புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

இவ்வார பலன்

கிரகம் நிற்கும் ராசி நிலை

குரு : இடபம் (நட்பு)
கேது : இடபம் (நீசம்)
ராகு : விருச்சிகம் (உச்சம்)
சூரியன் : மிதுனம் (பகை)
சனி : கன்னி (வக்கிரம் - நட்பு)
புதன் : கடகம் (நட்பு)
சுக்கிரன் : இடபம் (ஆட்சி)
செவ்வாய் : கன்னி (நட்பு)
சந்திரன் : மிதுனம், கடகம்,
சிங்கம், இடபம்

15.07.2012 முதல் 21.07.2012 வரை

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா

மேடம்

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

மூர்க்கத்தனமான குணம் உடைய மேடராசிக் காரர்களே 4ஆம் இடத்து சூரியன் காரணமாக பெண்வழியால் பகைமை ஏற்படலாம் உடல் நலம் பாதிக்கப்படலாம். 3ஆம் இடத்து புதன் காரணமாக அரசாங்க உத்தியோகத்தர்கள் முன் கவனத்துடன் நடப்பது நல்லது. 3ஆம் சுக்கிரன் காரணமாக நண்பர்கள் ஆபத்துக்கு கைகொடுப்பார்கள். குழந்தை செல்வம் கிடைக்கலாம்.


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

பிறரது சொத்தினை அனுபவிக்கும் பலன் கொண்டவர்கள் இடபராசிக்காரர்கள். 3ஆம் இடத்து சூரியன் காரணமாக புதிய பதவி கிடைக்கலாம். மதிப்பு உயரும், பணவரவு தாராளமாக இருக்கும். எதிரிகள் அடிபணிவர் உடல் நலம் மேம்படும். 2ஆம் இடத்து புதன் காரணமாக உதவி செய்தும் வீண் பெயர் கேட்க நேரிடும். 2ஆம் சுக்கிரன் காரணமாக அரச வழியால் நன்மை கிடைக்கும்.


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

சதா சிரித்து பேசும் குணமும் சுயநல குணம் உடைய மிதுனராசி காரர்களே 2ஆம் இடத்து சூரியன் காரணமாக பெருமளவு செலவு ஏற்படும். கண்சம்பந்தமான மருத்துவ சிகிச்சை ஏற்படலாம். 1ஆம் இடத்து புதன் காரணமாக உறவினர்களால் மனம் கவலை அடையலாம். 1ஆம் சுக்கிரன் காரணமாக பெண் நண்பர்களால் உதவி கிடைக்கும். ஓரளவு ஓய்வும் கிடைக்கும்.


கடகம்

புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்

தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற குணமும் உடைய கடக ராசிகாரர்களே 1ஆம் இடத்து சூரியன் காரணமாக அலைச்சல் கூடும்.
வீண் பெயர் கேட்க நேரிடும். உடல் நலம் பாதிப்படையலாம். 12ஆம் இடத்து புதன் காரணமாக எதிர்பார்த்த முடிவுகள் அனுகூலமாக அமையாது. 12ஆம் சுக்கிரன் காரணமாக ஆடைகள் அணிகலன்கள் வந்து சேரலாம்.


சிங்கம்

மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்

தொழிலில் ஊக்கம் கொண்ட குணவியல் உடைய சிங்க ராசிகாரர்களே 12ஆம் இடத்து சூரியன் காரணமாக இடமாற்றம் ஏற்படலாம் மேலும் செலவுகளும் அதிகரிக்கும். 11ஆம் இடத்து புதன் காரணமாக பிள்ளைகளால் நல்ல மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். 11ஆம் சுக்கிரன் காரணமாக பணவரவுக்கு குறையிருக்காது. மற்றவர்களுக்கு தானம் செய்வதில் நாட்டம் இருக்கும்.


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

சமூக சேவையில் விருப்பம் கொண்ட குணவியல் புடைய கன்னி ராசிக்காரர்களே 11ஆம் இடத்து சூரியன் காரணமாக புதிய சொத்துக்கள் சேரலாம். உடல் நலம் மேம்படும் தொழில் துறைகளால் லாபம் ஏற்பலாம். அரச வழியால் நன்மை கிடைக்கும் 10ஆம் இடத்து புதன் காரணமாக பெண்வழி சுகம் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். 10ஆம் சுக்கிரன் காரண மாக உதவி செய்தும் வீணான பெயர் கேட்க நேரிடும்.


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

பேச்சில் ஆணித்தரமான குணவியல்புடைய துலா ராசிக் காரர்களே 10ஆம் இடத்து சூரியன் காரணமாக எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தங்கு தடையின்றி உங்கள் மன விருப்பத்தின் படி கைகூடி வரலாம். 9ஆம் இடத்து புதன் காரணமாக உடல் நலம் பாதிக்கப் படலாம். ஒரு வித சோம்பல் தன்மை இருக்கும். 9ஆம் சுக்கிரன் காரணமாக பெண் நண்பர்களால் மனம் பாதிக்கப்படலாம்.


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

மனைவியின் பேச்சுக்கு அதிக மதிப்பு கொடுக்கும் குணவியல்புடைய விருச்சிக ராசிக்காரர்களே 9ஆம் இடத்து சூரியன் காரணமாக போக்குவரத்தில் மிகவும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். மனதில் தாழ்வு நிலை ஏற்படலாம். 8ஆம் இடத்து புதன் காரணமாக பிள்ளைகளால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். 8ஆம் சுக்கிரன் காரணமாக பெண் நண்பர்கள் கை கொடுப் பார்கள்.


தனுசு

மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்

நீதி, நேர்மை, பண்பு ஆகிய நல்ல ஒழுக்கங்களை கொண்ட தனுசு ராசிகாரர்களே 8ஆம் இடத்து சூரியன் காரணமாக அரச பதவியில் இருப்பவர்கள் முன் கவனத்துடன் நடந்துகொள்ளுங்கள். உடல் நலம் பாதிப்படையலாம். 7ஆம் இடத்து புதன் காரணமாக குடும்பத்தில் சச்சரவு ஏற்படும். 7ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக பெண் நண்பர்களால் மனம் பாதிப்படை யலாம்.


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

மனைவியின் போக்கின் படி நடந்துகொள்ளும் குணவியல்புடைய மகர ராசிகாரர்களே 7ஆம் இடத்து சூரியன் காரணமாக அலைச்சல் கூடும். வயிறு சம்பந்தமான பிரச்சினை ஏற்படலாம். தாழ்மையான மனநிலை ஏற்படும். 6ஆம் இடத்து புதன் காரணமாக புதிய பதவி கிடைக்கலாம். நல்ல செய்திகளும் கிட்டும். 6ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக காரி யங்கள் நிறைவேறுவது தாமதமாகும்.


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்

மற்றவர்களிடம் காணும் சிறு குற்றங்களையும் குறைகளையும் அடிக்கடி விமர்சிக்கும் குணவியல் உடைய கும்பராசிக்காரர்களே 6ஆம் இடத்து சூரியன் காரமாக புதிய சொத்துக்கள் சேரும். பொருளாதார நிலைமை மேம்படும். எதிரிகள் அடிபணிவர். உடல் நலம் மேம்படும். 5ஆம் இடத்து புதன் காரணமாக குடும்பத்தில் சிறு சச்சரவு ஏற்படலாம். 5ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக நண்பர்களின் உதவி கிடைக்கும்.


மீனம்

பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

வாசனை திரவியங்களிலும் ஆடை, ஆபரணங்களிலும் விருப்பம் கொண்ட மீன ராசிகாரர்களே 5ஆம் இடத்து சூரியன் காரணமாக உடலில் ஒரு வித சோம்பல் தன்மை நிலவும். பகைவர்களின் தொந்தரவும் இருக் கும். 4ஆம் இடத்து புதன் காரணமாக தேவைக்கு பணம் வந்து சேரும். குடும்பத்தாலும் ஓரளவு ஆறுதல் கிடைக்கும். 4ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக இன சன உறவினரின் ஆதரவும் கிடைக்கும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.