கொண்டுள்ளது. 12ஆயிரம் ஊழியர்கள் கடமையாற்றுகின்றனர். இதில் வீதி, சுகாதாரம், நீர், கழிவு அகற்றுதல், தொலைபேசி, மின்சாரம், விளையாட்டு, கழியாட்டம் மற்றும் 1 இலட்சத்து 20ஆயிரம் வீடுகள் தொடர்மாடி வீடுகள் மற்றும் அரச, தனியார் கட்டிடங்கள், கொண்ட 555.031 சதுர கி.மீட்டர் பரப்பளவைக் கொழும்பு மாநகர சபை கொண்டுள்ளது. 2011ஆம் ஆண்டில் இருந்து ஜ.தே.கட்சியின் மேயர் முதற் பிரஜையாக ஏ.ஜே.எம். முசம்மில் செயற்பட்டு வருகின்றனர். டிசம்பர் 31ஆம் திகதியுடன் கொழும்பு மாநகர சபையின் ஆட்சிக் காலம் முடிவடைய உள்ளது.

உலகின் பல பாகங்களைச் சேர்ந்த மேயர்கள் மற்றும் பிரநிதிகள் பங்கு பெறுகின்றனர். இம் மாநாடு ”எதிர்கால நகரங்கள்” எனும் தலைப்பில் இடம்பெறும். இதன் ஆரம்ப நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, அவர்கள் தலைமை தாங்குவார். இதன் போது மாநகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சார் பாட்டலி சம்பிக்க ரணவக்க சிறப்புரை ஆற்றுவார் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ளுவார் என சபாநாயகார் கரு ஜயசூரிய தெரிவித்தார். கொழும்பு மாநகர சபையின் 150 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றி கொழும்பு மேயர் இம் மாநாடு பற்றி தெரிவிக்கையில் -. இம் மாநட்டில் சபாநாயகார் கரு ஜயசூரிய மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேசப்பிரிய, கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம் முசம்மில் ஆகியோர் தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன்.

இக் கொண்டாட்டங்கள் பற்றி மேயர் முசம்மில் கருத்து தெரிவிக்கையில், -

தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பிராந்தியத்தின் பழைமை வாய்ந்த மாநகர சபைகளின் ஒன்றான கொழும்பு மாநகர சபை, கொழும்பு வாழ் மக்களுக்கு உயர் தர நவநாகரிக வசதிகளை வழங்குவதில் முன்னணியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிக் கொண்டாட்டங்கள் 14ஆம் திகதி கொழும்பு மாநகர வளாகத்தில் நிகழும். பல்லினத்துவ பிரதிபலிக்கும் வண்னமயமான கலாசார நிகழ்வு அமையும். இக்கலாசார நிகழ்வின்போது மேயர்களாகவிருந்த முன்னாள் ஜனாதிபதிகள் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர்கள் மற்றும் மதிப்புமிக்க அரச பதவிகளை வகிக்கும் மாநரக சபை அங்கத்தவர்கள் ஆகியோர்் கொளரவிக்கப்படுவர். இதில் ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள்.

150 ஆண்டுகள் நிறைவையொட்டி 500 ரூபா நாணய குற்றி ஒன்றும் இலங்கை மத்திய வங்கியினால் அன்றைய தினம் வெளியிடப்படும். அத்துடன் நினைவு தபால் முத்திரை ஒன்றும் தபால் திணைக்களத்தினால் வெளியீட்டு வைக்கப்படும். கொழும்பு மேயர்களாக பதவி வகித்த முன்னாள் பிரதமர் ,ஜனாதிபதி அமைச்சர்கள் சபாநயாகர் அமைச்சர்கள் அவர்களது குடும்பங்களை அழைத்து நினைவு விருதுகள் வழங்கப்படும். அல்லது மேயராக பதவிவகித்தவர்கள் உயிருடன் இருப்பின் அவர்களது சேவைகைகாகவும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்படும்.

கொழும்பு மேயராக 1937 தொடக்கம் பதவி வகித்த 24 மேயர்களாக தற்போது உயிருடன் இருப்பவர்கள் மற்றும் மறைந்தவர்களுடைய குடும்பத்தாரை அழைத்து கெளரவிக்கப்பட உள்ளனர். மேயர்களாக பதவி வகித்த சரவணமுத்து, சொக்மன், ஏ.ஈ குணசிங்க, ஜேர்ஜ் டி சில்வா, ஆர்.டி. மெல், குமாரன் ரத்னம், செல்லமுத்து, சீ.டி கிரேரோ, டி. ருத்ரா, என்.எம். பெரேரா, வீ.ஏ சுகதாச, எம்.எச். மொஹமத், வின்சன்ட் பெரேரா, ஜாபீர். ஏ. காதர், ஏ.எச்.எம். பௌசி, பீ.சிறிசேனா குரே, ஹூசைன் மொஹமட், ரட்னசிரி ராஜபக்‌ஷ, கே. கணேசலிங்கம், தேசபந்து கரு ஜயசூரிய, ஓமர் காமில், பிரசன்ன குணவர்த்தன, உவைஸ் மொஹமட் இம்தியாஸ் ஆகியோறும் கௌரவிக்கப்பட உள்ளனர். கொழும்பு மாநகர சபையின்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.