புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 

தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவருவதை வரவேற்கின்றோம்: ஆனால், அதன் மூலமாக----

தமிழரது உரிமைகள் பறித்தெடுக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது

ன்றைய நல்லாட்சி சிறுபான்மை மக்களுடன் இணைந்து பெற்ற மக்கள் ஆணை என்பதை எவரும் மறந்து விடக் கூடாது

மஹிந்த, பசில் செய்த தவறை மைத்திரி அரசு செய்யக் கூடாது ----அமைச்சர் மனோ கணேசன் 

அரசாங்கம் உத்தேசித்துள்ள புதிய தேர்தல் முறையில் தமிழ் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்படவிருக்கும் அநீதி சீர்ப்படுத்தப்படும் வரை அடுத்த தேர்தலுக்குச் செல்ல முடியாது. தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படுவதை வரவேற்கின்றோம். மக்களின் ஆணையைச் சிறுபான்மை மக்களாகிய தமிழ், முஸ்லிம் மக்களுடன் இணைந்தே புதிய அரசாங்கம் பெற்றுக்கொண்டது. அந்த ஆணையைப் பயன்படுத்தி தமிழ் பிரதிநிதித்துவத்தையும், தமிழ் மக்களின் உரிமைகளையும் பறித்தெடுப்பதற்கு நாங்கள் இடங்கொடுக்கப் போவதில்லை. இவற்றையெல்லாம் நாம் ஒருபோதும் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் மாட்டோம் என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் முறை தொடர்பிலான இறுதி முடிவு அறிக்கை சமர்பிக்கும் காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.

விவரம்»


பாத் பைண்டர் நிறுவன அழைப்பையேற்று இலங்கைக்கு வருகை தந்த புதுடில்லி விவேகானந்த சர்வதேச மன்றத் தலைவர் நிர்மலா சந்தர் தலைமையிலான குழுவினர் கொழும்பு -13 விவேகானந்தா மண்டபத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் சிலைக்கு மலர்மாலை அணிவித்தனர். படத்தில் இந்திய குழுவினருடன் பாத் பைண்டர் பணிப்பாளர் கே. பாலசுந்தரம், இந்து மா மன்றத் தலைவர் க. நீலகண்டன் உட்பட பிரமுகர்கள் காணப்படுகின்றனர்.
(படம் ஏ. மதுரைவீரன், எஸ். பாலா)

மக்களின் கருத்தறிந்தே எல்லைகள் நிர்ணயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

தேர்தல் தொகுதி எல்லைகளை அரசியல் கட்சிகளின் வெற்றியை எதிர்பார்த்து நிர்ணயம் செய்யாது பொதுமக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையில் எல்லைகள் நிர்ணயிக்கப்படல் வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். எல்லை நிர்ணயக் குழுவானது தனது பொறுப்புக்களைப் பக்கச்  சார்பின்றியும் நியாயமாகவும் நிறைவேற்ற வேண்டும்.

விவரம்»

Other links_________________________

நிரந்தர தீர்வை காண தமிழரிடையேயான ஒற்றுமையின்மையே பிரதான தடை: 

சிந்தித்து செயற்படுங்கள்

தமிழருக்கும், தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் லண்டன் நியூபுரே மேயர் ஜெயரஞ்சன் அறிவுரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமக்கிடையேயான உட்கட்சி மோதலைத் தவிர்த்து, தமிழ் மக்கள் தமக்கு வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து அம்மக்களுக்காகப் பணியாற்ற முன்வரவேண்டும். இதுவரை காலமும் கிடைத்த பல சந்தர்ப்பங்களைக் கை நழுவ விட்டது போல இனியும் செயற்படாது, அவர்கள் இனியாவது சிந்தித்துச் செயற்ட வேண்டும் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள

விவரம்»

எந்தவிதமான நஷ்ட ஈடும் வேண்டாம் பிள்ளைகள் வந்தால் மட்டும் போதும்

ஆணைக்குழு முன்னால் தாயொருவர் கண்ணீர் மல்க சாட்சியம்

எமக்கு எந்தவிதமான நஷ்ட ஈடுகளும் வேண்டாம். எமக்குப் பிள்ளைகள் வந்தால் மட்டும் போதும். கடவுளை நம்பிக்கொண்டு இரு மகன்களும் வருவர் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன். இராணுவத்தினர் எனது இரு மகன்களையும் பிடித்துச் சென்று இன்று வரை தகவல் எதுவும் தெரியாதுஇருக்கின்றேன் என யாழ்.மாவட்டச்

விவரம்»

வேற்றுமையை ஏற்படுத்த நினைப்போரது செயலுக்குப் பலியாகிவிடக் கூடாது:

கட்சி முரண்பாடுகள் ஊடகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை

 -அவை பேசித்தீர்க்கப்பட வேண்டும் என்கிறார் இரா. சம்பந்தன் 

“கட்சிக்குள் முரண்பாடு உள்ளதுதான். இல்லை என்பதற்கு இல்லை. ஆனால் முரண்பாடுகள் அனைத்தும் கட்சிக்கு வெளியில் செல்லக் கூடாது. அனைத்து விடயங்களும் உள்ளுக்குள் பேசித்தீர்க்கப்பட வேண்டும். ஜனநாயக கட்சி என்ற ரீதியில் முரண்பாடுகள் இருக்கத்தான்

விவரம்»


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.