புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 

சிங்கர் அறிமுகப்படுத்தும் SONY XPERIA Z5 உற்பத்திவரிசை

சிங்கர் அறிமுகப்படுத்தும் SONY XPERIA Z5 உற்பத்திவரிசை

நாட்டில் முதல் தர வர்த்தக நாமமாகவும், ஸ்மார்ட் போன்களை சந்தைப்படுத்துவதில் முன்னிலையில் திகழும் ஒரு நிறுவனமாகவும் விளங்குகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, இலங்கையில் Sony நிறுவனத்தின் பிரதிநிதித்துவ அலுவலகத்துடன் இணைந்து உள்நாட்டுச் சந்தையில் Sony XperiaZ5, XperiaZ5 Compact ஸ்மாா்ட் போன்கள் மற்றும் XperiaZ5 Premium ஆகிய பிரதான உற்பத்திகளை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இதனை அறிமுகப்படுத்தும் வகையில் கொழும்பு 02, சினமன்ட் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்ற விமரிசியான நிகழ்வொன்றில் Sony நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசியா மற்றும் இலங்கை பிரதிநிதித்துவ அலுவலகத்தின் தலைமை பிரதிநிதியான அலெக்ஸ் யீ, சிங்கா் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் வா்த்தகம் மற்றும் சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான மகேஷ் விஜேவர்த்தன ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். சுவீடன் மற்றும் ஜப்பான் ஆகியநாடுகளிலுள்ள Sony இன் படைப்பாக்க நிலைய ஸ்டூடியோக்களில் முன்னணி படைப்பாக்க சிந்தனைகளின் மூலமாக வடிவமைக்கப்பட்டுள்ள Xperia Z5 ஆனது ஒரு உலோகச் சட்டம் மற்றும் பளிங்கு கண்ணாடியிலான பின்புறத்துடன் மெல்லிய உடலமைப்பைக் கொண்டுள்ளது.

அதன் வன்மை, தினசரி வசதிக்காக தண்ணீா் உட்புகாது செளகாியமாக வைத்திருக்கக கூடியது. 5.2 அங்குல முகத்திரை, மெல்லிய தோற்றம், மற்றும் Fall 2015 fashion, உட்புற வடிவமைப்பு பின்னல்கள் போன்ற அம்சங்களுடன் எந்தவிதமான தனிப்பட்ட விருப்பத்திற்கும் ஏற்றவகையில் கவர்ச்சியும், உணர்வு வெளிப்படுத்தலும் கொண்டவெள்ளை,காிக் கறுப்பு, பொன்னிறம் மற்றும் பச்சை ஆகியநிறங்களில் கிடைக்கப்பெறுகின்றது.

ளுழலெ நிறுவனத்தின் இலங்கை அலுவலகத்திற்கான தலைமைப் பிரதிநிதியான அலெக்ஸ் யீ கூறுகையில் “வடிவமைப்பு மற்றும் தோற்றம் ஆகியவற்றில் தனித்துவமான வேறுபாடுகளுடன் எமது நவீன தொழில்நுட்ப புத்தாக்கத்தை இலங்கையில் அறிமுகம் செய்துவைப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், உங்களுடைய வாழ்க்கைமுறைக கேற்றமிகச் சிறந்த துணையாக Xperia Z5 உற்பத்தி வரிசை உள்ளதுடன், ஸ்மார்போனில் பொழுது போக்குதுறையில் விசேட கவனம் செலுத்தியுள்ளதையும் உறுதிசெய்கின்றது”.

கச்சிதமான ஸ்மாா்ட்போன் ஒன்றை விரும்புகின்றவர்களுக்கு சட்டைப்பையில் வைக்கக்கூடிய கையடக்கமான சாதனமாக மகத்தானகமரா தொழில்நுட்ப அம்சங்களுடன் Xperia Z5 Compact தற்போது கிடைக்கப் பெறுகின்றது.

மிக அழகாக கையடக்கமாக வடிவமைக்கப்பட்டு, 4.6 அங்குல முகத்திரையுடன் எவ்விதமான விட்டுக்கொடுப்புக்களும் இன்றிய செயல்திறனை இது வழங்குவதுடன், ஒருகையால் பாவிப்பதற்கு மிகவும் உகந்த ஒரு தெரிவாகவும் உள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.