புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 
இப்படிக்கு, என்றுமே அன்புள்ள, உன் குருட்டு உம்மா

இப்படிக்கு, என்றுமே அன்புள்ள, உன் குருட்டு உம்மா

அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டுவாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது.

தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மிகுதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளிற்கு தயார் செய்திருந்தாள். நல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன். புத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும் வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன.

பாடசாலையில் முதல் தரத்தில் சித்தியெய்துபவன் அவன். காலங்கள் உருண்டன. ஒரு முறை அவன் மிகச்சிறந்த பெறுபேற்றினை ஈட்டி அந்த பிரதேசத்திற்கும், அவனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்தான். இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த தாய் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள். மகனின் வகுப்பறை எது என அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள் இறைவனை புகழ்ந்தாள். சந்தோஷத்துடன் வீடு வந்து அவனிற்கு பிடித்தமான உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.

மகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருந்த தாய் மகன் வந்தவுடன் வாஞ்சையுடன் அருகில் சென்றாள். ஆனால் மகன் முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன் பேசவில்லை. நேராக அறைக்குள் சென்று படுத்து விட்டான். அவளிற்கு ஒன்றும் புரியவில்லை. பதற்றத்துடன் ஓடிச்சென்று என்னவென்றாள் கவலையுடன், மகன் சொன்னா, “நீ ஏன் என் பாடசாலைக்கு வந்தாய்?

அங்கு அழகான பணக்காரர்கள் மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என் நண்பர்கள் என்னை குருடியின் மகன் என கூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம், வெட்கம், இதன் பின்னர் நீ என் பாடசாலை பக்கமே வராதே” என கத்தினான் கோபமாக. அதிர்ந்து போனாள் தாய்.

ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என சத்தியம் செய்தாள். இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும் நண்பர்கள் முன்வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற பின், தனக்கு குருடியுடன் இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான். ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான் அவள் கதறி துடித்தாள், தினமும் தன் மகனை நினைத்து. இறுதி பரீட்சையில் பாஸாகி மருத்துவ கல்லூரிக்கு மகன் தெரிவானது அவளிற்கு தெரியவந்தது.

தலைநகர் சென்று படிக்க வேண்டும். நிறைய செலவாகும். தனது மிகுதமிருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று மகனிற்கு அனுப்பி வைத்தாள். 5 ஆண்டுகள் பறந்து சென்றன. இப்போது அவளது மகன் ஒரு மருத்துவன். அவனை பார்க்க அவள் பல முயற்சிகளை மேற்கொண்டும் எதுவும் பயனற்று போயின. ஒரு கடிதம் மகனிடம் இருந்து வந்தது. அதில், “உம்மா, நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த வைத்தியர்களில் ஒருவன். குருடியின் மகன் வைத்தியன் என்பது தெரிந்தால் எனது கெளரவம் பாதிப்படையும். ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன் பார்வையை விட்டும் கண்காணாத தேசம் செல்கிறேன்.” இது தான் அந்த கடிதத்தின் வரிகள். துடித்து போனாள் தாய்.

சில வருடங்கள் கடந்தன. முதுமையும், வறுமையும், அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம் எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி காரணமாக ஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும் வேலை செய்து வந்தாள் அந்த தாய். அந்த வீட்டின் எஜமான் இளவயதினள். நல்ல இளகிய குணம் படைத்தவள். இறையட்சமிக்கவள். அவளும் ஒரு வைத்தியராகவே இருந்தாள்.

இந்த தாயை தனது தாயாக நேசித்து போஷித்து வந்தாள். எல்லாம் நன்றாகவே நடந்தன. அவளது கணவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான். தனது எஜமானியின் கணவர் வருகிறார் என்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள் அந்த குருட்டு தாய்.

வீடு வந்த அவளது கணவன், சில நாளிகைகளின் பின்னர் சாப்பிட அமர்ந்தான். உணவை ஆசையாக வாயில் அள்ளி திணித்தான். திடீரென அவன் முகம் மாறியது. கருமை அவன் முகத்தில் அப்பி கொண்டது. சடாரென தனது மனைவியின் முகத்தை பார்த்து கேட்டான், “இதனை நீ தான் சமைத்தாயா?” என்று மனைவி குழப்பத்துடன் “இல்லையே” என்றாள் “அப்படியானால் யார் சமைத்தது” இது அவனது இரண்டாம் கேள்வி. வீட்டு வேலைக்காரி சமைத்தாள் என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான். (தொடர் 20 பக்கம்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.