புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
மு.கா.வின் அரசியல் சாணக்கியம்; பின்பற்ற TNA யிடம் கோரிக்கை

மு.கா.வின் அரசியல் சாணக்கியம்; பின்பற்ற TNA யிடம் கோரிக்கை

முரளியின் அழைப்பை ஏற்கவும் பாபுசர்மா இறைஞ்சல்

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்டு அரசுடன் இணைந்து போட்டியிட முன் வருவது மிகச் சிறப்பான தெரிவென்றும், அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசுடன் இணைய முன்வருவது மிகப்பெரும் சாணக்கிய செயல்பாடு எனவும் ஐனாதிபதியின் இணைப்பாளர் ஆர். பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

இதே போன்று பிரதி அமைச்சர் விநா யகமூர்த்தி முரளிதரனின் அழைப்பை ஏற்று தமிழ்க் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் வடகிழக்கு வாழ் தமிழ் மக்களின் அரசியல் தீர்வினை விரைவாக பெறுவதற்கான முயற்சியாக இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலை தமிழ் கூட்டமைப்பு பயன்படுத்த வேண்டும். 60 வருடமாக தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான எதிர்ப்பு போராட்டமும் ஆயுத போராட்டமும் தமிழர்களின் இருப்பைகூட இன்று கேள்விக்குறியாக்கிவிட்டது. இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுத்து தமிழ்மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி அதற்கு சமாந்தரமாக அரசி யல் தீர்வையும்பெற முயற்சிக்கலாம் என பாபு சர்மா மேலும் தெரிவித்துள்ளார்.

தனது அரசியல் சாணக்கியத்தின்மூலம் அரசுடன் இணைந்து தனது நிலைப்பாட்டை முன்னெடுத்து செல்வார் என்பதில் ஐயம் இல்லை. இது போன்று தமிழ் கூட்டமைப் பும் அரசியல் சாணக்கியத்துடன் செயற்பட வேண்டும் என பாபுசர்மா மேலும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.